Tuesday 19 February 2019

புகழ்மிகு மேற்கோள்கள்

“உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” - பாரதியார்.

“மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” - பாரதியார்.

“தமிழெனன்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” - நாமக்கல் கவிஞர்.

“கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” - நாமக்கல் கவிஞர்.

“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” - நாமக்கல் கவிஞர்.

“மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல, மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”

- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

“செய்யும் தொழிலே தெய்வம்” - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.” - மனோன்மணியம் சுந்தரனார்.

“தம்பியுடையான் படைக்கு அஞ்சான்” - மனோன்மணியம் சுந்தரனார்.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழின்பத் தமிழ் எங்கள்

உயிருக்கு நேர்.” - பாரதிதாசன்.

“சாவில் தமிழ் படித்து சாக வேண்டும்

எந்தன் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” - சச்சிதானந்தன்.

No comments: