Monday 14 January 2019

நூல் வகைகள்

* தொல்காப்பியம் நூல்களை, முதல் நூல், வழி நூல் என இருவகையாக பிரிக்கிறது.

* டாக்டர் பட்டம் பெற்றவர்களை அழைக்கும் முனைவர் என்ற சொல், ‘நினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்’ என்ற தொல்காப்பிய நூற்காப்பிலிருந்து பெறப்பட்டதாகும். ‘முனைவன்’ என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கூறுவதும் உண்டு.

* முதல் நூலின் கருத்தை சுருக்கியோ, விரித்தோ, சுருக்குதல் விரித்தல் இரண்டும் செய்தோ, மொழி பெயர்த்தோ எழுதப்படுவது வழி நூலாகும் என்று நால் வகை வழி நூல்கள் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார்.

* தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தலொட அனைமரபினவே என்பது வழி நூல்கள் வகை பற்றிய நூற்பா.

* கூறியது கூறல், குன்றக் கூறல், மிகபடக்கூறல் உள்ளிட்ட 10 வகை நூல் குற்றங்கள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

* தொகுத்து கூறுல், ஒப்புக்கூறல், ஞாபகம் கூறல், வந்தது கொண்டு வராதது உணர்த்தல் உள்ளிட்ட 32 நூல் உத்திகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

No comments: