Monday 16 December 2019

புதுமை விஞ்ஞானி

அறிவியல் உங்களுக்கு விருப்பமான பாடமா? இங்கே ஒரு விஞ்ஞானியைப் பற்றிய குறிப்புகள், விடுகதைபோல கொடுக்கப்படுகிறது. அவற்றைக்கொண்டு அந்த விஞ்ஞானியை உங்களால் அடையாளம் காண முடிகிறதா? அவரைப் பற்றிய முக்கிய குறிப்புகள் உங்களுக்குத் தெரியுமா?

விஞ்ஞானி விடுகதை:

* நான் எம்.ஜி.கே. என்று பிரபலமாக அறியப்படுகிறேன்.

* குழந்தைகள் ‘கோகு தாத்தா’ என்று செல்லமாக அழைத்தார்கள்.

* நான் ஒரு விஞ்ஞானி என்றாலும் கல்வி பயிற்றுவிப்பாளராக, சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் அறியப்படுகிறேன்.

* ஆற்றல் துகள்கள் ஆய்வில் ஈடுபட்டேன்.

* நீருக்கு அடியில் இருந்து நீர்மின்சாரம் உற்பத்தியாகும் சிறப்பு அணை திட்டத்தை நிர்மாணித்து புகழ்பெற்றேன்.

விடை:

பேராசிரியர் மாம்பில்லிகலத்தில் கோவிந்த குமார் மேனன்.

வாழ்க்கை குறிப்புகள்:

* கோவிந்த குமார் மேனன், மங்களூருவில் 1928-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி பிறந்தார்.

* வித்தியாசமான திறமைகள் கொண்ட விஞ்ஞானி இவர்.

* 1966-ம் ஆண்டு அவர் டி.ஐ.எப்.ஆர். அமைப்பின் இயக்குனராக பொறுப்பேற்றார்.

* அப்போது பிளாஸ்டிக் பலூன்களை காமா கதிர் ஆராய்ச்சிக்காக விண்ணுக்கு அனுப்பினார். அவை ஸ்டிரடோஸ்பியர் அடுக்கில் மிதந்தபடி ஆராய்ச்சி செய்தது. அது இந்தியாவின் விண்வெளி ஆய்வு வரலாற்றின் சிறப்பான கட்டமாக போற்றப்பட்டது.

* அவர் கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க சுரங்கத்திற்குள், நிலத்தடி இயற்பியல் ஆய்வு கூடத்தையும் உருவாக்கி சாதனை படைத்தார். இங்கு மியூசான், நியூட்ரினோ போன்ற ஆற்றல் துகள்கள் பற்றி குறிப்பிடத்தக்க ஆய்வுகள் நடத்தினார்.

* மேலும் கேரளாவின் அமைதி பள்ளத்தாக்கில் தண்ணீருக்கு அடியில் இருந்து நீர்மின்சாரத்தை உற்பத்தி செய்யும், நீர்மின் அணை திட்டத்தை செயல்படுத்தி காட்டினார். இந்த முயற்சியை அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தி, மேனன் சுற்றுச்சூழலியலாளர்களின் அன்புக்குரியவர் என்று புகழ்ந்தார்.

* 1971-78-ல் எலக்ட்ரானிக்ஸ் துறையின் செயலாளராக பொறுப்பு வகித்தபோது ஐ.பி.எம். நிறுவனம் இந்தியாவில் கால்பதிக்க தீவிர முயற்சி செய்தார். அது தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிகோலியதாக அமைந்தது.

* உயர் ஆற்றல் இயற்பியல், மின்னணுவியல், அணுசக்தி, விண்வெளி, சுற்றுச்சூழல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் போன்ற வேறுபட்ட பல அறிவியல் துறைகளில் ஏறத்தாழ சம அளவிலான சாதனைகளை படைத்தார். அத்தகைய அசாத்திய பல்துறை அறிவியல் மதிநுட்பத்தை அவர் பெற்றிருந்தார்.

* அறிவியல் இதழியலாளராகவும் திகழ்ந்தார். பல்வேறு அறிவியல் கட்டுரைகளை எழுதி உள்ளார். அறிவியல் சொற்பொழிவும் நிகழ்த்தி உள்ளார்.

* 1985-ல் பத்மவிபூஷண், 1968-ல் பத்மபூசண் விருதுகளை பெற்றார். மேலும் பல்வேறு கவுரவங்களையும் பெற்றிருக்கிறார்.

* அவர் தனது 88 வயதில், கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 22-ந்தேதி இயற்கை எய்தினார்.

No comments: