Tuesday 26 November 2019

முதல் பேரரசு

இந்தியாவின் முதல் பேரரசர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சந்திரகுப்த மவுரியர். மகதத்தை ஆண்ட நந்த வம்சத்தின் கடைசி மன்னராக இருந்தவர் தனநந்தர். இவர் தனது முதன்மை அமைச்சராக இருந்த கவுடில்யர் என்ற சாணக்கியரை ஒரு சந்தர்ப்பத்தில் அவமானப்படுத்திவிட்டாராம். அதனால் கோபமுற்ற சாணக்கியர், தனநந்தரை பதவியிலிருந்து அகற்றுவதற்கு சபதம் ஏற்றார். அவர் விளையாட்டு சிறுவனாக இருந்த சந்திர குப்தருக்கு பயிற்சி கொடுத்து வெற்றி வீரனாக்கினார் என்று வரலாறு கூறுகிறது.

தனநந்தரை வென்று மவுரிய வம்சத்தை நிறுவிய சந்திர குப்தர், தனநந்தருக்கும் முரா என்ற தாழ்ந்த குல பெண்ணுக்கும் பிறந்தவர் என்று கூறுவோரும் உண்டு. மவுரியர் என்பது சந்திர குப்தரின் தாயார் பெயரில் இருந்தோ, மயிலின் வடமொழிச் சொல்லான மயூர் என்பதில் இருந்தோ (சந்திர குப்தன், மயில் விற்கும் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால்) வந்திருக்க வேண்டும் என்பார்கள்.

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், அவருடைய மகனே உலகப் புகழ்பெற்ற அசோகர் ஆவார். சந்திரகுப்த மவுரியர், அலெக்சாண்டரின் தளபதி செல்யூகஸ் நிகேடரை போரில் வென்றார். பிருகத்ரதா, கடைசி மவுரிய மன்னராவார். அவர் கி.மு. 185-ல் புஷ்யமித்ர சங்கரால் கொல்லப்பட்டார்.

No comments: