Saturday 23 February 2019

கடந்து வந்த பாதை - பிப்ரவரி 9-15

  • சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். (பிப்ரவரி 9)
  • பாரத ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 1ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 206 கோடி டாலர் உயர்ந்து 40 ஆயிரத்து 24 கோடி டாலராக அதிகரித்தது. ஜனவரி 25ம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய வாரத்தில் அது 150 கோடி டாலர் உயர்ந்து 39 ஆயிரத்து 818 கோடி டாலராக இருந்தது. (பிப்ரவரி 9)
  • ராஜஸ்தான் மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் மக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைத்த போராட்டக்காரர்களை போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர். (பிப்ரவரி 10)
  • ஹாமில்டனில் நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது. 2 1 என்ற கணக்கில் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது. (பிப்ரவரி 10)
  • காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் பலியானார்கள். அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. (பிப்ரவரி 10)
  • ககன்யான்’ திட்டம் மூலம் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பு வதற்காக விமானப் படையைச் சேர்ந்த 10 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறினார். (பிப்ரவரி 11)
  • 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஓர் இடம் முன்னேறி 2வது இடத்தைப் பிடித்தார். (பிப்ரவரி 11)
  • தமிழகத்தின் ஒப்புதல் இன்றி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டக்கூடாது என்று கேரளாவுக்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, தமிழக அரசின் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தது. (பிப்ரவரி 11)
  • தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகவும், அனுமதியின்றியும் செயல்படும் 3 ஆயிரத்து 326 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூடுமாறு தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டது. (பிப்ரவரி 12)
  • டெல்லி சொகுசு ஓட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 17 பேர் உடல் கருகி பலியானார்கள். அவர்களில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். (பிப்ரவரி 12)
  • தமிழகத்தில் ‘டிக் டாக்’ செயலி தடை செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவித்தார். (பிப்ரவரி 12)
  • நாட்டில் ஜனவரி மாதத்தில் சில்லறை விற்பனை விலை பணவீக்கம் 2.05 சதவீதமாக குறைந்தது. டிசம்பர் மாத பணவீக்கம் 2.19 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டது. (பிப்ரவரி 12)
  • காங்கிரஸ் ஆட்சியில் பேசப்பட்டதைவிட, பாரதீய ஜனதா அரசு செய்த ஒப்பந்தப்படி ரபேல் போர் விமான விலை குறைவானது என்று தலைமை கணக்கு தணிக்கையர் அறிக்கையில் தகவல் வெளியானது. (பிப்ரவரி 13)
  • கிரண்பெடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கவர்னர் மாளிகை முன்பு புதுச்சேரி முதல்அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். (பிப்ரவரி 13)
  • தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ. 100 முதல் ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. (பிப்ரவரி 13)
  • ரபேல் விவகாரத்தை முன்னிறுத்தி நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். (பிப்ரவரி 13)
  • புதிதாக உருவாகும் ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளை அமைப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. (பிப்ரவரி 13)
  • மோசடி சீட்டு நிறுவனங்களை ஒடுக்கும் மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது. (பிப்ரவரி 13)
  • காஷ்மீரில் 40 வீரர்கள் பலிக்குக் காரணமான பயங்கரவாதி களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசத்துடன் கூறினார். (பிப்ரவரி 15)
  • ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் (2018 ஏப்ரல் 2019 ஜனவரி) ரூ. 1.59 லட்சம் கோடியை புதிய பிரிமிய வருவாயாக ஈட்டி உள்ளன. இதில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு மட்டும் 66 சதவீதமாக உள்ளது. (பிப்ரவரி 15)
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணியில் இருந்து தமிழக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டார். தமிழக ஆல்ரவுண்டர் விஜய்சங்கர், அணியில் இடம் பிடித்தார். (பிப்ரவரி 15)



No comments: