Monday 23 September 2019

பத்ம விருதுகளுக்கு இணையாக சர்தார் படேல் பெயரில் ஒற்றுமை விருது அறிவிப்பு

தேசத்தின் ஒற்றுமைக்கு அரும் பணியாற்றுபவர்களுக்கு சர்தார் வல்லபபாய் படேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படும். இது பத்ம விருதுகளுக்கு இணை யாகக் கருதப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது.

இரும்பு மனிதர் சர்தார் வல்லப பாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ம் தேதி தேசிய ஒற்றுமை தினமாகக் கொண்டாடப் படுகிறது. அவரது நினைவாக தேசிய ஒற்றுமை விருது நிறுவப் படும் என்று கடந்த ஆண்டு இறுதி யில் பிரதமர் மோடி அறிவித்தார்.

உள்துறை அமைச்சகம் வெளி யிட்ட அறிவிக்கையில் கூறியிருப்ப தாவது:

சர்தார் வல்லபபாய் படேலின் நினைவாக தேசிய ஒற்றுமை விருது நிறுவப்பட்டுள்ளது. தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு அரும் பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இது பத்ம விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும். இனம், பணி, பதவி, பாலின பாகுபாடின்றி தேசத்தின் ஒற்றுமைக்காக பாடுபடுபவர்களுக்கு விருது வழங்கப்படும். மரணத்துக்குப் பிறகும் இந்த விருது வழங்கப்படும்.

சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதின் பதக்கம் தாமரை மலர் வடிவில் இருக்கும். 6 செ.மீ. நீளம், 2 செ.மீ. அகலம், 4 செ.மீ. தடிமன் கொண்டதாக இருக்கும். வெள்ளி மற்றும் தங்கத்தில் பதக்கம் செய்யப்படும். சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது என்ற வார்த்தைகள் இந்தி மொழியில் பதக்கத்தின் மீது பொறிக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: