Friday 15 March 2019

தமிழக சட்ட மேலவை

தமிழகத்தின் சட்ட மேலவை 1986-ம் ஆண்டு கலைக்கப்பட்டது. சட்ட மேலவையை மீண்டும் உருவாக்குவதற்கான தமிழக சட்டப் பேரவையின் தீர்மானத்துக்கு 2010-ம் ஆண்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இன்னும் மேலவை உருவாக்கப்படவில்லை. ஆந்திர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் சட்ட மேலவை உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின்படி சட்ட மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குக்கு மேல் இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ராஜ்ய சபாவைப் போலவே ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது சட்டமேலவை.

சட்ட மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கை, உள்ளாட்சி அமைப்புகள் தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கினை மாநில சட்டப்பேரவை தேர்ந்தெடுக்கும். பன்னிரண்டில் ஒரு பங்கினரை பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு செய்வார்கள். மேலும் பன்னிரண்டில் ஒரு பங்கினரை இடைநிலை அதற்கு மேற்பட்ட கல்விக்கூட ஆசிரியர்கள் தேர்வு செய்வார்கள்.

ஆறில் ஒரு பங்கினர் ஆளுநரால் நியமிக்கப்படுவார்கள்.

No comments: