Thursday, 11 July 2019

தேசிய மலர் எது? அரசு விளக்கம்

எந்த மலருக்கும் தேசிய மலர் அந்தஸ்து வழங்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில் கூறியதாவது: சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2011-ம் ஆண்டில் புலிக்கு தேசிய விலங்கு அந்தஸ்து அளிக்கப் பட்டு அறிவிக்கை வெளியிடப் பட்டது. அதேபோல, தேசிய பறவையாக மயில் அங்கீகரிக்கப் பட்டு அறிவிக்கை வெளியானது. ஆனால், அந்த அமைச்சகத்தின் சார்பில் தேசிய மலர் என்ற அந்தஸ்து எந்த மலருக்கும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு எந்த அறிவிக்கையும் வெளியிடப் படவில்லை. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த ராய் கூறினார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Wednesday, 10 July 2019

உலகிலேயே அதிகம் காற்று மாசடையும் நாடு இந்தியா!


 • இந்தியாவில் தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலுக் கான பிரச்சாரத்தின் போது, பிரதான அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதோடு, உள் கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் உற்பத்தித் துறையின் விரிவாக்கம் ஆகியவை குறித்து வாக்குறுதி அளித் துள்ளன. CO, (கரியமில வாயு) உமிழ்வை பொறுத்த வரை ஏற்கனவே உலகளவில் மூன்றாவது நாடாக விளங்கும் இந்தியாவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? 
 • மத்திய இந்தியாவிலுள்ள சத்தீஷ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில், தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் பல்லாயிரக்கணக்கான டன் நிலக்கரியை அங்குள்ள திறந்தவெளி சுரங்கங்களில் இருந்து எடுத்து வருகின்றன. எந்நேரமும் அனல் மின் நிலையங்களில் எரிந்துக் கொண்டிருக்கும் நிலக்கரிகள், அந்த பகுதியில் இரவையும் பகலை போன்றே காட்டுகிறது. இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் 25 சதவீத்தை சத்தீஸ்கர் அளிக்கிறது, 
 • குறிப்பாக, இந்தியாவின் 70 சதவீத மின்சாரம் நிலக்கரியை எரிப்பதன் மூலம் பெறப்படுவதாக தரவுகள் தெரிவிக்கும் நிலையில், இந்திய அரசு அதை 55 சதவீதத்திற்கும் கீழாக குறிப்பிடுகிறது. 
 • இந்தியாவை பொறுத்தவரை அனல் மின்சாரத்திற்கே அரசு முக்கியத்துவம் அளிக்கிறது. அது தற்போதைக்கு குறையும் நிலையில் இல்லை என்று கூறுகிறார் கிரீன்பீஸ் அமைப்பை சேர்ந்த சுனில் டஹியா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பது சத்தீஸ்கரின் நிலைமை இவ்வாறிருக்க, அதன் அருகிலுள்ள ஆந்திரப்பிரதேச மாநிலத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. . 6,000 ஏக்கர் பரப்பளவில் 4.5 மில்லியன் சூரிய ஒளித் தகடுகள் பதிக்கப்பட்ட அந்த மின்னுற்பத்தி வளாகத்தில் மொத்தம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 
 • அதுமட்டுமின்றி, இதே போன்ற மின்னுற்பத்தி வளாகங்கள் அம்மாநிலம் முழுவதும் கட்டப்பட்டு வருகின்றன, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 70 ஜிகாவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக அரசின் தரவுகள் குறிப்பிடுகின்றன. உலகளவில் பார்க்கும் போது, இந்தியா காற்றாலை மின்சார உற்பத்தியில் நான்காவது இடத்தையும், சூரிய ஒளி மின்னுற்பத்தியில் ஆறாவது இடத்தையும் வகிக்கிறது. 
 • 2022-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மின்னுற்பத் தியை 175 ஜிகாவாட்ஸாக அதிகரிப்பதற்கு இந்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தொடரும் நிலக்கரியின் ஆதிக்கம் பாரிஸின் காலநிலை ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியில் CO, வெளியேற்றத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 33-35 சதவீதம் குறைக்க வேண்டியுள்ளது. 
 • உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை நாடான இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் 2.3 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்ஸைடு வெளியேற்றப் பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட ஐந்து சதவீதம் ஏற்றம் கண்டிருப்பதாக சர்வதேச ஆற்றல் நிறுவனம் கூறுகிறது. 
 • இந்தியாவின் மொத்த மின்னுற்பத்தியில் 90 சதவீதம் புதைப்படிமங்களை சார்ந்தே உள்ளது. குறிப்பாக, சுற்றுச்சூழலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நிலக்கரியே நான்கில் மூன்று மடங்கு மின்னுற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் மொத்த CO, உமிழ்வில் * அதன் எரிசக்தி துறை யினாலேயே வெளியிடப்படுகிறது. 
 • அது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்றே கருதப்படுகிறது, தேர்தலின்போது அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள், மேலதிக நிலக்கரி எரிப்பிற்கும், நச்சுவாயு உமிழ்வுக்கும், வழிவகுக்கும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர், 
 • "ஒருபுறம், புதுப்பிக்கதக்க ஆற்றல் பயன் பாட்டை அதி கரிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை அளிப்பதாக அரசியல் கட்சிகள் உறுதியளித்து வருகின்றன” என்று கூறுகிறார் எரிசக்தி மற்றும் காலநிலை கொள்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அரசுசாரா நிறுவனம் ஒன்றின் தலைமை செயலதிகாரி ஸ்ரீநிவாஸ் கிருஷ்ணசாமி. 2020-ஆம் ஆண்டிற்குள் நாட்டின் நிலக்கரி உற்பத்தி ஒரு பில்லியன் டன்னாக அதிகரிக்கப்படும் என்று இந்திய அரசு கூறுகிறது. - இதை தவிர்த்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளிலி ருந்தும் கூடுதலாக நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. 
 • 2017-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 2018-ஆம் ஆண்டு 190-யிலி ருந்து 200 மில்லியன் டன் களாக அதிகரித்துள்ளது. • இந்தியாவின் அதிகரித்து வரும் (O, உமிழ்விற்கு அனல் மின்நிலையங்கள் மட்டும் காரணமல்ல. 
 • நிலக்கரிக்கு அடுத்தபடியாக, ஸ்டீல் மற்றும் சிமெண்ட் உற்பத்தி துறைகள் அதிகப் படியான கார்பனை உமிழ்கின்றன, அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் சி மெ ண்ட் உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 
 • "இந்தியாவின் நச்சுவாயு வெளியீட்டில் சிமெண்ட் மற்றும் ஸ்டீல் ஆகியவை குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன. ஆனால், அதுகுறித்து யாரும் கவலைப் படுவதாக தெரியவில்லை " என்று கூறுகிறார் ஆற்றல் வள மேலாண்மை நிபுணரான அஜய் மதுர். வீணாகும் மின்சாரம்
 • தேவையை விட அதிகமான அளவு நாட்டில் மின்னுற்பத்தி செய்யப்படுவதாக மற்றொரு தரவு தெரிவிக்கிறது
 • 3,50,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய் யும் தி ற னு டைய மின்னுற்பத்தி நிலையங்கள் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கும் நிலையில், நாட்டின் மின்சார தேவை ஒருபோதும் 1,80,000 மெகாவாட்ஸை தாண்டியதில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மி ன் னுற் ப த் தி க் கு ம் , மி ன் சார தேவைக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவேளைக்கு நாட்டின் தவறான மின் பங்கீட்டு கொள்கைகளே காரணமென்று குற்றஞ்சாட்டப்படுகிறது. 
 • "மின் பகிர்வுத் துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத் துவதற்கு பெரியளவிலான முதலீடுகள் ஈர்க்கப்படாததால், இந்தியாவின் மின்னுற்பத்தி அதன் முழு திறனை அடைய முடிவதில்லை " என்று உலக வங்கியின் அறிக்கை ஒன்று தெரிவிக் கிறது. அதன் காரணமாகவே, நாடு மு ழு வ து மு ள் ள மி ன் னு ற் பத்தி நிலையங்கள் தனது மொத்த திறனை விட 40 சதவீதத்திற்கும் குறைவான மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. 
 • ஒருவேளை, நாட்டின் மின் பகிர்மானத் தில் மேம்பாடு எட்டப்படவில்லை என்றால், அனைத்து மாநிலங்களும் தனித்தனியே மின்னுற்பத்தி நிலையங் களை ஏற்படுத்த கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறைந்து வரும் உற்பத்தி செலவு சமீபகாலமாக, இந்தியாவில் நிலக்கரி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை விட, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூல ங் க ளின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் செலவீனம் மிகவும் குறைந்து வருவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 
 • "நாட்டின் மின் தேவையை குறைந்த செலவில் பூர்த்தி செய்வதற்குரிய வழியாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் விளங்குவதால், அதை நோக்கிய நகர்வு தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. "சூரிய ஒளியின் மூலமா கவோ அல்லது பிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் வாயிலாகவோ உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்குரிய கட்டமைப்புகள் சரிவர ஏற்படுத்தப்படவில்லை . 
 • "நிலையான மின்னுற்பத்தியை அனல்மின் நிலையங்களினால் மட்டுமே வழங்க முடியும். எனவே, அவற்றின் தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும் என்று கூறுகிறார் சத்தீஸ்கரி லுள்ள மின்னுற்பத்தி நிறுவனமொன்றின் தலைமை செயலதிகாரியான ஷைலேந்திர ஷக்லா, "பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின் படி, 00, உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 
 • இருந்தபோதிலும், அது போதுமான தாக இருக்காது என்று கிருஷ்ணசாமி கூறுகிறார். உலக வெப்பமயமாதலை 1.50 வைத்திருக்க வேண்டுமென்று பாரிஸ் காலநிலை கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டாலும், அது போதுமான அளவை விட குறைவாகவே இருக்குமென்று காலநிலை மாற்றத்திற்கான சர்வதேச அரசாங்க குழுவின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 
 • உலகிலேயே காற்று மாசு அதிகமாக உள்ள  20 நகரங்களில் 15 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகிலேயே மிகவும் மோசமான மாசடைந்த நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்லி இருந்துள்ளது. 
 • உலகிலேயே காற்று மாசு அதிகம் கொண்ட நகரம் என்ற பட்டியலில் டெல்லிக்கு அருகிலுள்ள குருகிராம் முதலிடத்தை பெற்றுள்ளது. குருகிராமை தொடர்ந்து இந்தியாவின் காசிபாத் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தானின் ஃபைசலாபாத் 3-ஆம் இடத்திலும் உள்ளன,
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 9 July 2019

17-வது மக்களவை தேர்தல்


 • இந்தியாவில் 17-வது மக்களவைக்கான கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட தேர்தல், மே 19-ஆம் தேதி வரை 7-கட்டங்களாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 20- ஆம் தேதி இறுதி கட்ட வாக்கு பதிவு முடிவடைந்தது.
 • நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 8039 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
 • மக்களவைத் தேர்தலில் பாஜக 435, காங்கிரஸ் 420 தொகுதிகளில் வேட்பாளர் களை களமிறக்கியது. 
 • தமிழகத்தின் வேலூர் மக்களவை தொகுதி தவிர நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 
 • மக்களவைத் தேர்தலில் பாஜக-காங்கிரஸ் 273 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன. 
 • மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உள்பட 7,928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
 • மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 7,928 வேட்பாளர் களில் 724 பேர் பெண்கள் ஆவர். 
 • வரலாற்றில் முதல்முறையாக காங்கிரஸை விட ஒரு கட்சி அதிக இடங்களில் போட்டியிட்டது இதுவே முதல்முறையாகும். 
 • மொத்தம் உள்ள 96 கோடி வாக்காளர் களில் பதிவான சுமார் 60 கோடி வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 
 • மகத் தான் இந்த தேர் தல் முடிவை இந்தியர்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தனர். 
 • நாடு முழுவதும் அமைக்கப்பட்டு இருந்த 4 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 
 • சென்னையில் 3 உள்பட தமிழகத்தில் 45 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடை பெற்றது. 
 • வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை தவிர பெரும்பாலான மாநிலங்களில் பாரதீய ஜனதாவும், அதன் கூட்டணி கட்சிகளுமே முன்னணியில் இருந்தன. 
 • இந்த முன்னணி தொடர்ந்து நீடித்தது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 352 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிப் பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 
 • இதில் பாரதீய ஜனதா மட்டும் 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. 
 • மத்தியில் ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பாரதீய ஜனதாவுக்கு அதைவிட கூடுதல் இடங்கள் கிடைத்து உள்ளன குஐராத், இமாச்சல பிரதேசம். 
 • உத்தர காண்ட், அரியானா மாநிலங் களிலும் மற்றும் தலைநகர் டெல்லி யிலும் பாரதீய ஜனதா அத்தனை தொகுதிகளையும் கைப்பற்றியது. 
 • உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்த ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 தொகுதி களையும் பாஜக கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது 
 • உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொ கு தி யில் 2- வது முறையாக போட்டியிட்ட பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற்றார். 
 • மோடி மீண்டும் வெற்றி பெற்றதற்கு உலக தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.) 
 • குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராம்நாத் சிங் (லக்னோ ), நிதின் கட்காரி நாக்பூர்) உள் ளிட்ட தலைவர்களும் வெற்றி வாகை சூடினார்கள். 
 • தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் பாரதீய ஜனதா கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தன, அதை உறுதிப்படுத்தும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்து உள்ளன. எனவே மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். 
 • முழு பெரும்பான்மையுடன், தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அல்லாத முதலாவது பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.
 • மத்தியில் அவரது தலைமையில் பாரதிய ஜனதா கூட்டணி 2-வது முறையாக அரியணை ஏறுகிறது. 
 • இதுபோல், சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பு 2 பிரதமர்கள்தான் இத்தகைய சாதனை படைத்துள்ளனர். 
 • ஜவகர்லால் நேரு, 1952, 1957, 1962 ஆகிய 3 நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர்ந்து முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார். 
 • அதன் பின்னர், அவருடைய மகள் இந்திரா காந்தி, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பிரதமர் பதவியில் அமர்ந்தார். 
 • அவர்களுக்கு பின்னர் மன்மோகன் சிங், அடுத்து தொடர்ந்து 2-வது தடவையாக முழு பெரும்பான்மை பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். 
 • கடந்த 2014-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போன்றே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்தன. 
 • இதில் காங்கிரஸ் மட்டும் 51 தொகுதிகளில் வெற்றிப் பெற்று இருக்கிறது. 
 • கடந்த தேர்தலில் வெறும் 44 தொகுதி களில் மட்டுமே வெற்றிப் பெற்ற தால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாத நிலையில் இருந்த காங் கிரசால் இந்த தடவையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாமல் போய்விட்டது. 
 • காங்கிரஸ் கூட்டணிக்கு கேரளா, தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்கள் மட்டுமே கைகொடுத்து உள் ளன. கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 18 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. 
 • அங்கு ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு 2 இடங்களே கிடைத்தன. பாரதீய ஜனதா ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை. 
 • உத்தர பிரதேச மாநிலம் அமேதி,. கேரள மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். 
 • ஆனால் அமேதி தொகுதியில் அவர், பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானியிடம் தோல்வி அடைந்தார், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி பின் தலைவர் சோனியா காந்தி வெற்றி பெற்றார்: 
 • தேசிய அளவில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரு கூட்டணிகளையும் சாராத பிற கட்சிகள் 95 தொகுதிகளில் வெற்றிப் பெற்று உள்ளன, இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மே 26- ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாது. 
 • மேலும் அன்றைய தினமே. நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்பார் என கூறப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த கூட்டணி தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில் புதுச்சேரி உள்ளிட்ட 38 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது. 
 • இந்த அணியில் 19 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக. 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோல் 10 இடங்களில் போட்டி.ட்ெட காங்கிரசுக்கு 9 இடங்கள் கிடைத்தன. 
 • இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூ னி ஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா 2 இடங்களும், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்தன. அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்ட ணியில் 20 தொகுதிகளில் களம் இறங்கிய அ.தி.மு.க, தேனி தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது. அந்த கூட்டணியில் இடம்பெற்ற பாரதீய ஜனதா, பாட்டாளி முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றிப் பெற்றுள்ளார்
 • 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற ராமநாத புரம் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் எஸ்.எம். சரிப் களம் இறக்கப்பட்டார், தராசு சின்னத்தில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 • 1 4 மாநில சட்டசபை தேர்தல் மக்களவை தேர்தலுடன் சேர்ந்து நடந்த 4 மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. 
 • அவற்றின் விவரம் வருமாறு: ஆந்திர பிரதேசம் ஆந்திர பிரதேசத்தில் மொத்தம் 175 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. 
 • அங்கு மெஜாரிட்டி. பெற 88 இடங்களில் வெல்ல வேண்டும் இந்நிலையில் அங்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 22 இடங்களில் மட்டும் வென்று ஆட்சியை இழந்துள்ளது. 
 • அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் வென்றுள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். 
 • அருணாச்சல பிரதேசம் அருணாச்சலப் பிரதேசத்தில்) மொத்தம் 60 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 31 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது பாஜக கட்சி 33 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 
 • அங்கு காங்கிரஸ் 3 இடங்களிலும், என் பிபி 4 இடங்களிலும், மற்ற கட்சிகள் 11 இடங்களிலும் வென்றது. 
 • சிக்கிம் • சிக்கிமில் மொத்தம் 32 இடங்களில் தேர்தல் நடந்தது. மெஜாரிட்டி பெற 17 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு சிக்கிம் குடியரசு முன்னணி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் அக்கட்சி தற்போது 15 இடங்களை வென்று ஆட்சியை இழந் துள் ள து. மாறாக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசா 
 • ஒடிசாவில் மொத்தம் 147 இடங்களில் தேர்தல் நடந்தது. அங்கு மெஜாரிட்டி. பெற 74 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கு தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. 
 • இந்த தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் 113 இடங்களில் வென்று மீண்டும் 5-வது முறையாக ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது. 
 • அங்கு காங்கிரஸ் 9 இடங்களையும், பா ஜ க 2 2 இடங்களையும் வென்றுள்ளது. மற்ற கட்சிகள் 2 இடங்களில் வென்றுள்ளது. 
தமிழ்நாடு சட்டசபை இடைத்தேர்தல்
 • தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக மொத்தம் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 13 இடங்களில் வென்றதன் மூலம் சட்டசபையில் திமுக புதிய பலம் பெற்றுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சமீபத்திய நிகழ்வுகள் - ஜூலை 2019

வெப்பமயமாதலால் வேலைவாய்ப்பின்மை

ஜூலை 1: உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியாவின் உற்பத்தி 2030-ம் ஆண்டுக்குள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) வெளியிட்டுள்ள அறிக்கைத் தெரிவித்துள்ளது. ‘வெப்பமான கோளில் பணியாற்றுவது’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், கடுமையான வெப்பம் காரணமாக இந்தியாவின் பணி நேரம், 2030-ம் ஆண்டுக்குள் 5.8 சதவீதம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் 3.4 கோடி முழுநேரப் பணிவாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சிறந்த இளம் பல்கலைக்கழகங்கள்

ஜூலை 2: உலகில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தொடங்கப்பட்ட இளம் பல்கலைக்கழகங்களில் சிறந்த 150 பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது குவாக்குவரெல்லி சைமண்ட்ஸ்(QS) நிறுவனம். முதல் 70-80 பல்கலைக்கழகப் பட்டியலில் இந்தியாவின் ஐஐடி-குவஹாத்தி இடம் பெற்றுள்ளது. 101-150 தரவரிசைப் பட்டியலில், தமிழகத்தின் அண்ணா பல்கலைக் கழகம், ஹரியாணாவின் ஜிந்தல் குளோபல் பல்கலைக்கழகம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

1,457 பேருக்கு 1 மருத்துவர்

ஜூலை 2: இந்தியாவின் 135 கோடி மக்கள்தொகைக்கு, 1,457 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதம் இருப்பதாக மத்திய இணை சுகாதார அமைச்சர் அஸ்வினி சவுபே மாநிலங்களவையில் தெரிவித்தார். உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி, 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். நாட்டில், 11.57 லட்சம் மருத்துவர்கள்தாம் மாநில மருத்துவ கவுன்சில்கள், இந்திய மருத்துவ கவுன்சில்களில் ஜனவரி 31 வரை பதிவுசெய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர்

ஜூலை 2: சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கிரிஸ்டின் லகார்த், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருக்கும் மரியோ திராகியின் பதவிக்காலம் அக்டோபர் 31 அன்றுடன் நிறைவடைவதால், புதிய தலைவராக கிரிஸ்டின் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக கிரிஸ்டின் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உலகின் வலிமையான ‘பாஸ்போர்ட்’

ஜூலை 2: 2019-ம் ஆண்டுக்கான உலகின் வலிமையான கடவுச்சீட்டுப் பட்டியலை ‘ஹென்லே’ அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளின் கடவுச்சீட்டுகளும் உலகின் வலிமையான கடவுச்சீட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 199 நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில் இந்தியா 86-ம் இடத்தைப் பிடித்துள்ளது. தென் கொரியா, பின்லாந்து, ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகள் இரண்டாம் இடத்திலும், டென்மார்க், இத்தாலி, லுக்ஸெம்போர்க் ஆகிய மூன்று நாடுகள் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன.

நீளமான மின்சார ரயில் சுரங்கம்

ஜூலை 3: நாட்டின் நீளமான மின்மயமாக்கப்பட்ட ரயில்வே சுரங்கம் ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தின் செர்லோபள்ளி, ராபுரூ ரயில் நிலையங்களுக்கு இடையில், 6.6 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீளமான மின்சார சுரங்கத்தைத் தெற்கு மத்திய ரயில்வே, ரூ. 460 கோடி செலவில் 43 மாதங்களில் கட்டிமுடித்துள்ளது. இந்தச் சுரங்கத்தால், கிருஷ்ணாபட்டினம் துறைமுகத்துக்கும், ஒபுலவரிப்பள்ளிக்கும் இடையிலான பயண நேரம் 10 மணி நேரத்திலிருந்து 5 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

பள்ளிக்குச் செல்பவர்களின் சதவீதம் குறையும்

ஜூலை 4: 2019-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2021 முதல் 2041-ம் ஆண்டுக்குள் 18.4 சதவீதம் குறையவிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 5-14 வயது வரையுள்ளவர்களின் மக்கள்தொகை வரும் இருபது ஆண்டுகளில் குறையும் என்று இந்த ஆய்வறிக்கைக் கணித்துள்ளது.

2019 மத்திய பட்ஜெட் தாக்கல்

ஜூலை 5: 2019-20 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுத்துறை வங்கிகளின் முதல், கடன் மேம்பாட்டுக்காக ரூ. 70,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பான் அட்டை, ஆதார் அட்டை இரண்டையும் ஒன்றுக்குப் பதில் மற்றொன்றைப் பயன்படுத்தும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. கல்வியைப் பொறுத்தவரை, வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவில் படிக்க ஊக்குவிக்கும் ‘இந்தியாவில் படிப்போம்’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின் மூலம் பள்ளி, உயர்கல்வியில் மாற்றங்கள் செய்யப்படும். உலகத்தரமான பல்கலைக்கழகங்களை உருவாக்க 2020-ம் நிதியாண்டில் ரூ.400 கோடி ஒதுக்கப்படும். தேசிய ஆராய்ச்சி நிறுவனம், ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்து, நிதி வசதி செய்துதரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் செயற்கை நுண்ணறிவு, இணையம், தரவுகள் உள்ளிட்ட புதிய திறன்களை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 6 July 2019

சார்க் மாநாடுகள்

தெற்காசிய நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பு சார்க் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கதேசத் தலைநகர் டாக்காவில் 2005-ல் நடைபெற்ற 13-வது சார்க் மாநாட்டில், தெற்காசிய நாடுகளைத் தவிர வேறு நாடுகளை, பார்வையாளர்களாக ஏற்க முடிவுசெய்யப்பட்டது. இன்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 9 நாடுகள் சார்க் அமைப்பின் பார்வையாளர்களாக உள்ளன. தெற்காசிய நாடுகளிடையேயான ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் 1940-களிலேயே தொடங்கிவிட்டது. ஏப்ரல் 1947-ல், டெல்லியில் நடந்த ஆசிய நாடுகளுக்கிடையேயான உறவு தொடர்பான மாநாடு, 1950-ல் பிலிப்பைன்ஸில் நடந்த பாகியோ மாநாடு, 1954-ல் இலங்கையில் நடந்த கொழும்பு அதிகாரங்கள் மாநாடு ஆகிய மாநாடுகளில் இதற்கான யோசனைகள் விவாதிக்கப்பட்டன. 1970-களின் இறுதியில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள், தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை ஏற்படுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தின. பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூட்டாகச் செயல்படுவது உள்ளிட்ட யோசனைகளை அந்த நாடுகள் முன்வைத்தன. 1981-ல் இலங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் உள்ளிட்ட 6 நாடுகளின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு இதுபற்றி விவாதித்தார்கள். தொடக்கத்தில் இந்தக் கூட்டமைப்பில் இடம்பெற இந்தியாவும் பாகிஸ்தானும் தயக்கம் காட்டின. தெற்காசியாவில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து தனக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக் கூடும் என்று இந்தியாவுக்குச் சந்தேகம் இருந்தது. அதேபோல், இந்த நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளின் வர்த்தகம் பரவுவதன் மூலம், தனக்கு பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் பாகிஸ்தானிடம் இருந்தது. எனினும், தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்கள், நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. 1983-ல் டெல்லியில் இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்ட மாநாட்டில், சார்க் அமைப்பை ஏற்படுத்துவது குறித்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது. 1985 டிசம்பர் 8-ல் டாக்காவில் சார்க் அமைப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டது.சார்க் -SAARC (South Asian Association for Regional Cooperation) என்பது தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பாகும்.இதில் மொத்தம் 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் . சார்க் ஆனது இந்தியா ,பாகிஸ்தான்,வங்காள தேசம்(Bangladesh),இலங்கை,நேபாளம்,மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் டிசம்பர் 8,1985 ல் உருவாக்கப்பட்டது . சார்க்கின் 8வது உறுப்பினர் நாடாக ஆப்கானிஸ்தான் டிசம்பர் 2007ல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சார்க்கில் மொத்தம் ஒன்பது நாடுகள் பார்வையாளர்களாக(Observers) உள்ளது. அவை 1.ஆஸ்திரேலியா 2.சீனா 3.ஐரோப்பிய யூனியன் 4.ஈரான் 5.ஜப்பான் 6.மொரீசியஸ் 7.மியான்மர் 8.தென் கொரியா 9.ஐக்கிய நாடுகள்(United States) சார்க் தலைமயிடம் நேபாளத்தில் உள்ள காத்மண்டு . சார்க் அமைப்பின் தற்போதய தலைவர் முகமது ஹாசன் மானிக் மற்றும் செயலாளர் அகமது சலீம்.
சார்க் மாநாடுகள் நடைபெற்ற நாடுகள் பற்றிய விவரங்கள்:   சார்க் மாநாடுகள்     நடைபெற்ற நாள்/வருடம் நடைபெற்ற இடம் / நாடு

   முதல் மாநாடு         டிசம்பர் 7-8 /1985   தாகா / வங்காள தேசம்

   இரண்டாம் மாநாடு      நவம்பர் 16-17/1986   பெங்களூரு/இந்தியா

   மூன்றாம் மாநாடு      நவம்பர் 2-4/1987     காத்மண்டு/நேபாளம்

   நான்காம் மாநாடு      டிசம்பர் 29-31 /1988 இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்

   ஐந்தாம் மாநாடு       நவம்பர் 21-23/1990   மேல்(Male)/மாலத்தீவு

   ஆறாம் மாநாடு         டிசம்பர் 21 /1991    கொழும்பு/இலங்கை

   ஏழாம் மாநாடு         ஏப்ரல் 10-11/1993    தாகா / வங்காள தேசம்

   எட்டாம் மாநாடு       மே 2-4/1995          புது டெல்லி /இந்தியா

   ஒன்பதாம் மாநாடு      மே 12-14/1997        மேல்(Male)/மாலத்தீவு

   பத்தாம் மாநாடு       ஜூலை 29-31/1998      கொழும்பு/இலங்கை

   பதினோராம் மாநாடு     ஜனவரி 4-6/2002       காத்மண்டு/நேபாளம்

   பனிரெண்டாம் மாநாடு   ஜனவரி 2-6/2004       இஸ்லாமாபாத்/பாகிஸ்தான்

   பதின்மூன்றாம் மாநாடு நவம்பர் 12-13/2005   தாகா / வங்காள தேசம்

   பதினான்காம் மாநாடு    ஏப்ரல் 3-4/2007     புது டெல்லி /இந்தியா

   பதினைந்தாம் மாநாடு   ஆகஸ்ட் 1-3/2008      கொழும்பு/இலங்கை

   பதினாறாம் மாநாடு      ஏப்ரல் 28-29/2010    மேல்(Male)/மாலத்தீவு

   பதினேழாம் மாநாடு     நவம்பர் 10-11/2011    அட்டு(Addu)/மாலத்தீவு   சார்க் இளைஞர் விருது (SAARC Youth Award) :   இவ்விருது தனி நபர்களுக்கு சுற்றுச்சூழல் , பேரழிவு பாதுகாப்பு

   போன்ற கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் தரும் வகையில் சார்க் குழு

   மூலம் வழங்கப்படுகிறது.   விருது பெற்றவர்கள் :   1997-சிறந்த சமூக சேவைக்கான விருது – திரு.Md.சுகுர் சலெக்(வங்காள

   தேசம்)[ Md.Sukur Salek]   1998-புதிய கண்டுபிடிப்புக்கான விருது -டாக்டர்.நஜ்முல் ஹஸ்னைன்

   ஸ் ஷா (பாகிஸ்தான்)[Dr. Najmul Hasnain Shah]   2001-South Asian Diversityக்காக கிரியேடிவ் புகைப் பட விருது

   பெற்றவர் -மிஷ்ஃபிகுல் ஆலம்(வங்காள தேசம்)[Mr. Mushfiqul Alam]   2002-சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது -டாக்டர் மசில் கான்

   (பாகிஸ்தான்) [Dr. Masil Khan]   2003-மருத்துவ கண்டுபிடிப்பு -திரு ஹசன் ஷேர் (பாகிஸ்தான்) [Mr.

   Hassan Sher]   2004-காசநோய் மற்றும் / அல்லது எச்.ஐ. வி / எய்ட்ஸ் பற்றிய

   விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சிறந்த பங்களிப்பு-திரு அஜிஜ்

   பிரசாத் பொவுட்யால்(நேபாளம்)[Ajij Prasad Poudyal]   2006-தெற்கு ஆசியாவில் சுற்றுலா ஊக்குவிப்புக்கான விருது -திரு

   சையத் ஜாபர் அப்பாஸ் நக்வி(பாகிஸ்தான்)[ Syed Zafar Abbas Naqvi]   2008-தெற்கு ஆசியாவில் சுற்றுலா பாதுகாப்புக்கான விருது -திருமது

   உஸ்வட்டா லியனகே தீபானி ஜெயந்தா(இலங்கை)[Uswatta Liyanage Deepani

   Jayantha]   2009-இயற்கை பேரழிவுகளுக்கு பின்னர் மனிதாபிமான பணிகளில் சிறந்த

   பங்களிப்பு – டாக்டர் ரவிகாந்த் சிங் (இந்தியா)[Ravikant Singh]   2010- சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்  பாதுகாப்புக்கான

   சிறந்த பங்களிப்பு -திருமதி அனோகா ப்ரிம்ரோஸ்

   அபெரத்னே(இலங்கை)[Anoka Primrose Abeyrathne]

   
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும்

முதல் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 487
இடம் : இராஜகிருகம்
கூட்டிய மன்னர் : அஜாதசத்ரு
தலைமை : மகாகசிபர்
இரண்டாம் புத்த சமய மாநாடு:
ஆண்டு : கி.மு. 387
இடம் : வைசாலி
கூட்டிய மன்னர் : காகவர்ணன் (எ) காலசோகன்
தலைமை : சபகமி
மூன்றாவது புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.மு. 251
இடம் : பாடலிபுத்திரம்
கூட்டிய மன்னர் : அசோகர்
தலைமை : உபகுப்தர்
நான்காம் புத்த சமய மாநாடு :
ஆண்டு : கி.பி. 100
இடம் : குண்டலிவனம் (காஷ்மீர்)
கூட்டிய மன்னர் : கனிஷ்கர்
தலைமை : வசுமித்திரர்
சமண (ஜைன) சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்
புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடங்களை நினைவில் வைத்துக்கொள்ள எளிய வழி.
(Shortcut)
ரவைபாகு
1) ர - ராஜகிருகம்
2) வை - வைசாலி
3) பா - பாடலிபுத்திரம
3) கு - குண்டலிவனம்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - 2019 ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை

CURRENT AFFAIRS IN TAMIL | கடந்து வந்த பாதை - 2019 ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை | போட்டித் தேர்வுக்கு பயன்படும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. 2019 ஜூன் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...


 • நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடை மசோதா புதிதாக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. (ஜூன் 21) 
 • ஊழலில் ஈடுபடும் ஊழியர்களையும், திறமையற்ற ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களின் பணிப்பதிவேடு களை ஆய்வு செய்து வருமாறு அனைத்துத் துறைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. (ஜூன் 21) 
 • நடப்பு 2019-2020 சந்தைப் பருவத்தில் (ஏப்ரல்- மார்ச்) இது வரை மத்திய, மாநில அரசு முகமைகள் 3.41 கோடி டன் கோது மையை கொள்முதல் செய்துள்ளன. (ஜூன் 21) 
 • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சவுதம்டனில் சிறிய அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி கடைசி வரை போராடி வெற்றி பெற்றது. இந்திய வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமி ‘ஹாட்ரிக்' சாதனை படைத் தார். (ஜூன் 22) 
 • இலங்கையில் அவசர நிலையை மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார். (ஜூன் 22) 
 • இந்திய பெண்கள் ஆக்கி அணி சாம்பியன் ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடந்த பெண்கள் உலக ஆக்கி தொடரின் இறுதிச்சுற்றுப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, ஆசிய சாம்பியன் ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் ஆனது. தொடரின் சிறந்த வீராங்கனையாக இந்திய கேப்டன் ராணி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், 2020-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் தகுதிப்போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்றது. (ஜூன் 23) 
 • ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் : ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதலை நடத்தி அந்நாட்டின் ஆயுதக் கட்டுப்பாட்டு கம்ப்யூட்டர்களை செயலிழக்கச் செய்தது. (ஜூன் 23) 
 • பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம் : காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஆவணங்கள், வரைபடங்களை அனுப்பி கர்நாடகம் ஒப்புதல் கேட்ட நிலையில், அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். (ஜூன் 24) 
 • ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா ராஜினாமா : ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா பதவி விலகினார். பதவிக்காலம் முடிய 6 மாதங்கள் இருக்கும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்தார். (ஜூன் 24) 
 • இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் கோடி வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ. 34 லட்சம் கோடி என்று ஆய்வுகளில் தெரியவந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. (ஜூன் 24) 
 • நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி குறைந்தது | மே மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 7.38 சதவீதம் குறைந்து 341 கோடி டாலராக இருந்தது. (ஜூன் 24) 
 • தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்க காவிரி ஆணையம் உத்தரவு: தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு 40.43 டி.எம்.சி. காவிரி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. (ஜூன் 25) 
 • அரைஇறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா உலகக் கோப்பை கிரிக்கெட்டில் லண்டன் லார்ட்சில் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா, முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. (ஜூன் 25) 
 • மோடியுடன் அமெரிக்க வெளியுறவு மந்திரி சந்திப்பு:டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ சந்தித்துப் பேசினார். இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்தினர். (ஜூன் 26)
 • பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி அதிகரிப்பு: நாட்டின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, மே மாதத்தில் ரூபாய் மதிப்பு அடிப்படையில் 7.85 சதவீதம் அதிகரித்தது. (ஜூன் 26) 
 • இந்தியாவுக்கு ஆசிய, பசிபிக் நாடுகள் ஆதரவு:ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியாவுக்கு ஆசிய- பசிபிக் குழுமத்தில் சீனா, பாகிஸ்தான் உள்பட 55 நாடுகளும் ஆத ரவு தெரிவித்தன. (ஜூன் 26) 
 • ஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு:‘ஜி-20' உச்சி மாநாட்டுக்காக ஒசாகா சென்றடைந்த பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை சந்தித் துப் பேசினார். இரு தலைவர்களும் மும்பை-ஆமதாபாத் இடையே புல்லட் ரெயில் இயக்குவதற்கு அதிவேக ரெயில் பாதை அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தி னர். (ஜூன் 27) 
 • இந்திய அணி 5-வது வெற்றி : உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மான்செஸ்டரில் நடந்த லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எளிதில் வீழ்த்திய இந்திய அணி 5-வது வெற்றியைப் பெற்றது. (ஜூன் 27)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 5 July 2019

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் - இந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்க‌ளவை ஓட்டெடுப்பில் ஓட்டளிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் ஓட்டுக்கள் சமநிலையில் இருக்கும் போது இவர் ஓட்டளிக்கலாம். தற்பொழுதய துணைக்குடியரசுத் தலைவர் மேதகு முகம்மது அமீத் அன்சாரி , இவர் ஆகஸ்டு 11, 2007 ஆண்டு இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆகத்து 7, 2012 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 63 ல் குறிப்பிட்டுள்ளபடி துணைக் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படுகின்றார். குடியரசுத் தலைவருக்கு கோரப்படும் அனைத்துத் தகுதிகளும் இவருக்கும் கோரப்படும். இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். குடியரசுத் தலைவர் எதிர்பாராத இறப்பின் நிமித்தம் அல்லது அவர் பதவிக்காலம் முடிவுற்ற நிலை அல்லது அவர் பணியிலிருந்து நீங்குதல் போன்ற காலங்களில் துணைக்குடியரசுத் தலைவரே குடியரசுத் தலைவர் பதவியில் மீண்டும் புதியக் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கும் வரையில் பதவி வகிப்பார்.

ஒவ்வொரு 5 ஆண்டிற்கு ஒரு முறை துணைக்குடியரசுத் தலைவர் பதவி முடிவுறும் சமயத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 67 பி ன் படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் அவருக்கு எதிரான தீர்மானத்தின் வாக்கெடுப்பில் (ஒட்டெடுப்பில்) வெற்றி பெற்றாலின்றி அவரை எவ்வகையிலும் நீக்கவியலாது.

துணைக்குடியரசுத் தலைவரின் ஊதியம் இந்திய அரசியலமைப்பில் வரையறுக்கப்படவில்லை. இருப்பினும் மாநிலங்களவைத் தலைவரின் அலுவல் நிலைக்காரணமாக அதற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுகின்றது.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாட்டில் அரசு பணியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியவர்

தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேதான் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட கடித வடிவ அறிக்கையில், ''10-8-2016 அன்று தமிழக சட்டப் பேரவையில், திமுக சார்பில் உரையாற்றிய கீதாஜீவன், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தியது திமுக அரசுதான் என்று கூறிய போது, அதிமுக அமைச்சர்கள் குறுக்கிட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு திட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்தது என்று மறுத்திருக்கிறார்கள். அப்போது எதிர்க்கட்சித் தலைவர், மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் தந்து தேர்தலை நடத்தியது திமுக ஆட்சிதான் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சில தகவல்களை இந்த நேரத்தில் நினைவுபடுத்தினால் பொருத்தமாக இருக்குமென்று கருதுகிறேன். ஊராட்சி ஒன்றியம், நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் 1990ஆம் ஆண்டு இறுதியில் திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பின்னர், கழக ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அதன் பின்னர் நடைபெற்ற ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்த அந்த ஆட்சியினர் முன்வரவே இல்லை. 1996ஆம் ஆண்டு, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பக்கம் 6 இல், "அடுத்து அமைக்கப்படும் திமுக அரசு, புதிய சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரிலேயே உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று உறுதி கூறுவதோடு, அது வெறும் அறிவிப்பாக இருந்து விடாமல், நிச்சயமாக நடைமுறைப்படுத்தப்படும் என்ற உறுதியை அளிக்கிறோம்" என்றும் குறிப்பிட்டிருந்தோம். அவ்வாறு அறிவித்ததற்கிணங்க 96ஆம் ஆண்டு அக்டோபர் 9 மற்றும் 12 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் மூலமாக அறிவிப்பு செய்யப்பட்டது. இதற்கான வேட்பு மனு செப்டம்பர் 3ந்தேதி முதல் 10ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி என்ற மூன்றடுக்கு முறையில் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 6 மாநகராட்சிகள், 104 நகராட்சிகள், 635 பேரூராட்சிகள், 12,584 ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு 96ஆம் ஆண்டு அக்டோபரில் 9 மற்றும் 12ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்துவதென்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டதுதான். மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்றும் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28இல் பெண்களுக்கு 10 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649இல் பெண்களுக்கு 242 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106இல் பெண்களுக்கு 35 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 என்றும் இப்படியே ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டன. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களின் முதல் பட்டியல் 8-9-1996 அன்று வெளியிடப்பட்டது. சென்னை மாநகர மேயர் பதவிக்கு மு.க.ஸ்டாலின், மதுரை மாநகர மேயர் பதவிக்கு பெ.குழந்தைவேலு, சேலம் மாநகர மேயர் பதவிக்கு டாக்டர் சூடாமணி ஆகியோர் பெயர்கள் முதல் பட்டியலிலேயே வெளியிடப்பட்டன. அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு ஜெயக்குமாரும், மதுரை மாநகராட்சிக்கு காளிமுத்துவும் நிறுத்தப்படலாம் என்று ஏடுகளில் எல்லாம் செய்திகள் வந்தன. அதைத் தொடர்ந்து 9-9-1996 அன்று சென்னை மாநகர மேயர் பதவிக்கு திமுக சார்பில் மு.க. ஸ்டாலினும், அதிமுக சார்பில் ஜெயக்குமாரும் மாநகராட்சி ஆணையரிடம் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். சென்னை மேயர் பதவிக்கு தமிழக ஜனதா கட்சித் தலைவராக அப்போதிருந்த சந்திரலேகாவும், மதிமுக சார்பில் எஸ்.எஸ். சந்திரனும் வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தனர். ஆனால் இரண்டொரு நாட்களிலேயே அதிமுக திடீரென ஒரு முடிவினை எடுத்தது. சென்னை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் ஸ்டாலினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, மேயர் தேர்தலில் தனது வேட்பாளராக ஜெயக்குமாரை அறிவித்து, வேட்பு மனுவையும் தாக்கல் செய்த பிறகு, அதிமுக வேட்பாளர் சென்னை மாநகர மேயர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், ஜனதா கட்சி வேட்பாளர் சந்திரலேகாவை அதிமுக ஆதரிக்கும் என்றும் இரண்டு கட்சிகளும் இணைந்து ஸ்டாலினை எதிர்த்தால் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்றும் திட்டமிட்டு அறிவித்தார்கள். தாங்கள் போட்டியிலிருந்து விலகியது மாத்திரமல்லாமல், திமுகவைத் தவிர்த்த ஏனைய கட்சிகளும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு ஜனதா வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமென்றும், திமுக வேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டுமென்றும் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். சந்திரலேகா மீது திராவகம் வீசியவர் ஜெயலலிதாதான் என்று வழக்கு தொடர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, தனது வேட்பாளருக்கு ஜெயலலிதா ஆதரவு தருகிறார் என்றதும் அதனை ஏற்றுக் கொண்ட விசித்திரத்தை அப்போது தமிழ்நாடு கண்டது. சென்னை மேயர் தேர்தலில் பிரச்சாரம் மிகவும் கடுமையாக இருந்தது. எதிர்க்கட்சிகள் எல்லாம் இணைந்து எப்படியாவது ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டுமென்ற வெறியோடு பணியாற்றிய போதிலும், ஸ்டாலினைப் பொறுத்தவரையில் கடுமையாக உழைத்தார். ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு கேட்பதிலேயே குறியாக இருந்தார். சென்னை மேயர் தேர்தல் நடைபெற்று இருபதாண்டுகளுக்குப் பின்னர் அந்தத் தேர்தல் நடைபெற்றதால் பிரச்சாரம் மிகவும் பரபரப்பாக இருந்தது. மேலும் முதல் முறையாக மேயரை வாக்காளர்களே நேரடியாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கின்ற முறை அப்போதுதான் நடைபெற்றது. ஸ்டாலின் மேயர் தேர்தலில் போட்டியிடுவது பற்றி பத்திரிகையாளர் சோ தனது துக்ளக் இதழில் "சென்னை மேயர் தேர்தலில் உங்கள் ஓட்டு யாருக்கு? ஏன்?" என்ற கேள்விக்கு பதில் அளித்த போது, "ஸ்டாலினுக்கு. அவருக்கு எதிராக நிற்பவர்களின் அணுகுமுறைகளைப் பார்க்கும்போது இருப்பதற்குள் நல்ல வேட்பாளர் ஸ்டாலின்தான் என்ற முடிவுக்கு நான் வருகிறேன். அவர், கருணாநிதியால் திணிக்கப்படுவதாகவும் நான் நினைக்கவில்லை. இருபதாண்டுகளாக அரசியலில் இருக்கிறார். கட்சியில் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இருமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இப்போதும்கூட மக்கள் ஆதரவிருந்தால்தான் அவர் மேயராக முடியும். ஆகையால் இதில் திணிப்பு என்ற பேச்சுக்கே இடமிருப்பதாக நான் நினைக்கவில்லை. தன்னுடைய தொகுதியில் அவருக்கு நல்ல பெயரே இருக்கிறது. மேயர் தேர்தலில் என் ஓட்டு அவருக்கே" என்று சோ எழுதியிருந்தார். 14-10-1996 அன்று உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணி அறிவிக்கப்பட்டன. திமுக, தமாகா கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தலைப் பொறுத்த வரையில் சென்னையில் மொத்தம் 155 இடங்களில், திமுக, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி 150 இடங்களிலும், அதிமுக 2 இடத்திலும், சுயேச்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றார்கள். ஏனைய மாநகராட்சிகளிலும் இதே போன்ற நிலைமை தான். அதுபோலவே தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 102 நகராட்சிகளில் திமுக 48 இடங்களிலும், தமாகா 28 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் கூட்டணி சார்பில் வெற்றி பெற்றன. திருநெல்வேலியில் மேயராக திமுக வேட்பாளர் உமா மகேசுவரியும் - சேலத்தில் மேயராக திமுக வேட்பாளர் டாக்டர் சூடாமணியும், கோவையில் மேயராக தமாகா வேட்பாளர் கோபாலகிருஷ்ணனும், திருச்சியில் மேயராக தமாகா வேட்பாளர் புனிதவள்ளியும் வெற்றி பெற்றார்கள். தமிழகத்தில் மொத்தம் உள்ள ஆறு மாநகராட்சிகளிலும் திமுக, தமாகா கூட்டணியின் வேட்பாளர்களே மேயர் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றனர். சென்னை மாநகராட்சி திமுகவின் பொறுப்பிலே இருந்த போதுதான், 1973ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நானே அதனைக் கலைப்பதாக பேரவையிலே அறிவித்தேன். அதே மாநகராட்சிக்கு 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மேயர் பொறுப்பையேற்றது. தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலேதான். அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி வகித்திடும் நிலை உருவானது. 1989இல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில், வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில்தான் நடைமுறைப் படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது. 1990இல் திமுக ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கி, தனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. சலுகைகள் வழங்கிடும் நலத்திட்ட உதவிகளில் பெண்களுக்கு முன்னுரிமை தரும் பல திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய திமுக ஆட்சியிலேதான், பெண்ணுரிமையைப் பறைசாற்றும் வகையில் இட ஒதுக்கீடு நிர்ணயம் செய்து, நிர்வாகத்திலும், உள்ளாட்சி மன்றப் பதவிகளிலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுப் பெண்ணின் பெருமை போற்றப் பட்டது. வரலாற்று உண்மைகள் இப்படியிருக்க, அதிமுகவினர் எதைப் பேசினாலும் ஆமோதித்து அனுமதி அளித்திடும் பேரவைத் தலைவரை வசதியாக வைத்துக் கொண்டு, உலகம் பிறந்ததும் எங்களால்தான், நதிகள் ஓடுவதும் எங்களால்தான், நிலா காய்வதும் எங்களால்தான், நெருப்பு சுடுவதும் எங்களால்தான் என்று என்ன பேசுகிறோம் என்று புரிந்து கொள்ளாமல் எதையெதையோ பேசி வானத்திற்கும் பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்! எத்தனையோ நிகழ்வுகளைக் கண்ட சட்டப்பேரவை, இதையும் மவுன சாட்சியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மக்களவையின் தொகுதிகளின் பட்டியல்

இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு மக்களவைத் தொகுதிக்கும் ஒவ்வொரு மக்களவை உறுப்பினர் வீதம் 543 உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது தவிர மேலும் 2 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நேரடியாக நியமிக்கப்படுகின்றனர். மொத்தம் 545

 1. ஆந்திரா (25)
 2. அருணாச்சல பிரதேசம் (2)
 3. அசாம் (14)
 4. பீகார் (40)
 5. சத்தீஸ்கர் (11)
 6. கோவா (2)
 7. குஜராத் (26)
 8. ஹரியானா (10)
 9. இமாச்சலப் பிரதேசம் (4)
 10. ஜம்மு-காஷ்மீர் (6)
 11. ஜார்க்கண்ட் (14)
 12. கர்நாடகா (28)
 13. கேரளா (20)
 14. மத்தியப் பிரதேசம் (29)
 15. மகாராஷ்டிரா (48)
 16. மணிப்பூர் (2)
 17. மேகாலயா (2)
 18. மிசோரம் (1)
 19. நாகாலாந்து (1)
 20. ஒடிசா (21)
 21. பஞ்சாப் (13)
 22. ராஜஸ்தான் (25)
 23. சிக்கிம் (1)
 24. தமிழ்நாடு (39)
 25. தெலுங்கானா (17)
 26. திரிபுரா (2)
 27. உத்தரபிரதேசம் (80)
 28. உத்தரகண்ட் (5)
 29. மேற்கு வங்கம் (42)

யூனியன் பிரதேச வாரியாக தொகுதிகள்

 1. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (1)
 2. சண்டிகர் (1)
 3. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி (1)
 4. தமன் மற்றும் டியு (1)
 5. லட்சத்தீவு (1)
 6. டெல்லியின் என்.சி.டி (7)
 7. புதுச்சேரி (1)
 8. பரிந்துரைக்கப்பட்டவர் (2)
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 2 July 2019

தமிழகத்தின் வண்ணத்துப்பூச்சியாக ‘தமிழ் மறவன்’ தேர்வு

தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘தமிழ் மறவன்’ வண்ணத்துப்பூச்சி இனங்களில் அதிவேக மாக பறக்கும் திறன் கொண்டது என்ப தால் கலாச்சாரத்தையும் வீரத்தையும் குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. இதுவே, மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்படவும் காரணமாக இருந்துள் ளது. ஒவ்வொரு நாடும், மாநிலமும் தங்களின் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் முறைகளுக்கு ஏற்ப அடையாளச் சின்னங் களை அறிவிப்பது வழக்கம். அதன்படி தமிழக அரசின் சின்னமாக வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம், மாநில விலங்காக நீலகிரி வரையாடு, மாநில பறவையாக மரகதப் புறா, மாநில மல ராக செங்காந்தள், மாநில மரமாக பனை, மாநில விளையாட்டாக சடுகுடு (கபடி) மாநில பழமாக பலா, மாநில நடனமாக பரதநாட்டியம் ஆகியவை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தமிழகத்தில் அதிகமாக வசிக்கக்கூடிய ‘தமிழ் மறவன்’ (tamil yeoman) என்ற வகை வண்ணத்துப்பூச்சியை, மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கலாம் என தமிழக வனத்துறையின் முதன்மை தலைமை வன பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின பாதுகாவலரிடம் இருந்து கடந்த ஜன.31-ம் தேதி அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த அரசு, ‘தமிழ் மறவன்’ வகை வண்ணத்துப்பூச்சியை தமிழகத்தின் மாநில வண்ணத்துப்பூச்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, கடந்த 26-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கன்னியாகுமரியில் அகத்தியர் மலை, மதுரையில் அழகர்மலை, பொள்ளாச்சியில் ஆனைமலை, கோவையில் கல்லார், நீலகிரியில் குன்னூர், கோத்தகிரி, கொடைக்கானலில் பேரிஜம், சேலத்தில் கொல்லிமலை, தேனியில் மேகமலை, சென்னையில் அண்ணா விலங்கியல் பூங்கா, திருச்சியில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உட்பட 32 இடங்கள், வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் வசிக்கக்கூடிய ‘ஹாட்ஸ்பாட்’ எனக் கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடங்களில் சுமார் 324 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வசிக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில்... இதேபோல உலகிலுள்ள மொத்த வண்ணத்துப்பூச்சிகளில் 36 வகையான வண்ணத்துப்பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. அதில் 5 வகை வண்ணத்துப்பூச்சிகளுக்கு தமிழ் என்ற அடைமொழியுடன் பெயரிடப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் ‘தமிழ் மறவன்’ வகை. Cirrochora thais எனும் அறிவியல் பெயருடைய இந்த வகை வண்ணத்துப் பூச்சிகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழக் கூடியவை. அதேபோல, தென்னிந்தியாவில் உள்ள மிகவும் அழகான,வண்ணமயமான வண்ணத் துப்பூச்சிகளுள் இதுவும் ஒன்று. இதுதவிர தமிழ் கலாச்சாரம், வீரத்தை குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளதாலும், மாநிலத்தின் மொழியை தனது பெயரில் சூடியுள்ளதாலும் இதை மாநில வண் ணத்துப்பூச்சியாக தேர்வு செய்யலாம் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் தற்போது அதற்கான அரசாணை வெளி யிடப்பட்டிருக்கிறது’’ என்றனர். கோவையைச் சேர்ந்த ஆக்ட் ஃபார் பட்டர்பிளைஸ் அமைப்பின் நிறுவனரான பி.மோகன் பிரசாத் கூறும்போது, ‘‘மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வு செய்வதற் காக தமிழக வனத்துறையின் ஐஎப்எஸ் அலுவலர்கள் சதீஷ், ஆனந்த் சிவஜோதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். மகாராஷ்டிராவில் புளூ மோர்மன், உத்தரகாண்ட்டில் காமன் பீகாக், கர்நாடகாவில் சதர்ன் பேர்டுவிங்க், கேரளாவில் மலபார் பாண்டடு பீகாக் ஆகிய இனங்கள் மாநில வண்ணத்துப்பூச்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ‘தமிழ் மறவன்’ வகையை அறிவித்துள்ளது. அதிவேகமாக பறந்து செல்லக்கூடிய இனம் என்பதால், வீரன் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு ‘தமிழ் மறவன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது’’ என்றார்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF