Tuesday 25 June 2019

முதல் இந்திய சுதந்திரப்போர்


  • இந்திய வரலாற்றில் 1857ஆம் ஆண்டு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதப்படுகிறது. 
  • இப்புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் படைவீரர்கள் கிளர்ச்சி' அல்லது 'சிப்பாய் கலகம்”என்றும் இந்திய வரலாற்று அறிஞர்கள் முதல் இந்திய சுதந்திரப்போர்” என்றும் வர்ணிக்கின்றனர். 
  • மக்களுக்கு ஏற்பட்ட மனக்கசப்பும், பல காலமாக தேக்கி வைக்கப்பட்டிருந்த துயரங்களின் வெளிப்பாடுமே, 1857 ஆம் ஆண்டு புரட்சியாக வெடித்தது எனலாம், 
  • 1857 ஆம் ஆண்டு படைவீரர்கள் கிளர்ச்சியின் போது இந்தியாவின் தலைமை ஆளுநராக
  • இருந்தவர் கானிங் பிரபு. 
  • இந்திய மக்களின் ஆழ்மனதில் ஊறிக்கிடந்த தேசியத்திற்கான விதைகளை 1857 ஆம் ஆண்டு கலகம் ஊன்றியது. 
  • 1947ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இடைவிடாத போராட்டத்தின் துவக்கமாக இக்கலகம் இருந்தது.
பெரும் புரட்சியின் மதிப்பீடு :
  • 1857 ஆம் ஆண்டு கலகத்தின் பண்பினை பிரிட்டிஷ் அறிஞர்களுடைய வரலாற்று ஏடுகள்
  • குறைத்தே மதிப்பிடுகின்றன. 
  • சர் ஜான் இக்கலகத்தை வெறும் ராணுவப் புரட்சி என்றும், பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கியெறிய நடத்தப்பட்ட சதி அல்ல என்றும் கருதுகின்றார். 
  • ஆனால், இந்திய அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு கலகத்தை புகழ்ந்து எழுதியுள்ளனர். வீர சவார்க்கர் இதனை முதல் இந்திய விடுதலைப் போர் என்று குறிப்பிட்டுள்ளார். 
  • எஸ். என். சென் 1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி என்று கருதுகிறார். 
  • ஆர்.சி. மஜும்தார் 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும், பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்றும் குறிப்பிடுகிறார்.

No comments: