Monday 24 February 2020

பெட்ரோலியம்

படிம எரிபொருட்களில் முக்கியமானது பெட்ரோலியம். திரவத் தங்கம் என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது பெட்ரோலியம். படிவுப் பாறைகளில் இருந்து பெட்ரோலியம் (கச்சாஎண்ணெய்) பெறப்படுகிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் பல்வேறு பொருட்களில் ஒன்றுதான் பெட்ரோல் எனப்படும் முக்கிய எரிபொருள். நம் நாட்டிலும் உலகின் பல்வேறு நாடு களிலும் முக்கிய வாகன எரிபொருளாகவும், இன்னும் பல்வேறு பயன்பாட்டிற்கும் உதவும் முக்கிய எரிபொருளாக இருக்கிறது பெட்ரோல்.

அசாம் மாநிலத்தில் உள்ள ‘டிக்பாய்’ என்ற இடத்தில்தான் இந்தியாவில் முதன் முதலாக பெட்ரோலியம் கண்டு பிடிக்கப்பட்டது. 1867-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் 4 ஆயிரம் மில்லியன் டன் பெட்ரோலிய வளம் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.

குஜராத்தின் காம்பே வளைகுடாவில் கலோல் என்ற இடத்திலும், அங்கலேஸ்வர், லூனேஜ், ஆகிய இடங்களிலும், மகாராஷ்டிராவில் மும்பை கடற்கரை பகுதியிலும், பேசீன் பகுதியிலும் பெட்ரோலிய எண்ணெய் வயல்கள் உள்ளன. தமிழகத்தில் குறைந்த அளவில் எண்ணெய் வளம் காணப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. தற்போது தூத்துக்குடியிலும் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் நிறுவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments: