Friday 4 October 2019

இந்தியாவிற்கு ஐரோப்பியர் வருகை

  • ஐரோப்பியரின் இந்திய வருகை நம்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும். 
  • இந்தியாவின் பெரும் செல்வ வளத்தைப் பற்றி வெனிசு நகர வர்த்தகரான மார்க்கோ போலோவின் குறிப்புகள் மூலம் ஐரோப்பியர் அறிந்திருந்தனர். 
  • பழங்காலத்திலிருந்தே இந்தியா மேலை நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்தது. 
  • இடைக்காலம் முழுவதும் இந்திய வணிகப் பொருட்களான வாசனைத் திரவியங்கள், குறிப்பிட்ட சில மருந்து வகைகள், உலோக வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள், பருத்தி மற்றும் பட்டு ஆடைகள், தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த கற்களுக்கு ஐரோப்பியச் சந்தைகளில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
  • இப்பொருட்கள் பெரும்பாலும் நிலவழி மூலமாக அல்லது ஒரு பகுதி நில வழியாகவும் மற்ற பகுதி கடல் வழியாகவும் ஐரோப்பாவைச் சென்றடைந்தன. 
  • கி.பி.1453-ஆம் ஆண்டு துருக்கியர் கான்ஸ்டான்டி நோபிளைக் (துருக்கியிலுள்ள தற்கால இஸ்தான்புல்) கைப்பற்றியதால் இப்போக்குவரத்திற்குத் தடைகள் ஏற்பட்டன. 
  • எனவே வழிவழியாக, தரைமூலம் கிழக்கு நாடுகளுடன் ஐரோப்பா செய்து வந்த வணிகவழி அடைப் பட்டது. 
  • அதனால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய வணிகர்கள் தங்கக் கிழக்கு நாடுகள் (Golden East) என்று அழைக்கப்பட்ட சீனா மற்றும் இந்தியா வர புதிய கடல்வழியினைக் கண்டுபிடிக்க முயன்றனர்.


No comments: