சமணம்

சமண சமயத்தை உருவாக்கியவர் வர்த்தமான மகாவீரர்.

மகாவீரர் வைசாலியில் உள்ள குந்டக் கிராமத்தில் பிறந்தார்.

24-வது கடைசி தீர்த்தங்கராக கருதப்படுபவர் மகாவீரர்.

தீர்த்தங்கரர் என்ற வார்த்தைக்கு கோட்டை கட்டுபவர் என்று பொருள்.

முதல் தீர்த்தங்கரர் ரிஷபா.

23-வது தீர்த்தங்கரர் பர்ஷவனாதா.

திருவள்ளுவரை சமணர் என்று கருதுபவர்கள் முதல் திருக்குறளில் வரும் ஆதிபகவன் என்பது முதல் தீர்த்தங்கரான ரிஷபதேவரை குறிப்பதாக கொள்வார்கள்.

மகாவீரர் சால் மரத்தடியில் ஞானம் பெற்றபின் ‘ஜினா’ என்ற அழைக்கப்பட்டார்.

ஜினா என்றால் வெற்றி பெற்றவர் என்று பொருள். இந்தச் சொல்லில் இருந்து ஜைனம் என்ற பெயர் உருவானது.

சமண சமயத்தில் இரு பிரிவினர் திகம்பரர் மற்றும் ஸ்வேதாம்பரர்.

ஆடை அணியாத திகம்பரர்களின் தலைவர் பத்ரபாகு.

வெண்ணிற ஆடை அணிந்த ஸ்வேதாம்பரர்களின் தலைவர் ஸ்தலபாகு.

சமண சமயம் திகம்பரர்களால் தென்னிந்தியாவிலும், ஸ்வேதாம்பரர்களால் வட இந்தியாவிலும் பரவியது.

ராஜஸ்தானில் மவுன்ட் அபுவில் உள்ள தில்வாரா ஜெயின் கோயிலும், கர்நாடகத்திலுள்ள சிரவணபெலகோலாவும் சமணர்களின் புனிதத் தலங்கள்.

Comments