Monday 21 October 2019

வறுமை ஒழிப்புத் திட்டங்கள்

* ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் 1978-ல் கொண்டு வரப்பட்டது.

* சுய வேலைவாய்ப்புக்கான கிராமப்புற இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் 1979-ல் கொண்டு வரப்பட்டது.

* தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்- 1980.

* ஊரக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்திட்டம் 1982-ல் கொண்டு வரப்பட்டது.

* ஊரக நிலமற்றோர் வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் 1983.

* இந்திரா அவாஸ் யோஜனா - 1985.

* ஜவகர் ரோஜ்கார் யோஜனா - 1989

* பிரதம மந்திரியின் ரோஜ்கார் யோஜனா - 1993

* மில்லியன் கிணறுகள் திட்டம் - 1996

* கங்கா கல்யாண் யோஜனா - 1997

* சுவர்ண ஜெயந்தி கிராம சுவராஜ்கர் யோஜனா - 1999.

* பாரத் நிர்மாண் யோஜனா - 2005.

* தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டம் 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

* கிராமப்புற தொழிலாளர்களுக்கு வருடத்திற்கு 100 நாள் வேலை வழங்குவது இதன் முக்கிய நோக்கம்.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம் பிப்ரவரி 2, 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துடன் எஸ்.ஜி.ஆர்.ஒய், என்.எப்.எப்.டபுள்யு.பி. திட்டங்கள் இணைக்கப்பட்டன.

* விறகு அடுப்புகளை மாற்றும் எல்.பி.ஜி. எரிவாயு வழங்கும் உஜ்வாலா யோஜனா திட்டம் 2016-ல் தொடங்கப்பட்டது.

No comments: