மின்டோமார்லி சீர்திருத்தங்கள் 1909 :

இந்தியாவின் அரசப்பிரதிநதியான மின்டோ பிரபுவும் இந்திய அரசுச் செயலர் மார்லியும் இணைந்து இந்திய சட்டமன்றங்களைச் சீர்திருத்த திட்டம் வகுத்தனர். அதன்படி 1909ஆம் ஆண்டு இந்தியச் சட்ட மன்றங்கள் சட்டம், அல்லது மின்டோமார்லி சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இந்திய சட்டமன்றங்களின் செயல் பாடுகளில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. அச்சட்டத்தின்படி சட்டமன்றங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. முஸ்லிம்களுக்கென தனித் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை காங்கிரசு கடுமையாக எதிர்த்தது. பால், லால், பால் (Bal, Lal, Pal) அடங்கிய ­மூவர் தலைமையிலான அணி தங்கள் பேச்சினாலும், எழுத்தினாலும், இந்தியா முழுவதும் மக்களிடையே போராட்ட உணர்வைத் தூண்டியது. மாசினியின் "வாளை எடுத்து அரசை வீழ்த்து. ஏனெனில் அது அத்துமீறிய அன்னிய அரசு'' என்ற சொற்கள் இந்தியரின் மனதில் எதிரொலித்தது. உண்மையில் ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கையானது மிதவாதிகளை அரசிடம் மெத்தப் போக்குடையவர்களாக்கி, 1916ஆம் ஆண்டு நிடந்த லக்னோ மாநாட்டில் அவர்களைத் தீவிரவாதிகளுடன் மீண்டும் ஒன்று சேர வழி வகுத்தது.

Comments