Friday 13 September 2019

நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள், விவசாயிகளுக்கான மாத ஓய்வூதியம் வழங்கும் திட்டம் ஜார்க்கண்டில் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள சிறு வியாபாரிகளுக் கும், விவசாயிகளுக்கும் மாத ஓய்வூ தியம் வழங்கும் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டில் நேற்று தொடங்கி வைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்தார். தலைநகர் ராஞ்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்த அவரை, ஜார்க்கண்ட் முதல்வர் ரகு வர்தாஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ராஞ்சியில் ரூ.465 கோடி செலவில் அமைக் கப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவைக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பின்னர், ஜார்க்கண்ட் உட்பட நாடு முழுவதும் அமையவுள்ள 462 ஏகலைவன் பள்ளிகளுக்கு காணொலி காட்சி முறையில் அவர் அடிக்கல் நாட் டினார். அதேபோல், ஜார்க்கண்டின் சாஹிப்கஞ்ச் நகரில் கங்கை நதி மீது அமைக்கப்பட்டிருக்கும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத் தையும் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, நாடு முழு வதும் உள்ள விவசாயிகளுக்கும், சிறு வியாபாரிகளுக்குமான ஓய்வூதியத் திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.

‘பிரதம மந்திரியின் லகு வியாபாரி மான் தன் யோஜனா' எனப் பெயரிடப் பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், சிறிய கடைகளை நடத்துபவர்கள், சுய தொழில் செய்பவர்கள், சில்லறை வியாபாரிகள் ஆகியோருக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறை வாக வர்த்தகம் செய்யும் வியாபாரி கள் (18 முதல் 40 வயதுக்குட்பட்ட) இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி யானவர்கள் ஆவர். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3 கோடி சிறு வியாபாரிகள் பயனடைவார்கள்.

விவசாயிகள் ஓய்வூதியத் திட்டம்

அதேபோல், பொருளாதாரத்தில் நலிவடைந்த விவசாயிகளுக்காக, ‘பிரதான் மந்திரி கிஸான் மான் தன் யோஜனா' என்ற ஓய்வூதியத் திட்டத் தையும் தற்போது மோடி தொடங்கி வைத்திருக்கிறார்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

‘ஊழலுக்கு எதிரான போராட்டம்'

இந்நிலையில், இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர், ராஞ்சியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:

ஒருகாலத்தில், ஊழல்வாதிகளின் கைகளில் நமது நாடு சிக்கியிருந்தது. அரசுத் துறை, தனியார் துறை என பாகுபாடு இல்லாமல் முறைகேடு களும், ஊழல்களும் மலிந்திருந்தன. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங் களை அதிகாரவர்க்கத்தினர் சுரண்டி வந்தனர்.

இந்தியாவின் இந்த தலைவிதியை மாற்றிக் காட்டுகிறோம் என மக்களுக்கு பாஜக வாக்களித்தது. எங்கள் மீது நம்பிக்கை வைத்து, கடந்த 2014-ம் ஆண்டு பாஜகவை ஆட்சிக்கட்டிலில் மக்கள் அமர வைத்தனர். அவர்களின் நம்பிக்கையை காப்பாற்றியதன் காரண மாக, தற்போது இரட்டிப்பு ஆதர வுடன் இரண்டாவது முறையாகவும் பாஜக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது.

தற்போது இந்த ஆட்சியில் 100 நாட்கள் கழிந்திருக்கின்றன. ஆனால், அதற்குள்ளாக நாட்டின் நலனுக்காக எண்ணற்ற சீர்திருத்தங்களையும், நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக, இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என நினைத்தவர்கள் எல்லாம் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்ற னர். அவர்கள் ஜாமீனுக்காக நீதி மன்றத்தை நாடி வருகின்றனர்.

ஊழலையும், தீவிரவாதத்தையும் பூண்டோடு ஒழிப்பதே பாஜக அரசின் குறிக்கோளாகும். அதற்கான நட வடிக்கைகளைதான், இந்த 100 நாட் களில் தொடங்கியிருக்கிறோம். தீவிர வாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, தீவிரவாத தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்துமே ஒரு திரைப் படத்துக்கான வெறும் முன்னோட்டம் மட்டும்தான். முழுமையான திரைப் படம் இனிதான் வெளியாகவுள்ளது.

இவ்வாறு மோடி தெரிவித்தார்.

No comments: