Monday, 29 April 2019

பொது அறிவு குவியல்,

1. எந்த உலோக பயன்பாடு, சிந்து சமவெளி நாகரிகத்தை, ஆரிய நாகரிகத்துக்கு முந்தையதாக காட்டுகிறது?

2. பானிபட் போரில் பாபர் பின்பற்றிய போர் முறை என்ன?

3. முதல் இந்திய பேரரசை நிறுவியவர் யார்?

4. உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்கும் பிரச்சினைக்குரிய தேர்தல்கள் எவை?

5. மகா வீரர் ஞானம் பெற்ற பின்பு எப்படி அழைக்கப்பட்டார்?

6. ‘நியூ இந்தியா’ பத்திரிகை யாரால் நடத்தப்பட்டது?

7. அரிக்கமேடு, முசிறி, அலெக்சாண்டிரியா இவற்றில் ரோமர்களின் முக்கிய வணிகத் தலமாக விளங்கிய பகுதி எது?

8. சிந்து சமவெளி மக்கள் தங்கள் எடைக் கணக்கீட்டில் எந்த எண் மடங்குகளை பயன்படுத்தினார்கள்?

9. சூரியன் பூமியைப்போல எத்தனை மடங்கு பெரியது?

10. புத்த சரிதம் என்ற நூலை எழுதியவர் யார்?

11. நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்த இந்திய ஆய்வுக் கருவி எது?

12. எகிப்தில் வீசும் வெப்ப உலர் காற்று எப்படி அழைக்கப்படுகிறது?

13. இந்தியாவில் யுரேனியம் தாது கிடைக்கும் பகுதி எது?

14. தென்கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலத்தின் தலைமை இடம் எது?

15. ஹெர்ரிங் குளம் என புகழப்படுவது எது?

16. உலகின் மிகப்பெரிய ஏரி எது?

17. பருவக் காற்றுக் காடுகள் என அழைக்கப்படும் காடு எது?

18. பஞ்சாயத்து ராஜ் சட்டங்களுக்கு விலக்கு பெறும் மாநிலங்கள் எவை?

19. இந்தியாவில் முதன் முதலாக அணுகுண்டு சோதனை நடந்தபோது பிரதமராக இருந்தவர் யார்?

20. முன்னாள் பிரதமர் சரண்சிங்கின் பிறந்த நாள் என்ன தினமாக சிறப்பிக்கப் படுகிறது?

21. காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை கைவிட காரணமான ஒப்பந்தம் எது?

22. லாபர் வளைவு எது தொடர்பானது?

23. மனித உரையாடலின் ஒலிச்செறிவு என்ன?

24. 100 வாட் மின்சார விளக்கு ஒன்று ஓர் அலகு மின்சார ஆற்றலை நுகர்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் எவ்வளவு?

25. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் உலோகம் எது?

விடைகள்:

1. தாமிரம், 2. துல்காமா போர் முறை, 3. சந்திரகுப்த மவுரியர், 4. ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல், 5. ஜினா, 6. அன்னிபெசன்ட் அம்மையார், 7. அலெக்சாண்டிரியா, 8.16-ன் மடங்கு, 9. 109, 10. அஷ்வகோஷர், 11. எம்.3, 12. காசின், 13. ஜடுகுடு, 14. பிலாஸ்பூர், 15. அட்லாண்டிக் கடல், 16. காஸ்பியன் கடல், 17. இலையுதிர்க் காடுகள், 18. ஜம்மு காஷ்மீர், மிசோரம், மேகாலயா, 19. இந்திராகாந்தி, 20. விவசாயிகள் தினம், 21. காந்தி- இர்வின் ஒப்பந்தம், 22. வரி விகிதம், 23. 65 டெசிபல், 24. 10 மணி, 25. கோபால்ட்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 22 April 2019

1. அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு அறிவியல் தகவல்கள் ‘தெரிந்துகொள்வோமே...’ என்ற இந்த புதிய பகுதி மூலம் வாரந்தோறும் வெளியாகிறது

இறைவனின் படைப்பில் மனித உடல் ஒரு சிக்கலான படைப்பு என்பதை நாம் காணப்போகும் சில எண்ணிக்கையால், சொல்லப் போகும் விஷயங்களால் அறிந்துகொள்ளலாம்.

மனித உடல் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?

நம் உடலில் 37.2 டிரில்லியன் செல்களும், அவைகளில் 200 விதமான வகைகளும் இருக்கின்றன.

நம் தோலில் 100 பில்லியன் தோல் செல்கள் உள்ளன.

நம் மூளையில் 100 பில்லியன் நியூரான்கள் உள்ளன. நாம் மூளையில் தினமும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிந்தனைகள் செய்கிறோம்.

நமது மூளை 1 குவாட்ரில்லியன் (1 மில்லியன் பில்லியன்) பிட் (Bit) அளவு தகவலைத் தாங்கக் கூடியது.

நம் உடலில் 60 மில்லியன் ‘உணர்வு ஏற்பிகள்’ (receptors) உள்ளன.

கண்களைப் பொறுத்தவரை 127 மில்லியன் விழித்திரை செல்கள் உள்ளன. இதன் பயனாகத்தான் நம்மால் 10 மில்லியன் வெவ்வேறு நிறவேறுபாட்டைக் காண இயலுகிறது.

நம் கண்களில் 120 மில்லியன் ‘கம்பி செல்’கள் (rod cells) மற்றும் 6 மில்லியன் ‘கூம்பு செல்’கள் (cone cells) உள்ளன.

நமது கண் மட்டும் ஒரு டிஜிட்டல் கேமராவாக இருந்தால் அதன் ஒளியியல் தீர்மானம் (digital resolution) 576 மெகா பிக்சல் கொண்டதாயிருக்கும்.

மூக்கில் 1000 நுகர்வு ஏற்பிகள் உள்ளன. இதன் மூலம் நம்மால் 50 ஆயிரம் வெவ்வேறு வாசனைகளை வேறுபடுத்தி உணர முடியும்.

நம் உடலில் 6 லிட்டர் ரத்தம் ஓடுகிறது. 42 டிரில்லியன் சிவப்பு ரத்த அணுக்கள் உள்ளன. இவை சுமார் 42 பில்லியன் ரத்த நாளங்களில் பயணிக்கின்றன.

நாம் தினசரி 23,040 முறை மூச்சு விடுகிறோம். இதயம் தினசரி 1,15,200 முறை துடிக்கிறது.

நம் உடலில் 640 தசைநார்களும், அதன் பயனாய் 360 தசைகூட்டுகள் (joints) உள்ளன.

ஒவ்வொரு நாளும் நம் இதயம் தரும் சக்தியின் அளவால் நம்மால் ஒரு சாதாரண டிரக்கை 32 கி.மீ. தூரம் வரை இழுத்துச் செல்ல முடியும்.

சராசரி மனிதனின் வாழ்நாளில் நமது இதயம் ரத்தத்தை உடலில் பாய்ச்சும் அளவு 1.5 மில்லியன் பீப்பாய் அளவுக்கு சமம்.

நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்தாது. ஏனெனில் இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.

நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன.

சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வை சுரக்கிறது.

ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளாவட்டத்தில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடும்.

சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான்.

நம் உடலில் இரும்பு சத்து இருப்பதை அறிவோம். இந்த இரும்பு சுமார் 7.5 செ.மீ. நீளமுள்ள சாதாரண அளவு ஆணியை உருவாக்கும் அளவுக்கு உள்ளது.

நம் உடலின் எல்லா செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) வைப் பிரித்து நீட்டி இழுத்தால், அதன் நீளம் 10 பில்லியன் மைல்கள் இருக்கும். இது நாம் பூமியிலிருந்து புளூட்டோ கிரகம் சென்று திரும்பி வரும் அளவுக்கு சமம்.

நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை.

நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும்.

நம் வயிற்றில் சுரக்கும் அமிலம் நம் தோலின் மீது பட்டால் ஒரு துளையே உருவாகும் அளவுக்கு காரத்தன்மை நிறைந்தது.

மனித உடலையும், அதில் உள்ள உறுப்பு களின் செயல்களையும் எண்ணிப்பார்க்கையில் ஒரு விந்தையே. இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசே. அதை நலத்துடன் பாதுகாப்போம்.

முனைவர் ராஜன் ராமசுவாமி, சென்னை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்

1. பூஞ்சைகளின் செல்சுவர் என்ன பொருளால் ஆனது?

2. கரும்பு கழிவில் இருந்து பெறப்படுவது எது?.

3. வெப்பத்தால் விரிவடையாத உலோக கலவை எது?

4. மிக அதிக ஊடுருவும் தன்மை கொண்ட கதிர்கள் எவை?

5. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது?

6. வறுமைக் கோட்டிற்கான புதிய வரையறை செய்த கமிட்டி எது?

7. துணைப் பிரதமராக இருந்து பிரதமரானவர்கள் யார்?

8. செங்கடல், சாக்கடல் ஆகியவை எத்தகைய மலை வகைக்கு உதாரணங்களாகும்?

9. ஜிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?

10. வங்கப் பிரிவினையை ரத்து செய்தவர் யார்?

விடைகள்

1. கைட்டின், 2. எத்தில் ஆல்கஹால், 3. இன்வார், 4. காமா கதிர்கள், 5. மாக் நம்பர், 6. சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டி, 7. மொரார்ஜி தேசாய், சரண்சிங், 8. பிளவு பள்ளத்தாக்குகள், 9. தெற்கு ரொடீஷியா, 10. ஹார்டிஞ் பிரபு.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒலிம்பிக் துளிகள்

ஒலிம்பிக்கை தடை செய்த ரோமானிய அரசர் தியோடோசிஸ்.

பழங்கால ஒலிம்பிக் போட்டிகள் கி.மு. 776-ல் இருந்து கி.பி. 392 வரை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்திருக்கின்றன.

பதக்க வடிவமைப்பு, 1928-க்குப் பின் 2004-ல் தான் மாற்றி அமைக்கப்பட்டது.

கிரேக்க கடவுள் நைக்கியின் உருவம் மெடலின் ஒரு பக்கம் செதுக்கப்பட்டிருக்கும்.

ஒலிம்பிக்கின் குறிக்கோள் Citius Altius Fortius என்பதாகும். இது தமிழில் “விரைவாக, உயரமாக, பலமாக” என பொருள்படும்.

முதல் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்றவர் ஜேம்ஸ் கானோலி.

ஒலிம்பிக் வரலாற்றில் தனி போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரே. 2008 ஒலிம்பிக்கில் இந்த சாதனையை அவர் படைத்தார்.

குளிர்கால ஒலிம்பிக், கோடை கால ஒலிம்பிக் இரண்டிலும் தங்கம் வென்றவர் எடி ஈகன்.

ஒலிம்பிக் கமிட்டியின் தாயகம் சுவிட்சர்லாந்தில் லாசானோவில் உள்ளது.

1936 பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய விளையாட்டான கபடி சோதனை முறை விளையாட்டாக விளையாடப்பட்டது.

1900 பாரீஸ் ஒலிம்பிக்கில்தான் முதன் முதலாக பெண்கள் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இது இரண்டாவது ஒலிம்பிக் போட்டியாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 19 April 2019

14 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

இந்த ஆண்டு 14 பொருட் களுக்கு புவி சார் குறியீடு (ஜிஐ அடையாளம்) வழங்கப்பட்டுள் ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படும் காலா ஜீரா, சத்தீஸ்கரின் ஜீராபூல் மற்றும் ஒடிஷாவின் கந்தமால் ஹல்தி உள்ளிட்ட 14 பொருட்கள் இந்த குறியீட்டைப் பெற்றுள்ளன. இதேபோல கர்நாடக மாநிலம் கூர்க் பகுதியில் தயாராகும் அராபிகா காபி, கேரள மாநில வயநாடு ரோபஸ்டா காபி, ஆந்திர மாநில அரக்கு பள்ளத்தாக்கு அராபிகா ஆகியனவும், கர்நாடக மாநிலத்தின் சிரிஸி சுபாரி, இமா சலத்தின் சூலி எண்ணெய் ஆகியன வும் ஜிஐ குறியீடு பெற்றுள்ளன. இந்தக் குறியீடு பெற்றதன் மூலம் இப்பகுதியில் தயாராகும் வேளாண் பொருட்கள், அந்தந்த பகுதியில் கையால் தயாரிக்கப் படும் பொருட்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். அத்துடன் இந்த பொருட்களை வேறெந்த நிறுவனங்களும் தயாரித்து விற்க முடியாது. ஏற்கெனவே இதுபோன்ற ஜிஐ குறியீட்டை டார்ஜீலிங் டீ, திருப்பதி லட்டு, கங்ரா பெயின்டிங், நாக்பூர் ஆரஞ்சு, காஷ்மீர் பஷ்மினா ஆகியன பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. ஜிஐ குறியீடு பெற்றதன் மூலம் அந்தந்த பகுதியில் பிரபலமான தயாரிப்புகள் உள்நாட்டில் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் பிரபல மாகும். ஜிஐ குறியீடு பெற்ற தயாரிப்புகளைப் போன்ற தயாரிப் புகளை பிற நிறுவனங்கள் தயாரித்து விற்க முடியாது. அதே போல வாடிக்கையாளர்களும் தாங்கள் விரும்பும் பொருள் அப்பகுதியில் தயாரானதுதான் என்ற உத்தரவாதத்துடன் பெறக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று தேசிய அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் தலைவர் டி.சி. ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு செல்லும் இந்தக் குறியீடு 10 ஆண்டு களுக்கு செல்லுபடியாகக் கூடியது. அதன் பிறகும் இதை புதுப்பித்துக் கொள்ளமுடியும். மேலும் சர்வதேச வர்த்தக மையத்தில் (டபிள்யூடிஓ) ஜிஐ தயாரிப்புகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004-ம் ஆண்டு முதல் முறை யாக ஜிஐ குறியீட்டை டார்ஜீலிங் தேயிலை பெற்றது. இதுவரை 344 பொருட்கள் இத்தகைய குறியீட்டைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பிடிஐ

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 16 April 2019

முதன் முதலில் ...

முதல் பெண் பஸ் டிரைவர் வசந்த குமாரி

இந்திய அளவில் முதன்மை பெற்ற சில பெண் பிரபலங்கள்...

முதல் பெண் ஆளுநர் - சரோஜினி நாயுடு (உ.பி.)

முதல் பெண் கேபினட் அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கவுர்

முதல் பெண் சபாநாயகர் - (பாராளுமன்றம்) -மீராகுமார்

முதல் பெண் சபாநாயகர் (மாநில சட்டசபை) - ஷானா தேவி (கர்நாடகா)

முதல் பெண் ரெயில் என்ஜின் ஓட்டுனர் - சுரேகா யாதவ்

முதல் பெண் பேருந்து ஓட்டுனர் - வசந்தகுமாரி

முதல் பெண் விமானப்படை பைலட் - அனிதா கவுர்

மிஸ்வேர்ல்டு பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீட்டா பரியா

மிஸ் யூனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - சுஷ்மிதா சென்

நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா

இந்திய தேசிய காங்கிரஸின் முதல் இந்திய பெண் தலைவர் - சரோஜினி நாயுடு

முதல் பெண் வழக்கறிஞர் - ரெஜினா குகா

முதல் பெண் மருத்துவர் - ஆனந்தபாய் ஜோஷி

முதல் பெண் என்ஜினீயர் - லலிதா

முதல் பெண் துணைவேந்தர் - ஹன்சா மேத்தா

பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் - இந்திராகாந்தி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பரணி இலக்கியம்

* 96 வகை சிற்றிலக்கியங்களில் புகழ்பெற்றவை பரணி இலக்கியங்கள்.

* போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற மன்னனின் புகழைப் போற்றிப் பாடப்படுவது பரணி இலக்கியமாகும்.

* பரணி இலக்கியம், தோல்வி அடைந்த நாட்டின் பெயரில் அமைந்திருக்கும்.

* பரணியின் பெயரிலக்கண முறைக்கு விதிவிலக்காக திராவிட பரணி, திராவிட நாட்டின் வெற்றியைப் பாடுகிறது.

* தமிழ் பரணி நூல்களில் புகழ்பெற்றது ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணி.

* குலோத்துங்க சோழனின் தளபதியான கருணாகர தொண்டைமான் கலிங்கத்தைத் தோற்கடித்ததைச் சிறப்பித்துப் பாடுகிறது கலிங்கத்துப்பரணி.

* தக்கயாகப் பரணியைப் பாடியவர் ஒட்டக்கூத்தர்.

* அகமும், புறமும் கலந்து பாடப்படும் சிற்றிலக்கியமாக பரணி திகழ்கிறது.

* உணர்வுகளை கட்டுப்படுத்துவதை கருவாகக் கொண்டு பாடப்பட்ட மோகவதைப் பரணி என்ற நூலை தத்துவராயர் இயற்றி உள்ளார்.

* ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி, தக்கனின் யாகத்தை அழித்த சிவனின் வெற்றியை சிறப்பித்து பாடப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

கிரிக்கெட் அளவுகள்

கிரிக்கெட் அளவுகள்

பிட்சின் நீளம் - 20.11 மீட்டர்

பந்தின் சுற்றளவு - 20.79-22.8 செ.மீ.

பந்தின் எடை - 155-168 கிராம்

(5.75 அவுன்ஸ்)

மட்டையின் நீளம் - 96.5 செ.மீ

மட்டையின் அகலம் -11.4 செ.மீ.

மட்டையின் எடை - 2 பவுண்டுகள்

ஸ்டம்பின் விட்டம் - 3.81 செ.மீ.

விக்கெட் மொத்த அகலம் - 20 செ.மீ.

தரைக்கு மேல் ஸ்டம்ப் உயரம் - 28 அங்குலம்

விக்கெட், பாப்பிங் கிரீஸ் தூரம் - 4 அடி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி

வினா–வங்கி

1. வியாஸ் பயஸ் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

2. இலக்கிய ஆராய்ச்சி நூலின் ஆசிரியர் யார்?

3. குடவோலை முறை பற்றி எதில் கூறப்பட்டு உள்ளது?

4. பாக்டீரியா ஒரு புரோகேரியாட் உயிரினம் இது சரியா? தவறா?

5. மையோபியா என்பது எத்தகைய கண்பாதிப்பு?

6. மனிதனுக்கு எத்தனை ஜோடி விலா எலும்புகள் இருக்கும்?

7. உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விஷவாயு?

8. நிலையாற்றலை கணக்கிடும் வாய்ப்பாடு எது?

9. ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்ட காலம் எது?

10. ராஜ்யசபா நியமன எம்.பி.க்கள் சட்ட விதிகள் எந்த நாட்டின் சட்டத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டது?

விடைகள்

1. ஆக்கி, 2. மு.வரதராசன், 3. அகநானூறு, 4. சரி, 5. கிட்டப்பார்வை, 6. 12, 7. மஸ்டர்டு வாயு, 8. PE=mgh, 9. 1974-79, 10. அயர்லாந்து

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 13 April 2019

தகவல் களஞ்சியம்

சென்னையில் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு 1884.

1930-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கப்பட்டது.

அமெரிக்காவில் மட்டும் சுமார் 20 லட்சம் இரட்டையர்கள் உள்ளனர்.

இந்தியாவின் முதல் பெண் விமானி துர்கா பானர்ஜி.

தந்தியைக் கண்டுபிடிக்க மோர்ஸ் 12 ஆண்டுகள் பாடுபட்டார்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

டைனோசர்கள் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்தன

பூமியில் பெரும் உயிரினமாக உலவிக்கொண்டிருந்த டைனோசர்கள், 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்ததற்கான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சிறிய கோள் ஒன்று 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் விழுந்தபோது டைனோசர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்ததற்கான புதை படிவங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாநிலத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது பூமியைத் தாக்கிய சிறுகோளால் அழிந்த மீன்கள், மரங்கள் ஆகியவற்றின் புதைபடிவங்கள் வாயிலாக இது தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, சிறியகோள் தாக்கத்தின் காரணமாக கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அதன் மூலம் அறியப்பட்டிருக்கிறது. வடக்கு டகோட்டா மாநிலத்தில் உள்ள டேனிஸ் என்ற பகுதியில், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பிட்ட சிறிய கோள் தாக்கிய பின்னர் சுமார் சில நிமிடங்கள் முதல் ஒரு சில மணிநேரங்களில் அப்பகுதியில் ஏற்பட்ட வியத்தகு மாற்றங்கள் குறித்த விவரங்களை இந்தப் புதைபடிவங்கள் வழங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 கிலோ மீட்டர் அகலம் கொண்ட அந்தச் சிறிய கோள், தற்போதைய மெக்சிகோ வளைகுடாப் பகுதியில் விழுந்தபோது சிதறிய பாறைகள் வானத்தை நோக்கி அனைத்துத் திசைகளிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு விழுந்தன. அப்போது, மீண்டும் பூமியின் நிலப்பரப்பில் வந்து விழுந்த பாகங்கள் டேனிஸ் பகுதியில் ஏற்படுத்திய சேதங்களை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது இந்தக் கண்டுபிடிப்புக்கு வழிகோலியுள்ள மீன்களின் செவுள்களில், பூமியில் விழுந்த குப்பைகள் ஒட்டி இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், அப்போது அந்தப் பகுதியில் இருந்த மரப் பிசின்களில் பூமியின் மீது மோதிய சிறு கோளின் துகள்கள் ஒட்டியுள்ளன. அதுமட்டுமின்றி, அங்கு கிடைத்துள்ள துகள்களின் காலத்தை, மெக்சிகோ கடல் பரப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய தாக்கத்தோடு தொடர்புடைய காலத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டுள்ள 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான், உலகம் முழுவதும் இதைப் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. டேனிஸ் பகுதியில் கிடைத்துள்ள புதை படிவங்களைப் பார்க்கும்போது, சிறு கோள் மோதியதால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக அந்தப் பகுதியை மிகப் பெரிய அளவில் தண்ணீர் சூழ்ந் திருக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சரியமூட்டும் விஷயம், முதலில் மெக்சிகோ வளைகுடா பகுதியைத் தாக்கிய இந்த சிறிய கோளால் அங்கு ஏற்பட்ட சுனாமியால் உருவான அலைகள், பல மணிநேரம் சுமார் மூவாயிரம் கி.மீ. தூரம் பயணித்து வடக்கு டகோட்டாவை அடைந்திருக்க வேண்டும். ஆனால், மெக்சிகோ வளைகுடா பகுதியில் சிறிய கோள் விழுந்தபோது அதை மையமாகக் கொண்டு ஏற்பட்ட 10 அல்லது 11 அளவுள்ள நிலநடுக்கத்தால், டேனிஸ் உள்ளிட்ட சுனாமி அலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதற்கு முன்னதாகவே, அருகில் உள்ள பகுதிகளில் இருந்து நீரின் இடமாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ‘நீரின் இடப்பெயர்ச்சியின்போது மீன்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள், மரங்கள், முற்றிலும் அழிந்துபோன கடல்வாழ் உயிரினமான அம்மோனைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு உயிரிகள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு அடித்துச் செல்லப்பட்டன’ என்கின்றனர் அவர்கள். ‘சிறிய கோள் தாக்கிய இடத்தில் இருந்து புதைபடிவங்கள் கிடைத்துள்ள இடத்தை சுனாமி அலைகள் அடைவதற்கு குறைந்தது 17 மணிநேரம் ஆகியிருக்கும். ஆனால், அதிர்வு அலைகள் மற்றும் தொடர் அசைவுகள் சம்பவ இடத்தை அடைவதற்கு பத்து நிமிடங்களே எடுத்துக்கொண்டிருக்கக் கூடும்’ என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆக, டைனோசர்கள் அழிந்த காலகட்டம், அவற்றின் அழிவுக்கான காரணம் குறித்து கடைசியில் ஒரு நம்பகமான தகவல் வெளியாகி இருக்கிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Friday, 12 April 2019

தகவல் களஞ்சியம்

ஹாலந்து காற்றாலைகளின் தேசம் என புகழப்படுகிறது.

மனிதனின் நாக்கு ரேகை ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

பக்ரைன் முத்துக்களின் தீவு என அழைக்கப் படுகிறது.

தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் மண் வகை செம்மண்.

ஹைதராபாத், செகந்திராபாத் இரட்டை நகரம் என அழைக்கப்படுகிறது.

தீ எரிவதற்குத் தேவை ஆக்சிஜன்.

உடலுக்கு தோற்றத்தை தருபவை எலும்புகள்.

ஆஸ்திரேலியாவுக்கு 2 தேசிய கீதங்கள் உண்டு.

ரோம் நகரம் கி.மு.750-ல் உருவானது.

மனிதன் தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் மைல்கள் நடக்கிறார். இது 5 முறை உலகைச் சுற்றுவதற்குச் சமம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நுண்ணுயிர்களை அறிந்து சொன்னவர் அன்டன் வான் லீவென்ஹோக்

நம் பற்களின் இடையே இருக்கின்ற நுண்ணுயிர் கிருமிகள் நீங்குவதற்காக காலை, இரவு என இரு வேளைகளிலும் பற்களை நன்றாகத் துலக்குகின்றோம்.
அந்த நுண்ணுயிர்கள் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான நுண்ணுயிர்களை அறிவியல் உலகத்திற்கு அடையாளம் காட்டியவர்தான் அறிவியல் மேதையான அன்டன் வான் லீவென்ஹோக் என்பவர். 1632-ல் ஹாலந்து நாட்டில் உள்ள டெல்பீட் நகரில் இவர் பிறந்தார். 
இளமை காலத்தில் தந்தையை இழந்ததால் பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு சரக்கு வண்டி ஓட்டினார். நகர மன்றத்தின் வாயிற்காவலர் வேலையில் அமர்ந்தார். அங்கு இருந்த நேரத்தில், கண்ணாடி வில்லையானது ஒரு பொருளை பல மடங்காகக் பெருக்கிக்காட்டும் என கேள்விப்பட்டார். அப்படி பெருக்கிக் காட்டும் ஒரு கண்ணாடி வில்லையானது தனக்கு வேண்டும் என்று அவர் நினைத்தார், ஆனால் அதனை விலைக்கு வாங்கும் எண்ணம் அவருக்கு வரவில்லை. பின்னர் அவர் மூக்கு கண்ணாடி செய்கின்ற தொழிலாளர் ஒருவரோடு பழகினார். அவருடன் இருந்தே கண்ணாடிவில்லை தயாரிக்கும் முறையை கற்றுக்கொண்டார். தனது அனுபவ அறிவினைக்கொண்டு சிறந்த வில்லைகளை தயாரிக்க முயற்சித்தார். கடினமான உழைப்பின் காரணமாக, தன் மனைவி மக்களை கவனிக்க மறந்தார். தன்னுடைய அருமையான நண்பர்களையும் இழந்தார். தன்னந்தனியாகவே கடுமையாக உழைத்தார். நள்ளிரவிலும்கூட கடுமையாக வியர்வை சிந்திட உழைக்கத் தொடங்கினார். இதனைக் கவனித்த அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் அவரை அரைப் பைத்தியம் என்று கேலி செய்தனர். அதனைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல் புழுதியும், புகையும் நாற்றமும் நெடியும் உள்ள மோசமான சூழலில் உழைத்து முடிவில் மிகச்சிறந்த கண்ணாடிவில்லைகளை தயாரித்தார், அதற்கு இணையான வில்லைகள் ஐரோப்பாவிலும், உலகில் வேறு எந்த மூலையிலும் அப்போதுவரை இல்லை. தான் தயரித்த வில்லைகளை உலோகக் குழாயில் பொருத்தி மிகச்சிறந்த நுண்ணாடி கருவியை உருவாக்கினார். அதுவே முதல் நுண்ணோக்கி. தன் கையில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் அந்த கருவியில் வைத்து அவற்றின் பெரிதாக்கப்பட்ட தோற்றத்தைக் கண்டு மகிழ்ந்தார். திமிங்கலத்தின் தசைத்திரள், காளை மாட்டின் கண், ஆட்டின் மேல் ரோம முடிகள் முதலியவற்றை தன் கருவியால் பார்த்து வியப்படைந்தார். ஈயின் தலையையும், அதன் மூளையையும் பார்த்து ஆச்சரியமடைந்தார். பூச்சிகளின் கொடுக்கு, தலைப்பேன்களின் கால், இவைகளைப் பெரிதாகப் பார்த்து மெய் சிலிர்த்தார். ஒருநாள் தான் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த மழைத்தண்ணீரில் ஒரு துளியை தன் கருவியில் வைத்து சோதித்தார். அதில் நூற்றுக்கணக்கான நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார். அவைகள் எல்லாம் துள்ளி துள்ளிப் பாய்ந்தன. தாவிக்குதித்தன. மேலே எழும்பி புரண்டு குட்டிக் கரணங்கள் போட்டன. நீந்தி விளையாடின. சில நடனமாடின. இவைகளை எல்லாம் கண்மூடாமல் பார்த்து ரசித்த அவர் தன்னைத் தேடி வந்தோரிடமும் அதைக் காட்டினார். அந்நேரம் இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் மன்னரின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல அறிவியல் அறிஞர்கள் ஒன்று கூடி ஆரம்பித்த அறிவியல் சங்கமானது, அரசு கழகமாக செயல்பட்டு வந்தது. அதில் இருந்த கிராப் என்ற உறுப்பினர் ஒருவர் லீவென்ஹோக்கிடம் கண்டுபிடிப்புகளை அரசு கழகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். லீவென்ஹோக் பலமுறை ஆராய்ச்சி செய்து நன்றாக தெளிவு பெற்ற பின்னர் தனது கண்டுபிடிப்புகளை அரசு கழகத்திற்கு நன்கொடையாகவே வழங்கிவிட்டார். அதன் பின்னர் கிணற்று நீர், குளத்து நீர், ஆற்று நீர் ஆகிய பல நீர்நிலைகளை ஆராய்ந்து பல தரப்பட்ட நுண்ணுயிர்கள் குறித்த உண்மைகளை எல்லாம் கண்டறிந்தனர். லீவென்ஹோக், ஒருமுறை நன்றாக ஊற வைத்த மிளகின் சிறுபகுதியை எடுத்து ஆராய்ந்தார். அதில் நம்ப முடியாத நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டார். அவைகளைப் பற்றி அரசு கழகத்திற்கு அறிவித்தார். ஆனால் பலர் அதனை கேலி செய்தனர். ஆனால் அரசு கழகமானது அவர் செய்த ஆராய்ச்சியை அறிந்து கொள்ள, மிகச்சிறந்த நுண்ணோக்கி கருவியைத் தயாரித்து தருமாறு கூறியது. அதற்கேற்றவாறு அவரும் முயன்று அரிய வகையிலான நுண்ணோக்கி ஒன்றை உருவாக்கிவிட்டார். அதன்பின்னர் அவர் தெரிவித்த செய்திகள் எல்லாம் உண்மைதான் என்று அனைவரும் ஒப்புக்கொண்டனர். அரசு கழகமானது அவரை பெருமைப்படுத்த வேண்டி, தங்கள் கழகத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது. அதற்குரிய சிறப்பிதழை வெள்ளிப்பேழையில் வைத்து வழங்கியது. அவரும், தான் உண்மையாக உழைக்கப்போவதாக உறுதி எடுத்து அதன்படியே செய்தும் காட்டினார். தன் பற்களின் மேல்புறத்தில் படிந்திருந்த வெள்ளையான பொருளை ஆராய்ந்து அவற்றிலும் நுண்ணுயிர்கள் இருப்பதை அறிவித்தார். மீன்களின் உடலில் அமைந்த ரத்த நாளத்தின்போக்கு, மனித உடலின் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் தோற்றம், இனப்பெருக்க சமயத்தில் உயிர் அணுக்களின் அமைப்பு, ஒற்றைவிதை, இரட்டை விதை செடிகளின் உருவ அமைப்பு போன்றவற்றையும் நுண்ணோக்கி உதவியுடன் ஆராய்ந்தார். நுண்ணுயிர்களைப் பற்றிய பல உண்மைகளை வெளியிட்டார். எறும்பின் இனங்களைப் பற்றியும் ஆராய்ந்த இவர், நுண்ணுயிர் உலகின் முதல் ஆய்வாளராக செயல்பட்டார். மருத்துவ துறை மட்டுமல்லாது வானியல் துறை வரையிலும் பயன்படத்தக்க வகையில் பல கண்ணாடிக் கருவிகளை உருவாக்கினார். அவரது இருப்பிடம் தேடிவந்த இங்கிலாந்து நாட்டின் பேரரசியும், ரஷிய நாட்டின் பெருமைமிக்க பீட்டர் அரசரும் தங்களது பாராட்டுதலையும் காணிக்கையினையும் செலுத்தி சென்றனர்.தனது இறுதி காலத்தில் படுக்கையில்படுத்த நிலையிலும் தனது நெருங்கிய நண்பரை அழைத்து தனது ஆராய்ச்சிகள் அடங்கிய இறுதி கடிதத்தை அரசு கழகத்திற்கு அனுப்பி வைத்தார். 1723-ல் இயற்கை எய்தினார். இளைய தலைமுறையினருக்கு இவரது வரலாறு சிறந்த வாழ்க்கைப் பாடமாகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இதயம்...

இதயத்தை சுற்றியுள்ள உறை பெரிகார்டியம்.

இதயம் நிமிடத்துக்கு 72 முறை துடிக்கும்.

இதயத்தின் மேல் அறையின் பெயர் ஆரிக்கிள்.

இதயத்தின் கீழ் அறையின் பெயர் வெண்ட்ரிக்கிள்.

இதயத்தின் வலது அறைகளில் அசுத்தமான ரத்தம் உள்ளது.

இதயத்தின் இடது அறைகளில் சுத்தமான ரத்தம் உள்ளது.

இதயத்துக்கு ரத்தம் கொண்டு செல்பவை கரோனரி தமனிகள்.

இதயத் துடிப்பை அறிய உதவுவது ஸ்டெதஸ்கோப்.

இதய அறைகளுக்கு இடையே வால்வுகள் உள்ளன.

இதயம் நுரையீரல்களுக்கு பின்புறமாக அமைந்துள்ளது.

இதயமே நமது உடலின் ரத்தத்தை பம்ப் செய்து மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது.

நுரையீரல் பகுதியில் ஆக்சிஜன் ஏற்றப்படும் ரத்தம், இதயத்தால் பம்ப் செய்யப்பட்டு மற்ற பாகங்களுக்கு அனுப்பி வைக்கிறது.

உங்கள் கையை பொத்திக்கொண்டால் என்ன அளவு இருக்குமோ, இதயம் அந்த அளவுடையதாக இருக்கும்.

இதயம் சுமார் அரை கிலோ எடை கொண்டிருக்கும்.

இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவது மாரடைப்பை உருவாக்கும்.

இதயத்துடிப்பு உருவாக்கும் இடம் பேஸ்மேக்கர் எனப்படுகிறது.

இதேபெயரில் இதய சிகிச்சை கருவி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Thursday, 11 April 2019

பாண்டியர் ஆட்சி

களப்பிரர்களை வெற்றி கொண்டு பிற்கால பாண்டியர் ஆட்சியை கி.பி. 575-ல் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் நிறுவினான்.

கடுங்கோன் முதல் வீரபாண்டியன் வரை சுமார் 800 ஆண்டுகள் ஆண்ட பிற்கால பாண்டியர்கள் 32 பேர்.

பிற்கால பாண்டியர்களை பல்லவர் கால பாண்டியர்கள் (10 பேர்), சோழர்கால பாண்டியர்கள் (16 பேர்), பாண்டிய பேரரசர்கள் (6 பேர்) என மூன்று பட்டியல்களில் அடக்கலாம்.

இரண்டாம் நந்திவர்மனை தோற்கடித்த பாண்டிய மன்னன் அரிகேசரி பராங்குசன்.

பராங்குசன் கங்கர்களை வென்று கங்கை இளவரசி கூசுந்தரியை மணந்ததை சீவரமங்கலம் செப்பேடு தெரிவிக்கிறது.

பல்லவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பாண்டிய மன்னன் முதலாம் வரகுண பாண்டியன் (கி.பி.768-815)

திருப்பரங்குன்றம், கழுகுமலைக் குடை வரைக் கோவில்கள் முதலாம் வரகுண பாண்டியன் காலத்தவை.

பல்லவர்களால் கொள்ளிடக் கரையான திருப்புறம்பியத்தில் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன்.

கடுங்கோன் பாண்டிய மரபில் கடைசி மன்னன் பராந்தகப் பாண்டியன்.

முதலாம் சுந்தரபாண்டியன் மூன்றாம் ராஜ ராஜனை வெற்றி கொண்டான் (கி.பி. 1216 -1239), இரண்டாம் சுந்தரபாண்டியன் சோழ மன்னன் மூன்றாம் ராஜேந்திரனால் தோற் கடிக்கப்பட்டான்.

மூன்றாம் சுந்தர பாண்டியன், மூன்றாம் ராஜேந்திரனை தோற்கடித்தான்.

மூன்றாம் சுந்தரபாண்டியன் மதுரை கோவிலின் கிழக்கு கோபுரத்தை கட்டியதோடு திருவரங்கம் கோவில் விமானத்துக்கு பொன் வேய்ந்தான்.

குலசேகர பாண்டியன் காலத்தில் (1265-1310) வெனிஸ் நகரப் பயணி பாண்டிய நாட்டுக்கு வருகை தந்தார்.

குலசேகர பாண்டியன் காலத்துக்குப் பின் குலசேகரனின் புதல்வர்கள் நான்காம் சுந்தர பாண்டியனும், வீர பாண்டியனும் அரியணைக்குப் போட்டியிட்டனர்.

மாலிக்காபூர் உதவியோடு நான்காம் சுந்தரபாண்டியன் கி.பி. 1303-ல் அரியணை ஏறினார். கி.பி. 1310-ல் குலசேகரப் பாண்டியன் கொல்லப்பட்ட பின்பு அரியணை ஏறிய வீர பாண்டியனே கடைசி பாண்டிய மன்னன்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

புதுக்கவிதை நூல்கள்

புகழ்பெற்ற புதுக்கவிதை நூல்கள் சிலவற்றையும், அதை எழுதியவர்களையும் அறிவோம்...

காட்டு வாத்து, வழித்துணை - நா.பிச்சமூர்த்தி

கனவுகள்+ கற்பனைகள்= காகிதங்கள், ஊசிகள் - மீரா

அன்று வேறு கிழமை - ஞானக்கூத்தன்

104 கவிதைகள், நடுநிசி நாய்கள் - பசுவையா (சுந்தர ராமசாமி)

நேயர் விருப்பம், பால்வீதி, ஆலாபனை, முட்டை வாசிகள் - அப்துல் ரகுமான்

கருப்புமலர்கள், தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும், சகாராவைத் தாண்டாத ஒட்டகங்கள் - நா.காமராசன்

கண்ணீர்ப்பூக்கள், காத்திருந்த காற்று, நந்தவன நாட்கள், பெய்யென பெய்யும் மழை, இன்னெரு தேசியகீதம், தமிழுக்கு நிறம் உண்டு, இந்த பூக்கள் விற்பனைக்கல்ல, வைகறை மேகங்கள் - வைரமுத்து.

சூரிய நிழல், சர்ப்பயாகம், ஒரு கிராமத்து நதி - சிற்பி பாலசுப்பிரமணியம்

ஒரு கூடை சென்ரியு, தோணி வருகிறது, வணக்கம் வள்ளுவ - ஈரோடு தமிழன்பன்

அவதார புருஷன், பாண்டவர் பூமி - கவிஞர் வாலி

கையொப்பம், இனி - புவியரசு

தீர்த்த யாத்திரை - கலாப்பிரியா

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. ஆஞ்சியோஸ்பெர்ம் மரங்களில் மிகப்பெரியது எது?

2. இந்தியாவில் காணப்படும் வாலில்லா குரங்கு இனம் எது?

3. டி.என்.ஏ.வின் இரு சுழற்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வளவு?

4. இஸ்திரி பெட்டியில் (அயர்ன் பாக்ஸ்) பயன்படும் உலோக கலவை எது?

5. மின்காந்த விளைவை கண்டறிந்தவர் யார்?

6. நீர்த்துளியின் கோள வடிவுக்கு காரணம் என்ன?

7. மனித வளர்ச்சி குறியீடு எப்படி குறிப்பிடப்படுகிறது?

8. தொழில்துறை நசிவு பற்றி ஆராய உருவாக்கப்பட்ட கமிட்டி எது?

9. அகில இந்திய அளவில் புதிய பணிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு எது?

10. ரோம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

விடைகள்

1. யூகலிப்டஸ், 2. கிப்பன், 3. 34 நானோ மீட்டர், 4. நிக்ரோம், 5. ஒயர்ஸ்டட், 6. பரப்பு இழுவிசை, 7. எச்.டி.ஐ., 8. கோஸ்வாமி கமிட்டி, 9. ராஜ்யசபா, 10. டைபர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஜாலியன்வாலாபாக் படுகொலை வருத்தம் தெரிவித்தார் தெரசா

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது அரசுக்கு எதிராக செயல் பட்டதாக கூறி சத்யபால், சைபுதின் கிச்லியு ஆகிய சுதந்திரப் போராட்ட தலைவர்களை போலீஸார் கைது செய்தனர். இதனைக் கண்டிக்கும் வித மாக, பஞ்சாப் மாநிலம் அமிர் தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் எனும் பூங்காவில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அமைதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜெனரல் டயர் என்ற அதிகாரி தலைமையில் அங்கு வந்த பிரிட்டன் ராணுவத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இந்தக் கொடூர நிகழ்வில் 1000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் 100-ம் ஆண்டு நினைவு நாளினை வரும் சனிக்கிழமையன்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சம்பவத்தை நிகழ்த்திய தற்காக பிரிட்டன் அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன. இந்தக் கோரிக் கைக்கு பிரிட்டன் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், இந்த விவ காரம் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரதமர் தெரசா மே நேற்று பேசி னார். அப்போது அவர், "ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற சம் பவத்துக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் ஆழ்ந்த வருத் ததை தெரிவிக்கிறேன்" என்றார். எனினும், தமது உரையில் அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Sunday, 7 April 2019

இந்தியக் குடியரசுக் கட்சி, பி.ஆர்.அம்பேத்கரால் 1956-ல் தொடங்கப்பட்டது.

இந்தியக் குடியரசுக் கட்சி, பி.ஆர்.அம்பேத்கரால் 1956-ல் தொடங்கப்பட்டது. குடியரசுக் கட்சியில் சேரும் உறுப்பினர்கள் அரசியலில் நுழைய பயிற்சிப் பள்ளியையும் அவர் ஏற்படுத்தினார். அவருடைய மறைவுக்குப் பிறகு அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது. முதல் அணியில் 15 மாணவர்கள் சேர்ந்தனர். குடியரசுக் கட்சி அமைப்புக்கு இரண்டு முன்னோடிகள் உள்ளன. சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ஐஎல்பி) என்ற அமைப்பை அம்பேத்கர் 1936-ல் தொடங்கினார். இந்தியாவின் பிராமணிய, முதலாளித்துவ அமைப்புகளை அந்த அமைப்பு எதிர்த்தது. சாதி அமைப்புகளைக் களைந்தெறிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட அந்த அமைப்பு, இந்திய உழைக்கும் வர்க்கத்தை ஆதரித்தது. ஐஎல்பி அமைக்கப்பட்டதை கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஆதரிக்கவோ வரவேற்கவோ இல்லை. ‘இது உழைக்கும் வர்க்கத்தின் வாக்குகளைப் பிளந்துவிடும்’ என்று அவர்கள் கருதினர். கம்யூனிஸ்ட் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உழைக்கிறார்களே தவிர ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மனித உரிமைகளுக்காகப் பாடுபடவில்லை என்று அம்பேத்கர் அதற்குப் பதிலளித்தார். சுதந்திரத் தொழிலாளர் கட்சியை அடுத்து, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக ‘பட்டியல் சாதிகளின் சம்மேளனம்’ (எஸ்சிஎஃப்) என்ற அமைப்பை 1942-ல் தொடங்கினார் அம்பேத்கர். மதறாஸ் மாகாணத்தைச் சேர்ந்த என். சிவராஜ் அதன் தலைவராகவும் பம்பாய் மாகாணத்தைச் சேர்ந்த பி.என்.ராஜ்போஜ் அதன் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தனர். ஐஎல்பி, 1930-ல் தொடங்கிய டிசிஎஃப்பில் எது இந்திய குடியரசுக் கட்சியாக மலர்ந்தது என்பதில் சர்ச்சை உண்டு. குடியரசுக் கட்சி, பலமுறை பிளவுபட்டிருக்கிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகள் ‘குடியரசுக் கட்சி’ என்ற பொதுப் பெயருடன் ஒரு நேரத்தில் இருந்தன. பிரகாஷ் அம்பேத்கரின் ‘படிபா பகுஜன் மகாசங்’ என்ற அமைப்பைத் தவிர பிற குடியரசுக் கட்சிகள், இந்தியக் குடியரசுக் கட்சி (ஐக்கியம்) என்ற பெயரில் இணைந்தன. அதிலிருந்து கவாய் தலைமையில் ஒரு பிரிவும் ராம்தாஸ் அதாவாலே தலைமையில் ஒரு பிரிவும் பிறகு பிரிந்துவிட்டன. பகுஜன் சமாஜ் கட்சியைத் தொடங்கிய கான்சி ராம், இந்தியக் குடியரசுக் கட்சியில் எட்டு ஆண்டுகள் செயல்பட்டவர். - ஜூரிகல்விச்சோலை

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 1 April 2019

பொது அறிவு குவியல்,

1. செல்வச் சுரண்டல் கோட்பாடு தந்தவர் யார்?

2. சூரிய குடும்பத்தில் கிழக்கில் இருந்து மேற்காகச் சுழலும் ஒரே கோள் எது?

3. சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் எங்குள்ளது?

4. இந்தியாவின் ரூர் என்று அழைக்கப்படும் நதி பள்ளத்தாக்கு எது?

5. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் மனசாட்சி என்று அழைத்தவர் யார்?

6. வணிக வங்கிகள் ஆர்.பி.ஐ. வங்கியில் வைத்திருக்க வேண்டிய டெபாசிட் எப்படி அழைக்கப்படுகிறது?

7. அணுவியல் கடிகாரங்களில் பயன்படும் உலோகம் எது?

8. புறஊதாக்கதிர்களை தடுக்க வல்ல கண்ணாடி எது?

9. பூக்கும் தாவர வகை எப்படி அழைக்கப்படுகிறது?

10. மனிதனின் கைரேகைகளை ஒத்த கைரேகை கொண்ட குரங்கினம் எது?

விடைகள்

1. தாதாபாய் நவுரோஜி, 2. வெள்ளி, 3. ஆந்திரா, 4. தாமோதர், 5. நேரு, 6. சி.ஆர்.ஆர்., 7. சீசியம், 8. குரூக்ஸ், 9. ஆங்சியோஸ்பெர்ம், 10. உராங்உடான்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இணையம்

உலகிலுள்ள பல கணிப்பொறிகளை ஒன்றாக இணைப்பது இணையம் (இன்டர்நெட்)

இன்டர்நெட்டின் முன்னோடி ARPANET

ARPANET 1969-ல் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது.

arpanet : Advanced research Project Agency Network

INTERNET என்பது international network என்ற சொற்சுருக்கங்களின் இணைப்பாக உருவாக்கப்பட்டதாகும்.

ARPANET உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட மென்பொருள் TELNET

FTP (File Transmission Protocol) என்பது பழைய இணைய மென்பொருள்களில் ஒன்று.

அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இணைத்தது USENET

பல கணினிகளை இணைக்கும் IP (internet protocol) 1979-ல் உருவாக்கப்பட்டது.

NSFNET என்பது 1986ல் உருவாக்கப்பட்டது.

www என்பது 1991-ல் உருவாக்கப்பட்டது. www என்பது world wide web வையக விரிவு வலை எனப்படுகிறது. இதை உருவாக்கியவர் டிம்பெர்னர்ஸ் லீ.

www. ஜெனீவாவில் உள்ள ஐரோப்பிய உயராற்றல் இயற்பியல் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.

நகரும் படங்கள், ஒலி, ஒளி, திரைப்படங்கள் போன்ற பலவிதமான கோப்புகளின் தகவல் பரிமாற்றத்திற்கு ஏற்றதாக அமைந்ததால் www இணையம் வெகுவேகமாக பிரபலமானது.

இன்டர்நெட்டை பயன்படுத்துவோர் நெட்டிசன் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இன்டர்நெட்டை குறிக்கும் மற்றொரு சொல் சைபர் வெளி.

இன்டர்நெட்டில் நமக்குத் தேவையான தகவலைத் தேடிப் பெற உதவுபவை தேடு எந்திரங்கள்,

புகழ்பெற்ற இன்டர்நெட் தேடுபொறிகள் கூகுள், பிங்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
பூமியின் வயது 460 கோடி வருடங்கள்

பூமியின் மொத்த பரப்பளவு 509.7 மில்லியன் சதுர கிலோமீட்டர்

பூமியின் நிலப்பரப்பு 29 சதவீதம், நீர்ப்பரப்பு 71 சதவீதம்

பூமியின் மேற்பரப்பில் காணப்படும் முக்கிய தனிமம் ஆக்சிஜன் (46.6 சதவீதம்)

பூமியின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ்

சூரியக்கதிர்வீதித் தளத்திலிருந்து பூமி அச்சின் சாய்வு 23½ டிகிரி

பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ./விநாடி

சூரியனிடமிருந்து புவியின் சராசரி தூரம் - 150 மில்லியன் கி.மீ.

சூரியனிடமிருந்து பூமியின் அதிகபட்ச தூரம் 152 மில்லியன் கி.மீ.

பூமியின் அப்ஹீலியன் தூரம் நிகழும் நாள் ஜூலை 2 மற்றும் ஜூலை 5க்கு இடையில்.

சூரியனிலிருந்து பூமியின் குறைந்தபட்ச தூரம் பெரிஹீலியன் 147 மில்லியன் கி.மீ.

பூமியின் பெரிஹீலியன் தூரம் நிகழும் நாள் ஜனவரி 2 மற்றும் 5-ந் தேதிக்கு இடையில்.

பூமியின் நிலநடுக்கோட்டு சுற்றளவு 40,067 கி.மீ.

பூமியின் துருவப்பகுதி சுற்றளவு 40 ஆயிரம் கி.மீ.

இரவு பகல் கால அளவு சமமாக இருப்பது சமநிலை நாள் எனப்படும்.

பூமியின் சமநிலை நாட்கள் மார்ச் 21, செப்டம்பர் 23

புவியின் மையப்பகுதி, திட உள்ளகம்

புவியின் உள்ளகத்தை சுற்றிய பகுதி புறக்கூடு.

புவியைப் பாதுகாக்கும் கவசப்போர்வை - வளிமண்டலம்

வளிமண்டல அடுக்குகள் டிரபோஸ்பியர், ஸ்ட்ரடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE