Monday 30 July 2018

ஸ்கோப் கருவிகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
தொலைவில் உள்ள பொருட்களை காண - டெலஸ்கோப்

சிறு பொருட்களை பெரிதாக்கி காட்ட - மைக்ராஸ்கோப்

நிறமாலையைக் காண - ஸ்பெக்ட்ராஸ்கோப்

புதுவகையான டிசைன்களை உருவாக்க - கலைடாஸ்கோப்

மிகக்குறைந்த வெப்பநிலையை அளவிட - கிரையாஸ்கோப்

அச்சிட்ட படங்களைத் திரையில் விழச்செய்ய - எபிடாஸ்கோப்

மேகங்களின் திசை, உயரம் அறிய - நீபோஸ்கோப்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சைவ சித்தாந்தம்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கடவுளை ‘பதி’ என்றும், உயிர்களை ‘பசு’ என்றும், உயிர்கள் இறைவனை அடையத் தடையாக இருக்கும் ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை, ‘பாசம்’ என்றும் சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது.

சைவ சித்தாந்தம் வேதங்களைவிட, ஆகமங்களையே முக்கிய பிரமாண நூல்களாக கொண்டுள்ளது என்பர். சைவ ஆகமங்களின் எண்ணிக்கை 28, அவற்றுள் 10 சிவனாலும், 18 சிவஞானிகளாலும் ஆக்கப்பட்டவை என்று கொள்வது மரபு.

சைவ சித்தாந்தக் கருத்துகளைப் பன்னிரண்டு சூத்திரங்களில் கூறும் நூல், மெய்கண்டர் எழுதிய சிவஞான போதம். இந்த நூல் ரவுரவ ஆகமத்தின் மொழி பெயர்ப்பு என்று கூறுவோரும் உண்டு. அதை மறுப்போரும் உண்டு.

பதி என்னும் இறைவனின் ஐந்தொழில்களாக படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளலை கூறுகிறது சைவசித்தாந்தம். பசு என்னும் ஆன்மா, சகல அவத்தை, சுத்த அவத்தை, கேவல அவத்தை ஆகிய மூன்று அவத்தை நிலைகளை கொண்டிருப்பதாகவும் அது குறிப்பிடுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு மார்க்கங்கள் மூலம் உயிர்கள் அவத்தையிலிருந்து விடுபட முடியும் என்றும், அப்படி அவத்தை நீங்கிய உயிர்கள் சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய நான்கு பலன்களைப் பெறும் என்றும் சைவ சித்தாந்தம் விளக்குகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குட்டிகளின் பெயர்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
நாம் அறிந்த பல உயிரினங்களின் குட்டிகளுக்கு ஆங்கிலத்தில் வேறு பெயர்கள் இருப்பது தெரியுமா?...

மாடு, யானை, திமிங்கல குட்டிகளுக்கு- calf என்று பெயர்

வெள்ளாட்டுக் குட்டி - kid

செம்மறி ஆட்டின் குட்டி - lamb

சிங்கம் புலி கரடிக்குட்டி - cub

பெண் பூனை - queen

பெண் நரி - vixen

பன்றிக்குட்டிகள் - litter

மான் குட்டிகள் - Fawn

ஆண் குதிரைக்குட்டி - colt

பெண் குதிரைக்குட்டி - Foal

முயல்குட்டி -Bunny

அன்னத்தி்ன் குஞ்சு - cygnet

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புகழ்பெற்ற புதுக்கவிதைகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

நா.பிச்சமூர்த்தி - காட்டு வாத்து, வழித்துணை

ஞானக்கூத்தன் - அன்று வேறு கிழமை

பசுவையா (சுந்தர ராமசாமி) - 104 கவிதைகள், நடுநிசி நாய்கள்,

அப்துல் ரகுமான் - நேயர் விருப்பம், பால்வீதி, ஆலாபனை, முட்டை வாசிகள்

நா.காமராசன் - கருப்புமலர்கள், தாஜ்மகாலும், ரொட்டித் துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் மு.மேத்தா - கண்ணீர்ப்பூக்கள், காத் திருந்த காற்று, நந்தவன நாட்கள்

வைரமுத்து - வைகறை மேகங்கள், ரத்ததானம், பெய்யென பெய்யும் மழை, இன்னொரு தேசிய கீதம், தமிழுக்கு நிறம் உண்டு, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல.

சிற்பி பாலசுப்பிரமணியம் - சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி

ஈரோடு தமிழன்பன் - தோணி வருகிறது, வணக்கம் வள்ளுவ

கவிஞர் வாலி, - அவதார புருஷன், பாண்டவர் பூமி

புவியரசு - கையொப்பம், இனி

கலாப்பிரியா - தீர்த்த யாத்திரை

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
வினா வங்கி

1. வானிலை மாறுபாடுகள் நிகழும் வளிமண்டல அடுக்கு எது?

2. ஒலிம்பிக்கை தடை செய்த ரோமானிய பேரரசர் யார்?

3. இலக்கியத்திற்கான சிறந்த படைப்புகளை கவுரவிக்கும் அமைப்பு எது?

4. ‘கற்பனவும் இனி அமையும்’ என்று பாடியவர் யார்?

5. கலைமாமணி விருது வழங்கும் அமைப்பு எது?

6. சூரிய கதிர்வீச்சை அளவிட உதவும் கருவி எது?

7. பேட்மின்டன் அணியில் எத்தனை பேர் இருப்பார்கள்?

8. இரு பண்பு கலப்பு சோதனையின் புறத் தோற்ற விகிதம் என்ன?

9. மிக வேகமாக வளரக்கூடிய மரம் எது?

10. இந்தியாவின் அரண்மனை நகரம் எனப்படுவது எது?

விடைகள் :

1. டிரபோஸ்பியர், 2. தியோடோசிஸ், 3. சாகித்ய அகாடமி, 4. மாணிக்கவாசகர், 5. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 6. பிரிஹீலியோ மீட்டர், 7. 5 பேர், 8. 9:3:3:1, 9. யூக்கலிப்டஸ், 10. கொல்கத்தா.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 23 July 2018

கண்டுபிடித்தவர்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கண்டுபிடித்தவர்கள் | நம் அன்றாட வாழ்விலும், அறிவியலிலும் பயன்படுத்தப்படும் சில முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை காண்போம்...

இடிதாங்கி - பெஞ்சமின் பிராங்கிளின்.

எக்ஸ் ரே - வில்ஹெம் ராண்ட்ஜென்.

தொலைநோக்கி, வியாழனின் துணைக் கோள்கள் - கலிலியோ கலிலி.

புவி ஈர்ப்பு விசை, இயக்க விதிகள் - ஐசக் நியூட்டன்.

சார்பியல் தத்துவம், ஒளி மின் விளைவு - ஐன்ஸ்டின்.

சூரிய குடும்பம், சூரிய மையக் கோட்பாடு - கோபர் நிக்கஸ்.

கோள் இயக்க விதிகள் - ஜோகன் கெப்ளர்.

அணு உட்கரு - ரூதர்போர்டு.

அணுக் கருக்கொள்கை - ஜான் டால்டன்.

எலக்ட்ரான் - ஜே. ஜே. தாம்ஸன்.

புரோட்டான் - கோல்ஸ்டீன்.

நியூட்ரான் - சாட்விக்.

மிதத்தல் விதிகள் - ஆர்க்கிமிடிஸ்.

மின்காந்த விளைவு - ஒயர்ஸ்டட்.

மின்காந்த தூண்டல் - மைக்கேல் பாரடே

இயற்கை கதிரியக்கம் - ஹென்றி பெக்கோரல்

குவாண்டம் கொள்கை - மாக்ஸ் ப்ளாங்க்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நோய்களின் அறிவியல்...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
நோய்களின் அறிவியல்...பயோரியா பாதிப்பின் தன்மையை காட்டும் படம்
மனிதர்களை அதிகமாக பாதித்த நோய்களையும், அந்த நோய்கள் குறித்த சில விஷயங்களையும் காண்போம்...

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படுவது - கல்லீரல்.

கிட்டப்பார்வை - மையோபியா.

தூரப்பார்வை - ஹைபர் மெட்ரோபியா.

பற்களை பாதிப்பது - பயோரியா

ஈறு வீங்குவது - ஜிஞ்சிவைடிஸ்.

காலராவுக்கு காரணமான பாக்டீரியாவின் பெயர் - விப்ரியோ காலரே.

வெறிநாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தவர் - லூயி பாஸ்டர்

காசநோயை ஏற்படுத்தும் பாக்டீரியா - மைக்கோ பாக்டீரியம் டியூபர்குலோசிஸ்.

தொழுநோயின் வேறு பெயர் - ஹென்சன்ஸ்

மலேரியாவை பரப்புவது - அனாபிலஸ் கொசுக்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அத்தியாவசிய அமிலங்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்த அமிலங்களையும், அதன் சில குணநலன்களையும் காண்போம்...

மழை நீரின் pH அளவு 5.6-க்கும் குறைவாக இருந்தால் அது அமில மழை.

அமில மழையில் கந்தகம் அமிலம், நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்கள் காணப்படுகின்றன.

சல்ப்யூரிக் அமிலம் வேதிப் பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.

மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL), ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் ராஜ திராவகம் கிடைக்கும்.

தங்கம் ராஜ திராவகத்தில் மட்டுமே கரையும்.

பினாப்தலின் தயாரிக்க உதவுவது - தாலிக் அமிலம்.

பீனாலின் வேறு பெயர் - கார்பாலிக் அமிலம்.

மயக்க மருந்து தயாரிக்க உதவுவது - பார்பியூரிக் அமிலம்.

கார் பேட்டரியில் உள்ள அமிலம் - சல்ப்யூரிக்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. காற்று வீசுவதற்கு முக்கியக்காரணம் என்ன?

2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

3. முதன் முதலில் உலக வரைபடத்தை தயாரித்தவர் யாா்?

4. அமெரிக்க அதிபரின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள்?

5. பாராளுமன்றத்தை எதிர்கொள்ளாமலே பதவிகாலம் முடிவுற்ற இந்திய பிரதமர் யார்?

6. ஒளி அலைகளின் நீளத்தை குறிக்கும் அலகு எது?

7. ஜெராக்ஸ் இயந்திரத்தில் பயன்படும் அலோகப்பொருள் எது?

8. நிலக்கரி சுரங்க விபத்துக்கு எந்த வாயு காரணமாக உள்ளது?

9. உலகில் வைரம் அதிகம் கிடைக்கும் நாடு எது?

10. மனித உடம்பிலுள்ள செல்களிலேயே மிகப்பெரியது எது?

11. மணிக்கு 350 கி.மீ வரை வேகமாக பறக்ககூடிய பறவை எது?

12. உணவுப்பாதையின் நீளம் எவ்வளவு?

13. கப்பல் செல்லும் திசை அறிய பயன்படுவது எது?

14. மலைக்கள்ளன் புதினத்தின் ஆசிரியர் யார்?

15. தரச்சான்று முத்திரையின் பெயர் என்ன?

விடைகள்

1. அழுத்த வேறுபாடு, 2. சுப்பீரியர், 3. எரெஸ்டோதீனஸ், 4. நான்கு ஆண்டுகள், 5. சரண் சிங், 6. ஆங்ஸ்ட்ராம், 7. செலினியம், 8. மீத்தேன், 9. தென்னாப்பிரிகா, 10. நியூரான், 11. பால்கன், 12. சுமார் 8 மீட்டர், 13. மரைனர்ஸ் காம்பஸ், 14. நாமக்கல் கவிஞர், 15. ஐ.எஸ்.ஐ.
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 16 July 2018

மரங்கள்: அறிவியல் தகவல்கள்...


* மரத்தின் வயதை கணக்கிடுவதற்கு பெயர் டென்டிரோகிரோனாலஜி.

* இந்தியாவின் தேசிய மரமான ஆலமரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் பெக்லென்சிஸ்.

* அரச மரத்தின் அறிவியல் பெயர் பிகஸ் ரிலிஜியோசா.

* வேப்பமரத்தின் அறிவியல் பெயர் அஜாடிரக்டா இண்டிகா.

* தமிழ்நாட்டின் மாநில மரம் பனை மரம்.

* தேக்கு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கர்நாடகம்.

* பூலோக கற்பகத்தரு எனப்படுவது பனைமரம்.

* தென்னை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது கேரளம்.

* இந்தியாவிலுள்ள மரங்களிலேயே மிகப்பெரியது ஆலமரம்.

* யூக்கலிப்டஸ் இலைகளை மட்டுமே உண்ணுவது கோலாகரடி.

* பட்டுப்புழு வளர்ப்பிற்கு பயன்படுபவை மல்பரி இலைகள்.

* உலகிலேயே மிகப்பெரிய மரத்தின் பெயர் செக்கோயா.

* பைன் மரத்திலிருந்து எடுக்கப்படுவது டர்பன்டைன் எண்ணெய்.

* சப்போடில்லா மரத்தில் பெறப்படுவது சூயிங்கம்.

*அஸாடிரக்டின் என்ற பூச்சி மருந்து வேப்பமரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.

* கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் வில்லோ.

* அசோக மரத்தின் அறிவியல் பெயர் சராகா இண்டிகா.

* மாமரத்தின் அறிவியல் பெயர் மாஞ்சிபெரா இண்டிகா.

* ஆரஞ்சு மரத்தின் அறிவியல் பெயர் சிட்ரஸ் சின்னென்சிஸ்.

* ஆப்பிள் மரத்தின் அறிவியல் பெயர் மாலஸ் புமிலா.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தலைசிறந்து விளங்கிய பிரபலங்கள்.

தலைசிறந்தவர்கள்...சில துறைகளில் தலைசிறந்து விளங்கிய பிரபலங்கள். இவர்களே அந்த துறையின் தந்தையர் களாக கருதப்படுகிறார்கள்.

ரெயில்வேயின் தந்தை ஜார்ஜ் ஸ்டீவன்சன்.

நகைச்சுவையின் தந்தை அரிஸ்டோபேனஸ்.

துப்பறியும் நாவல்களின் தந்தை எட்கர் ஆலன்போ.

அறிவியல் நாவல்களின் தந்தை ஜூல்ஸ் வெர்னே.

ஆங்கில கவிதையின் தந்தை ஜியாப்ரி சாஸர்.

ஆங்கில உரைநடையின் தந்தை பிரான்சிஸ் பேக்கன்.

இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமிபாபா.

இந்திய விண்வெளிஇயலின் தந்தை விக்ரம் சாராபாய்.

இந்திய சிவில் விமான போக்குவரத்தின் தந்தை ேஜ.ஆர்.டி.டாட்டா.

இந்திய ஏவுகணை தொழில்நுட்பத்தின் தந்தை ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.

சுற்றுச்சூழலியலின் தந்தை எர்னஸ்ட் ஹெக்கல்.

ஜியோமிதியின் தந்தை யூக்லிட்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இசை மேதைகள்...

சில இசை மேதைகளும்... அவர்கள் எந்த வகை இசையில் மேதைகள் என்பதையும் அறிவோம்...

விநாயக் ராம் - கடம்

பண்டிட் ரவிசங்கர் - சிதார்

காயத்திரி - வீணை

சிவ்குமார் சர்மா - சன்தூர்

விஷ்வமோகன் பட் - வீணை

எஸ்.பாலசந்தர் - வீணை

ஸ்ரீனிவாசன் - மாண்டலின்

கன்னியாகுமரி - வயலின்

பிஸ்மில்லாகான் - ெஷனாய்

ஹரி பிரசாத் சவுராசியா - புல்லாங்குழல்

சரன் ராணி பாக்லிவால் - சரோட்

அல்லாரக்கா - தபேலா

ஜாகீர் ஹூசேன் - தபேலா

காருகுறிச்சி அருணாசலம் - நாதஸ்வரம்

பாலக்காடு மணி ஐயர் - மிருதங்கம்.

குன்னக்குடி வைத்தியநாதன் - வயலின்

கதரி கோபால்நாத் - சாக்ஸபோன்

ராம் நாராயண் - சாரங்கி

சியா டாய்னுதின் டாகர் - வீணை

கோபால் தாஸ் - மிருதங்கம்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

வினாவங்கி

1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது?
2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்?
3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது?
4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது?
5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை?
6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது?
7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்?
8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது?
9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது?
10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது?
11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன?
12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது?
14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது?
15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்?

விடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச்சமச்சீர் மலர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 15 July 2018

நுண்ணுயிரியலின் தந்தை

மனிதர்கள் கொத்து கொத்தாக நோய்களால் செத்துப் போவது கடவுள் தரும் தண்டனை என பல காலம் நம்பிக்கொண்டு இருந்தனர் மக்கள். ராபர்ட் ஹூக் நுண்ணுயிரிகளை மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும், இந்த கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் தான் நோய்களுக்கு காரணம் என யாரும் நினைக்கவில்லை. இவற்றுக்கெல்லாம் விடை கண்ட மாபெரும் மேதை தான் லூயி பாஸ்டர். “நுண்ணுயிரியலின் தந்தை“ என்று அழைக்கப்படும் இவர், பிரான்சில் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். வேதியியல் படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டு கற்ற இவர், திராட்சைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பீர் சீக்கிரம் கெட்டுப்போவது ஏன் என்று, அதை விடாது ஆய்வு செய்தார். நொதித்தலுக்கு காரணமான நுண்ணுயிரிகளைக் கண்டறிந்தார். நோய்களை பரப்பும் நுண்ணுயிரிகளை கண்டறிந்து, நுண்ணுயிரி கோட்பாட்டை வெளியிட்டார். நொதித்தல் செயலுக்கு இந்த நுண்ணுயிரிகளே காரணம் என்றும் அவற்றை கண்ணால் காண முடியாது, மைக்ராஸ்கோப் கொண்டே அவற்றை காண முடியும் என்றும் சொன்னார். குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றை கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் என்றும் சொன்னார். பாலை கெடாமல் காக்க நன்றாக சூடாக்கி உடனடியாக குளிர வைக்கும் (பாஸ்சரைசேஷன்) இவர் உருவாக்கியது தான். வெறிநாய்க்கடி மிகப்பெரிய சிக்கலை அந்த காலத்தில் உருவாக்கி இருக்கிறது. வெறிநாய் கடித்தால் அந்த நாயை போலவே நடந்து கொண்டு, நீருக்கு பயந்து ஒடுங்கி இருந்து, பரிதாபமாக மக்கள் இறந்து போனார்கள். நன்றாக பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடுபோட்டு சதையை கொத்தாக வெட்டி எடுத்தல் என ரத்தம் உறைய வைக்கும் முறைகள் அந்த நோயை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டன. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. பாஸ்டர் பல நாய்களின் பின்னால் உயிரை பணயம் வைத்து திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்கு காரணம் என்று உணர்ந்தார். நாயின் உமிழ் நீரை மருந்தாகப் பயன்படுத்தி, நாய்க்கடியால் தாக்கப்பட்டு பதினான்கு இடங்களில் கடிபட்டிருந்த ஜோசப் மிஸ்டர் என்ற ஒன்பது வயதுச் சிறுவனின் உடலில் செலுத்தி, பதினான்கு நாட்களில் அவனை குணப்படுத்தினார். அதன் பின்னர் ரேபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. மருத்துவர்கள் கையுறை அணிவது, அறுவை சிகிச்சை கத்திகளை ஸ்டெரிலைஸ் செய்வது ஆகியவற்றையும் அவர் வலியுறுத்தினார். உயிர் இழப்பை இதனால் அதிக அளவில் தடுக்க முடிந்தது. ஆந்த்ராக்ஸ் நோயும் மிகப்பெரிய சவாலாக இருந்தது. கால்நடைகள் மொத்தமாக செத்து விழுந்தன. அந்த நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கொன்று, மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் பாஸ்டர். ஐரோப்பா முழுக்க பட்டுப்புழுக்கள் செத்துக்கொண்டு இருந்தன. நோய் வாய்ப்பட்ட பட்டுப் புழுக்களை பிரித்து வையுங்கள் என்று அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட பட்டு உற்பத்தி மையங்கள் தப்பித்தன. இத்தாலி தேசத்து பட்டு உற்பத்தி நிறுவனத்துக்கு இவரது பெயரையே சூட்டினார்கள்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday 12 July 2018

வரலாற்றில் இன்று 12.07.2018

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
சூலை 12 (July 12) கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.
1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.
1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
1806 – 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.
1892 – மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.
1918 – ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
1975 – சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1993 – ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.
2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.

பிறப்புகள்

1730 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத்தியாளர் (இ. 1795)
1813 – கிளவுட் பெர்னாட், பிரெஞ்சு உடலியங்கியலாளர் (இ. 1878)
1817 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1862)
1854 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர் (இ. 1933)
1895 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1983)
1904 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர் (இ. 1973)
1909 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் (இ. 1961)
1935 – சத்தோசி ஓமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்
1952 – எசாம் சரஃப், எகிப்திய அரசியல்வாதி
1960 – ஏர்ல் குணசேகர, இலங்கை அரசியல்வாதி
1961 – சிவ ராஜ்குமார், இந்திய நைகர், பாடகர்
1965 – சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் துடுப்பாளர்
1978 – மிச்செல் ரோட்ரிக்வெஸ், அமெரிக்க நடிகை
1991 – ஜேம்சு ரொட்ரீகசு, கொலம்பிய கால்பந்து வீரர்
1997 – மலாலா யூசப்சையி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானியர்

இறப்புகள்

1804 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1755)
2006 – உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)
2012 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பி. 1967)
2012 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)
2012 – அலிமுத்தீன், பாக்கித்தானியத் துடுப்பாளர் (பி. 1930)
2013 – பிரான், இந்திய நடிகர் (பி. 1920)
2013 – அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கிரிபட்டி 1979).
விடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975).

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday 7 July 2018

முதன்மைகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1.முதன்மைகள்|முதல் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்

2.முதன்மைகள்|முதல் து.குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்

3.முதன்மைகள்|முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை

4.முதன்மைகள்|முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

5.முதன்மைகள்|முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி

6.முதன்மைகள்|முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்

7.முதன்மைகள்|முதல் பெண் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்

8.முதன்மைகள்|முதல் பெண் கமாண்டோ காளியம்மாள் 9.முதன்மைகள்|முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873)

10.முதன்மைகள்|முதல் தமிழ் நாளிதழ் சுதேசமித்திரன் (1829)

11.முதன்மைகள்|முதல் வானொலி நிலையம் சென்னை (1930)

12.முதன்மைகள்|முதல் இருப்புப்பாதை ராயபுரம்-வாலாஜா(1856)

13.முதன்மைகள்|முதல் வணிக வங்கி மதராஸ் வங்கி (1831)

14.முதன்மைகள்|முதல் மாநகராட்சி சென்னை (1688)

15.முதன்மைகள்|முதல் முதலமைச்சர் ர.சுப்புராயலு ரெட்டியார்

16.முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார்

17.முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் எம்.பக்தவச்சலம்

18.முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் தாரா.செரியன்

19.முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் பெண் துணை.மேயர் அகல்யா சந்தானம்

20.முதன்மைகள்|சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் சர்.பி.டி.தியாகராஜர்

21.முதன்மைகள்|நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்

22.முதன்மைகள்|கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ்.விஜயலட்சுமி

23.முதன்மைகள்|முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி

24.முதன்மைகள்|முதல் ஊமை படம் கீசகவதம் (1916)

25.முதன்மைகள்|முதல் பேசும் படம் காளிதாஸ் (1931)

26.முதன்மைகள்|முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அணுமின் நிலையங்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

இந்தியாவில் உள்ள முக்கிய அணுமின் நிலையங்கள் பற்றிய விவரம் வருமாறு...

தமிழ்நாடு - கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையம்

ஆந்திரா - கோவடா அணுமின் நிலையம்

கர்நாடகா - கைகா அணுமின் நிலையம்

ராஜஸ்தான் - மாஹி பன்ஸ்வாரா மற்றும் ராஜஸ்தான் அணுமின் நிலையம்

உத்தரப்பிரதேசம் - நரோரா அணுமின் நிலையம்

மேற்கு வங்காளம் - ஹரிபுர் அணுமின் நிலையம்

குஜராத் - காக்ரபார் மற்றும் மதிவிர்டி அணுமின் நிலையம்

மத்தியப்பிரதேசம் - சுட்கா அணுமின் திட்டம், பிம்பூர் அணுமின் திட்டம்

அரியானா - கோரக்பூர் அணுமின் நிலையம்

மராட்டியம் - ஜெய்தாபூர் மற்றும் தாராப்பூர் அணுமின் நிலையங்கள்


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முதல் நாவல்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
முதல் நாவல்கள்

பல்வேறு மொழிகளில் வெளியான முதல் நாவல்களும், அவற்றை எழுதிய ஆசிரியர்களும்...

தமிழ் - பிரதாப முதலியார் சரித்திரம், வேதநாயகம் பிள்ளை.

தெலுங்கு - ராஜசேகர சரித்திரா, கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலு.

மலையாளம் - குண்டலதா, அப்பு நெடுங்காடி.

கன்னடம் - முத்ரமஞ்சூசா, கெம்பு நாராயணா.

இந்தி - சேவாசதன், பிரேம் சந்த்.

வங்காளம் - ஆனந்தமடம், பங்கிம் சந்திரர்.

மராத்தி - யமுனா பர்யாதான், பாபா பதம்ஜி.

குஜராத்தி - சரஸ்வதி சந்திரா, கோவர்தன்ராம்.

அசாமி - பாகிரே ரோங் சாங், பித்தோரே குவாபாட்டூரி, ஹேமச்சந்திர பருவா.

ஒரியா - சதுர்பினோத், பிரஜநாத் பாட்ஜேனா.

சிந்தி - திலாரம், மிர்காலிச் பெக்கி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday 3 July 2018

கடந்த வாரம் | 03.07.2018

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code


எட்டுவழிச் சாலை: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம், சுற்றுச்சூழல், காட்டுயிர்களுக்குப் பாதிப்பில்லாமல் செயல்படுத்த ஆய்வுக் குழு அமைக்கவேண்டும் எனத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று நோட்டீஸ் அனுப்பியது. இந்தத் திட்டத்துக்குப் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆர். சுப்ரமணியன் அடங்கிய அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 12 அன்று ஒத்திவைத்தது.

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு
அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணாவை நியமனம் செய்து உச்ச நீதிமன்றம் ஜூன் 24 அன்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதைத் தொடர்ந்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 18 எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திலேயே நடைபெறும் என்று தெரிவித்த நீதிபதிகள், மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்று மூன்றாவது நீதிபதியாகச் சத்தியநாராயணாவை நியமித்தனர். அத்துடன், இந்த வழக்கை விரைவாக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.69.10-ஆக ஜூன் 28 அன்று கடும் வீழ்ச்சியடைந்தது. இதற்குமுன், 2016-ம் ஆண்டு நவம்பர் 24 அன்று இருந்த ரூ.68.86 என்பதுதான் மிகக் குறைவான ரூபாய் மதிப்பு. கடந்த வாரம், ரூபாய் மதிப்பு அடைந்த கடும் சரிவு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்ததுக்குக் காரணம். இந்த நிலை நீடித்தால், நாட்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, பணவீக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய உயர்கல்வி ஆணையம்
நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக் குழுவை நீக்கிவிட்டு உயர் கல்வி ஆணையம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஜூன் 27 அன்று தெரிவித்தார். இதன்படி, அமையவிருக்கும் உயர்கல்வி ஆணையம், கல்வி தொடர்பான விவகாரங்களை மட்டுமே நிர்வகிக்கும். நிதி மானியங்கள் வழங்குவது போன்ற பணிகள் மனிதவளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘1956 பல்கலைக்கழக மானியக் குழு சட்ட’த்தை நீக்கிவிட்டு ‘இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018’ கொண்டுவரப்பட இருக்கிறது. இது தொடர்பான தங்கள் கருத்துகளைக் கல்வியாளர்களும் பொதுமக்களும் ஜூலை 7-ம் தேதி மாலை 5 மணிவரை மனிதவளத்துறைக்கு அனுப்பலாம்.

பிரதமரின் பயணச் செலவு ரூ.355 கோடி
பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார். பிரதமரின் இந்த வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 355 கோடி செலவு செய்யப்பட்டிருப்பது தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலால் தெரியவந்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. செயற்பாட்டாளர் பீமப்பா, பிரதமர் அலுவலகத்திடம் இருந்து பெறப்பட்ட இந்தத் தகவலை ஜூன் 28 அன்று வெளியிட்டார். பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் பிரதமர் மோடி 165 நாட்களை வெளிநாட்டில் கழித்திருக்கிறார். இந்தத் தகவலில் பிரதமரின் உள்ளூர் பயணச் செலவுகள் குறிப்பிடப்படவில்லை.

பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா!
தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உலக நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை ஜூன் 26 அன்று வெளியிட்டது. இந்த ஆய்வில், உலகில் பெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது தெரியவந்ததுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானும் சிரியாவும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு, நடத்தப்பட்ட இதே ஆய்வில், இந்தியா நான்காவது இடத்தில் இருந்தது. பெண்களுக்கான சுகாதார நலன், பாலின வேறுபாடு, பாரம்பரிய வழக்கங்கள், பாலியல் குற்றங்கள், இதர குற்றங்கள், கடத்தல் போன்ற ஆறு காரணிகளின் அடிப்படையில் இந்தியா பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக இருப்பதாக வரையறுத்ததாகத் தெரிவித்திருக்கிறது தாமஸ் ராய்ட்டர்ஸ் நிறுவனம். ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் தவறானவை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகின் மிகச் சிறிய கணினி
உலகின் மிகச் சிறிய கணினியை அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்திருக்கின்றனர். 0.3 மில்லிமீட்டர் நீளத்தில் இந்தக் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓர் அரிசியின் அளவைவிட மிகச் சிறியதாக இருக்கிறது. இதற்குமுன், கடந்த மார்ச் மாதம் ஐ.பி.எம். நிறுவனம் 1 மில்லி மீட்டர் நீளத்தில் சிறிய கணினியை வடிவமைத்திருந்தது. தற்போது அதைவிட சிறிய அளவிலான கணினியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கின்றனர். இந்தக் கணினியில் அமைந்துள்ள ‘டெம்பரேச்சர் சென்சாரைப்’ பயன்படுத்திப் புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கின்றனர் மிச்சிகன் ஆராய்ச்சியாளர்கள்.

பாஸ்போர்ட் விண்ணப்பச் செயலி
மொபைல் ஃபோன் செயலியான ‘பாஸ்போர்ட் சேவா ஆப்’ மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஜூன் 26 அன்று தொடங்கிவைத்தார். பாஸ்போர்ட் சேவை நாளை முன்னிட்டு இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தச் செயலியின் மூலம் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால், காவல் துறையினர் சரிபார்த்து ஒப்புதல் அளித்த பிறகு, தபாலில் பாஸ்போர்ட் அனுப்பிவைக்கப்படும். அத்துடன், தற்போது நாட்டில் செயல்படும் 260 பாஸ்போர்ட் மையங்கள், அனைத்து மக்களவை தொகுதிகளுக்கும் ஒன்றாக விரிவாக்கம் செய்யப்படும் என்றும் மத்திய அமைச்சர் சுஷ்மா தெரிவித்தார்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday 2 July 2018

தேதிகள் சொல்லும் சேதிகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
ஜனவரி முதல் வாரம், - சாலை பாதுகாப்பு வாரம்.

ஜனவரி 12 - தேசிய இளைஞர் தினம்,

ஜனவரி 25 - தேசிய வாக்காளர் தினம்

ஜனவரி 30 - தேசிய தியாகிகள் தினம்

பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம்

மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்

மார்ச் 21 - இரவும் பகலும் சம நேரம் கொண்ட தினம்

மார்ச் 21 - உலக வன நாள்

மார்ச் 22 - உலக தண்ணீர் தினம்

ஏப்ரல் 22 - பூமி தினம்

ஏப்ரல் 23 - உலக புத்தக தினம்

மே 1 - சர்வதேச தொழிலாளர் தினம்.

மே 15 - சர்வதேச குடும்ப தினம்

மே 21 - பயங்கரவாத ஒழிப்புதினம்

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம்

செப்டம்பர் 8 - சர்வதேச எழுத்தறிவு தினம், கண்தான தினம்

செப்டம்பர் 16 - உலக ஓசோன் தினம்.

அக்டோபர் 1 - உலக முதியோர் தினம்

அக்டோபர் 2 - காந்தி ஜெயந்தி

அக்டோபர் 5 - சர்வதேச இயற்கை சீரழிவு தடுப்பு தினம்

அக்டோபர் 16 - உலக உணவு தினம்

நவம்பர் 10 - சர்வதேச அறிவியல் தினம்

டிசம்பர் 1 - உலக எயிட்ஸ் தினம்

டிசம்பர் 10 - மனித உரிமை தினம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

அகத்தியரும், அகத்தியமும்...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
அகத்தியர் தலைச்சங்கத்தின் தலைமைப் புலவர் என்றும், அகத்தியம் அவரெழுதிய நூல் என்றும் கூறுவர். அகத்தியர் என ஒருவர் இருந்ததில்லை என வாதிடுபவர்கள் உண்டு. அகத்தியர் பொதிகை மலைப்பகுதியல் தங்கி தமிழ் வளர்த்தவராக அறியப்படுகிறார். அகத்தியரை, பரிபாடல் ‘பொதியில் முனிவன்’ என்றும் , சிலப்பதிகாரம் ‘மாதவ முனிவன்’ என்றும், மணிமேகலை ‘அமர முனிவன்’ என்றும் குறிப்பிடுகின்றன. அகத்தியரின் பன்னிரு மாணவர்களான தொல்காப்பியர், அதங்கோட்டாசான், துராலிங்கன், செம்பூட்சேய், வையாபிகன், வாய்ப்பிகன், பனம்பாரன், கழாரம்பன், அவிநயன், பெரிய காக்கை பாடினி, நந்தத்தன், சிகண்டி ஆகிய பன்னிருவர் எழுதிய நூலே ‘பன்னிரு படலம்’ என கூறப்படுகிறது. அகத்தியம் கடல்கோளால் அழிந்ததாக சொல்லப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சூடான தகவல்கள்...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
சூடான தகவல்கள்...

* வெப்பத்தை அளவிட சென்டிகிரேடு, பாரன்கீட், கெல்வின் என்ற மூன்றுவித அலகுகள் பயன்படுகின்றன.

* மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.5டிகிரி பாரன்கீட் அல்லது 37 டிகிரி செல்சியஸ் அல்லது 310 கெல்வின்.

* நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் அல்லது 212 டிகிரி பாரன்கீட்,

* நீரின் உரைநிலை 0 டிகிரி செல்சியஸ் அல்லது 32 டிகிரி பாரன்கீட்.

* தெர்மாமீட்டர்களில் பாதரசம் பயன்படுகிறது.

* மிகக்குறைந்த வெப்பத்தை அளக்கும் கருவி ஆல்கஹால் தெர்மாமீட்டர்.

* மருத்துவ தெர்மாமீட்டரில் 35 டிகிரி சென்டிகிரேடு முதல் 42 டிகிரி சென்டிகிரேடு வரையிலான அளவுகள் பயன்படுத்தப்படுகிறது.

* சூடான நீரைவிட குளிர்ந்த நீர் அதிக வெப்பத்தை உட்கவரும்.

* ஆவியாதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது ரெப்ரிஜ்ரேட்டர் எனப்படும் குளிர்பதனப் பெட்டி.

* குளிர்சாதன அறையில் வெப்பநிலை 23.25 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 60-65 சதவீதம் என்ற அளவிலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மனித உடலில்...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
மனித உடலில்...

* மனித உடம்பில் கடினமான பகுதி -பல் எனாமல்.

* மனித உடம்பில் உயிர் உள்ளவரை வளர்வது -முடி, நகம்

* மனித உடம்பில் மிகப்பெரிய உறுப்பு -தோல்

* மிகப்பெரிய உள்ளுறுப்பு -கல்லீரல்

* மனித உடம்பில் ரத்த ஓட்டம் பாயாத -பகுதி கார்னியா

* மனித உடம்பில் சமநிலையை கட்டுப்படுத்துவது -வெஸ்டிபுலர் ஆர்கன்.

* பெரியவர்கள் உடலில் 65 சதவீதமும், குழந்தைகள் உடம்பில் 75 சதவீதமும் நீர் உள்ளது.

* மனித உடம்பில் அதிகம் காணப்படும் தனிமம் -ஆக்சிஜன்.

* மனித உடம்பில் அதிகம் காணப்படும் உலோகம் -கால்சியம்.

* மனித உடம்பில் மிக நீண்ட தசை -கார்டோரிஸ்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1. வானவில் எந்த திசையில் தோன்றும்?

2. தேசிய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

3. குட்டித் திருவாசகம் எனப்படுவது எது?

4. பிரேம் மாத்தூர் எதற்காக பெயர் பெற்றவர்?

5. சீனா எத்தனை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது?

6. சந்திர கிரகணம் எந்த நாளில் ஏற்படும்?

7. மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை எது?

8. தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்?

9. சலவைத் தூளில் உள்ள வாயு எது?

10. நீருக்கடியில் பேசும் குரலை கேட்கப் பயன்படும் சாதனம் எது?

விடைகள் :

1. சூரியனுக்கு எதிர்திசையில், 2. பீகார், 3. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, 4. முதல் பெண் விமான பைலட், 5. 13, 6. பவுர்ணமியில், 7. ரேயான், 8. வீரமாமுனிவர், 9. குளோரின், 10. ஹைட்ரோபோன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 1 July 2018

கல்விச்சோலை பொதுஅறிவுச் தகவல்கள் | KALVISOLAI TAMIL G.K -1

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1. ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளும், அவற்றை அறிய நாம் விடை தேட மேற்கொள்ளும் அனைத்து வகைச் செயல்பாடுகளுமே _______________ ஆகும்.
அறிவியல்
2. நாம் வாழும் இந்தப் பூமி, விண்வெளி, அதிலுள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை,
என விரியும் அறிவியலை ______________ என்கிறோம்.
இயற்பியல்
3. நாம் பயன்படுத்தும் பொருள்கள் எதனால் ஆனவை? உலோகமா? அலோகமா? தன்மை என்ன? நெடி என்ன? மணம் என்ன? சுவை என்ன? அமிலமா, காரமா? என்று ஆராய்வதனை _______________ என்கிறோம்
வேதியியல்
4. நம்மைச் சுற்றியுள்ள செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரனங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் - இப்படி உயிருள்ளவைப் பற்றிய படிப்பிற்கு பெயர் என்ன?
உயிரியல்
5. செடி கொடிகள், மரங்கள் பற்றி கற்பது _______________ எனப்படும்
தாவரவியல்
6. விலங்குகளைப் பற்றி கற்பது _______________ எனப்படும்.
விலங்கியல்
7. உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பியே உள்ளன?
தாவரம்
8. விவசாயம் என்பது ஓர் ____________ ஆகும்.
அறிவியல்
9. மருத்துவக் குணம் நிறைந்த தாவரங்களை நாம் _______________ என்று சொல்கின்றோம்.
மூலிகைகள்
10. சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை எது?
தூதுவளை
11. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை எது?
கீழாநெல்லி
12. வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை எது?
வேம்பு
13. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை எது?
நெல்லிக்காய்
14. சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது?
துளசி
15. வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது?
ஓமவல்லி
16. வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது?
வசம்பு
17. கிருமி நாசினி, உணவுக்காகவும் பயன்படும் மூலிகை எது?
மஞ்சள்
18. பசியைத் தூண்டும், செரிமான மின்மையை நீக்கும் மூலிகை எது?
பிரண்டை
19. செரிமானக் கோளாறுகளைக் நீக்கும் மூலிகை எது?
இஞ்சி
20. தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை எது?
மிளகு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE