Friday 19 April 2019

14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

இந்த ஆண்டு 14 பொருட் களுக்கு புவி சார் குறியீடு (ஜிஐ அடையாளம்) வழங்கப்பட்டுள் ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் காலா ஜீரா, சத்தீஸ்கரின் ஜீராபூல் மற்றும் ஒடிஷாவின் கந்தமால் ஹல்தி உள்ளிட்ட 14 பொருட்கள் இந்த குறியீட்டைப் பெற்றுள்ளன. இதேபோல கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் தயாராகும் அராபிகா காபி, கேரள மாநில வயநாடு ரோபஸ்டா காபி, ஆந்திர மாநில அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா ஆகியனவும், கர்நாடக மாநிலத்தின் சிரிஸி சுபாரி, இமா சலத்தின் சூலி எண்ணெய் ஆகியன வும் ஜிஐ குறியீடு பெற்றுள்ளன. இந்தக் குறியீடு பெற்றதன் மூலம் இப்பகுதியில் தயாராகும் வேளாண் பொருட்கள், அந்தந்த பகுதியில் கையால் தயாரிக்கப் படும் பொருட்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். அத்துடன் இந்த பொருட்களை வேறெந்த நிறுவனங்களும் தயாரித்து விற்க முடியாது. ஏற்கெனவே இதுபோன்ற ஜிஐ குறியீட்டை டார்ஜீலிங் டீ, திருப்பதி லட்டு, கங்ரா பெயின்டிங், நாக்பூர் ஆரஞ்சு, காஷ்மீர் பஷ்மினா ஆகியன பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. ஜிஐ குறியீடு பெற்றதன் மூலம் அந்தந்த பகுதியில் பிரபலமான தயாரிப்புகள் உள்நாட்டில் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் பிரபல மாகும். ஜிஐ குறியீடு பெற்ற தயாரிப்புகளைப் போன்ற தயாரிப் புகளை பிற நிறுவனங்கள் தயாரித்து விற்க முடியாது. அதே போல வாடிக்கையாளர்களும் தாங்கள் விரும்பும் பொருள் அப்பகுதியில் தயாரானதுதான் என்ற உத்தரவாதத்துடன் பெறக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று தேசிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைவர் டி.சி. ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு செல்லும் இந்தக் குறியீடு 10 ஆண்டு களுக்கு செல்லுபடியாகக் கூடியது. அதன் பிறகும் இதை புதுப்பித்துக் கொள்ளமுடியும். மேலும் சர்வதேச வர்த்தக மையத்தில் (டபிள்யூடிஓ) ஜிஐ தயாரிப்புகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ம் ஆண்டு முதல் முறை யாக ஜிஐ குறியீட்டை டார்ஜீலிங் தேயிலை பெற்றது. இதுவரை 344 பொருட்கள் இத்தகைய குறியீட்டைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிடிஐ

No comments: