Saturday 12 October 2019

2019-ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசு... எத்தியோப் பியா பிரதமர் அபி அகமத் அலி தேர்வு ...

2019-ம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசுக்கு எத்தியோப் பியா பிரதமர் அபி அகமத் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதி யியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அதன்படி 2019-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமத் அலி பெறுகிறார்.

அபி அகமது அலி அண்டை நாடான எரிட்ரியா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கை களாலும் எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை வளப் படுத்தவும், ஒளிமயமான எதிர் காலத்தை உருவாக்கவும் ஆற்றிய அரும்பணிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு நேற்று நார்வே தலை நகர் ஆஸ்லோவில் அறிவித்தது.

எத்தியோப்பியா - எரிட்ரியா நாடுகள் இடையே எல்லை பிரச் சினை காரணமாக நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இதன் காரணமாக 1998 - 2000 -ம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே போரும் ஏற்பட்டது. 20 ஆண்டு களாக நிலவி வந்த இரு நாடு களுக்கு இடையிலான மோதலைத் தீர்க்க எத்தியோப்பிய பிரதமர் அபி அகமத் அலி முயற்சி மேற் கொண்டார். இதன் காரணமாக கடந்த ஆண்டு மேற்கொண்ட அமைதி ஒப்பந்தத்தின் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

அபி அகமத் அலி கடந்த 2018-ம் ஆண்டில் எத்தியோப்பியா பிரதம ராக தேர்வு செய்யப்பட்டார். பல் வேறு சமூக சீர்திருத்த நடவடிக்கை களை எத்தியோப்பியாவில் எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து எத்தியோப்பியாவில் செல்வாக்கு மிக்க தலைவராக வளர்ந்து வருகிறார் அபி அகமத் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: