Tuesday 20 August 2019

சமீபத்திய செய்திகள் ஆகஸ்ட் 13-17

சிபிஐ-க்குத் தன்னாட்சி அதிகாரம்
ஆகஸ்ட் 13: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்குத் தன்னாட்சி அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் போல சிபிஐ-க்கும் அதிகாரம் வழங்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நிலவில் இறங்கப்போகும் சந்திரயான் 2
ஆகஸ்ட் 14: சந்திரயான் 2 விண்கலம், வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதை யிலிருந்து வெளியேறி, நிலவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 7 அன்று சந்திரயான் -2, நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹரிக்கோட்டாவிலிருந்து ஜூலை 22 அன்று சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது.

3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட வேலூர்
ஆகஸ்ட் 15: வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்தார். இதன்மூலம், தமிழ்நாட்டின் மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 1956, நவம்பர் 1 அன்று மாநிலமாகப் பிரிக்கப்பட்டதை நினைவுகூரும்விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 அன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் மறைவு
ஆகஸ்ட் 15: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57. அவர் இந்திய அணியில் 1988-90 வரை ஏழு ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். தமிழ்நாடு அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்திருக்கிறார்.

பாதுகாப்புப் படைத் தலைவர் பதவி
ஆகஸ்ட் 15: நாட்டின் முப்படைகளையும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) ஒரே தலைவரே நிர்வகிக்கும்படி, பாதுகாப்புப் படைத் தலைவர் பதவியை உருவாக்கவிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி 73-வது சுதந்திர நாள் உரையில் தெரிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரின்போது தெரிவிக்கப்பட்ட இந்தக் கருத்து தற்போது நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது. தற்போதைய ராணுவ தளபதியாக இருக்கும் பிபின் ராவத், முப்படைகளுக்கான பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாறும் இந்தோனேசியத் தலைநகரம்
ஆகஸ்ட் 16: இந்தோனேசியத் தலைநகரமான ஜகார்த்தா நகரம் ஒவ்வொரு ஆண்டும் 10 அங்குல அளவுக்கு மூழ்கிவருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் உலகின் வேகமாக மூழ்கிவரும் நகரங்களில் ஒன்றாக இந்நகரம் கணிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோ, தலைநகரத்தை ஜகார்த்தாவிலிருந்து போர்னியோ தீவுக்கு மாற்றுவதாக அறிவித்திருக்கிறார்.

தீவிரமடையும் ஹாங்காங் போராட்டம்
ஆகஸ்ட் 17: குற்றவாளிகள் எனச் சந்தேகப்படுபவர்களைச் சீனாவிடம் ஒப்படைக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் ஜூன் மாத இறுதியிலிருந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தற்காலிகமாக அந்த மசோதாவைக் கைவிடுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது. ஆனால், முழுமை யாக இந்த மசோதாவைக் கைவிட வேண்டும் என்று கோரி போராட்டக்காரர்கள் போராடி வருகிறார்கள். தற்போது, இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்திருக்கிறார்கள். 20,000-க்கும் அதிகமான ஆசிரியர்களும் மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday 11 August 2019

நூல்கள் ஆசிரியர்கள்

நூல்கள் - ஆசிரியர்கள்
1- சிலப்பதிகாரம்  - இளங்கோ அடிகள்
2- இராமாயணம் (மூலம்)  - வான்மீகி
3- இராமாயணம் (தமிழில்)  - கம்பர்
4- சீறாப்புராணம்  - உமறுப்புலவர்
5- பெரிய புராணம் சேக்கிழார்
6- மகாபாரதம்  - வியாசர்
7- மகாபாரதம் (தமிழில்) வில்லிபுத்தூர்
8-திருவாசகம்  - மாணிக்கவாசகர்
9- தேம்பாவணி, ஒப்பியலிலக்கணம்  - வீரமாமுனிவர்
10- மகாவம்சம் - மகாநாம்
11- பாஞ்சாலி சபதம் - சுப்ரமணிய பாரதியார்
12- காஞ்சிப் புராணம் - சிவஞான முனிவர்
13- நற்சிந்தனை - யோகர் சுவாமிகள்
14- நன்னூல் - பவணந்த முனிவர்
15- வெற்றிவேக்கை - ஆதிவீரராம பாண்டியன்
16- நல்வழி, நீதிநூல்கள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன் - ஒளவையார்
17- மனோன்மணீயம் - சுந்தரம்பிள்ளை
18- கீதாஞ்சலி - ரவீந்திரநாத் தாகூர்
19- மணிமேகலை - சீத்தலைச் சாத்தனார்
20- தொல்காப்பியம் - தொல்காப்பியர்
21- சூளாமணி - தோலாமொழித்தேவர்
22- திருப்புகழ் - அருணகிரிநாதர்
23- போரும் சமாதானமும் - லியோரோஸ்ரோப்
24- இலியட், ஒடிசி - ஹோமர்
25- நளவெண்பா - புகழேந்தி
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முக்கிய இயக்கங்கள்


  1. பிரம்ம சமாஜசம் - இராஜாராம் மோகன்ராய் (1825) 
  2. ஆரிய சமாஜம்- தயானந்த சரஸ்வதி (1875) 
  3. சுத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி 
  4. ராமகிருண இயக்கம் - சுவாமி விவேகானந்தர் (1897) 
  5. பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங் (1875) 
  6. பிரம்ம ஞான சபை - கர்னல் ஆல்காட், பிளவாட்ஸ்கி அம்மையார் 
  7. சுயராஜ்ய கட்சி - சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு 
  8. இந்திய ஊழியர் சங்கம் - கோபால கிருஷ்ண கோகலே 
  9. இந்திய தேசிய படை - நேதாஜி (1943) 
  10. பார்வர்டு பிளாக் - நேதாஜி (1939) 
  11. முஸ்லீம் லீக் - நவாப் சலிமுல்லா கான் (1906) 
  12. கிலாபத் இயக்கம் - முகமது அலி, சௌகத் அலி 
  13. அலிகார் இயக்கம் - சர் சையது அகமது கான் 
  14. பூமிதான இயக்கம் - வினோபாவே 
  15. சர்வோதய இயக்கம் - வினோபாவே 
  16. ஸ்டாத்வைதம் - ராமானுஜர் 
  17. அத்வைதம் - சங்கரர் 
  18. த்வைதம் - மத்வாச்சாரியார் 
  19. தீன் இலாஹி - அக்பர் ஏற்படுத்திய புதிய மதம் 
  20. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல் 
  21. பர்தோலி சத்யாகிரகம் - வல்லபாய் படேல் 
  22. நர்மதோ பச்சோ அந்தோலன் - மேதா பட்கர் 
  23. சிப்கோ இயக்கம் - பேடன் பௌவல் 
  24. செஞ்சிலுவை சங்கம் - ஹென்றிடுனான்ட் 
  25. கூட்டுறவு சங்கம் - ராக்டேல் முன்னோடிகள் 
  26. நுகர்வோர் இயக்கம் - ரால்ப்நேடார் 
  27. சமதர்ம பொருளாதாரம் - காரல் மார்க்ஸ் 
  28. நாசிச கட்சி - ஹிட்லர் 
  29. பாசில கட்சி - முசோலினி 
  30. சீக்கிய மதம் - குருநானக் 
  31. கிறிஸ்தவம் - இயேசுநாதர் 
  32. தப்லிக் இயக்கம் - மெளலான முகமது இலியாஸ் 
  33. இஸ்லாம் - முகமது நபி 
  34. கால்சா படை - குருகோவிந்த் சிங் 
  35. சிவப்பு சட்டை இயக்கம் - கான் அப்துல் காபர் கான் 
  36. கதர் கட்சி - லாலா ஹர்தயாள் 
  37. சுதேசி கப்பல் கழகம் - வ.உ.சி. 
  38. சுயமரியாதை இயக்கம் - பெரியார் 
  39. பகுத்தறிவு இயக்கம் - பெரியார் 
  40. புத்த சமயம் - கெளதமபுத்தர் 
  41. சமண சமயம் - மகாவீரர் 
  42. கான்பூசியஸம் - கான்பூசியஸ் 
  43. ஒளவை இல்லம் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 
  44. சாரதா சதன் - பண்டித ராமாபாய்
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE