Monday 4 March 2019

செம்மொழி

செம்மொழி தமிழாய்வு நிறுவனம்.
செம்மொழி தகுதி என்பது மொழியியல் அறிஞர்களால் தீர்மானிக்கப்படுகிறது. உலகிலுள்ள ஆறாயிரம் மொழிகளில் ஆறு மொழிகள் செம்மொழிகளாக கருதப்படுகின்றன.

கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஆறும் செம்மொழிகளாகும்.

செம்மொழிகள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதும், இலக்கிய வளமும் கொண்டவை.

பாலி, அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளும் செம்மொழிகளாக கருதப்படுவது உண்டு.

2 ஆயிரம் ஆண்டு தொன்மை, சுயசிந்தனையில் உருவான இலக்கிய வளம், தனித்த பண்பாடு, தனித்து இயங்கும் தன்மை, தனித்தன்மை, பிற மொழிகளை உருவாக்கிய தாய்த்தன்மை ஆகியவை செம்மொழிகளுக்குரிய முக்கிய தகுதிகளாகும்.

உலக செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ் என்ற நூலில் செம்மொழிக்குரிய பதினோரு தகுதிகளை பட்டியலிடுகிறார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.

‘செம்மொழி உள்ளும் புறமும்’ என்ற நூலில் செம்மொழிக்குரிய பதினோரு தகுதிகளை பட்டியலிடுகிறார் தமிழறிஞர் மணவை முஸ்தபா.

இந்திய அரசாங்கம் 2004-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் நாள் தமிழைச் செம்மொழியாக அறிவித்து அரசாணை வெளியிட்டது.

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட தொடங்கியது.

உலக தமிழ்ச்செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு ஜூன் 23 முதல் 27-ந் தேதி வரை கோவையில் நடைபெற்றது.

செம்மொழிக்கான அரசாணையில் குறைந்தபட்சம் ஆயிரம் ஆண்டு பழமையான இலக்கியம் வளம் கொண்ட மொழிகள் செம்மொழிகளாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்ற கருத்தை பரிதிமாற் கலைஞர் 1897-ல் அவர் எழுதிய தமிழ் மொழி வரலாறு என்ற நூலில் முதன் முதலாக விளக்கி உள்ளார்.

தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குடகு, துளு ஆகிய ஆறு மொழிகளும் வடமொழியிலிருந்து தோன்றியவை அல்ல என்ற கருத்தை அயர்லாந்து நாட்டுமொழியியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் 1858-ல் அவர் வெளியிட்ட ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற நூலில் விளக்கி உள்ளார்.

No comments: