Saturday 16 February 2019

சிந்துசமவெளி மக்களின் தொழில்கள்

* சிந்து சமவெளி நாகரிக மக்கள் நெல் பயிரிட்டதற்கான ஆதாரம் லோத்தல் நகரில் கிடைத்துள்ளது.

* பானை செய்யும் கலையை அவர்கள் அறிந்திருந்தனர். சிவப்பு, கருப்பு பானைகள் கண்டறியப்பட்டுள்ளன.

* பருத்தி, நெல், கோதுமை, பேரீச்சை, கடுகு, பார்லியை பயிரிட்டனர்.

* உலகிலேயே முதன் முதலாக பருத்தி பயிரிட்டவர்கள் சிந்து சமவெளி மக்களே ஆவர்.

* பருத்தி, கிரேக்கர்களால் சின்டோன் என்று குறிப்பிடப்பட்டது.

* சிந்து சமவெளி நாகரிகம் செம்பு காலத்தைச் சேர்ந்தது.

* தாமிரம் மற்றும் வெண்கலத்தாலான கருவிகளை அவர்கள் பயன்படுத்தினர்.

* உலோகங்களில் இரும்பையும், விலங்குகளில் குதிரையையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

* 1972-ல் ஜெ.பி.ஜோஷி குழுவினரால் குஜராத்திலுள்ள சூர்கோட்டா என்ற இடத்தில் சிந்து சமவெளி கால குதிரை எலும்புகள் கிடைத்துள்ளன.

* சன்குதாராவில் ஹரப்பா கால மற்றும் முந்தைய ஹரப்பா கால சான்றுகள் கிடைத்துள்ளன.

* தங்கம், வெள்ளி, தாமிரம், வெண்கலம் ஆகியவற்றின் பயனை இந்த மக்கள் அறிந்திருந்தனர்.

* தாயம், சூதாடுதல் இவை சிந்துசமவெளி மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்துள்ளன.

* சிந்துசமவெளி மக்கள் தாமிரத்தை பயன்படுத்தியதில் இருந்து அந்த நாகரிகம் ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது என தெரிகிறது.




No comments: