Monday 21 January 2019

வளிமண்டலம்

புவியை பாதுகாக்கும் கவசப்போர்வை வளிமண்டலம்.

வளிமண்டல அடுக்குகள் டிரபோஸ்பியர், ஸ்டிரடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர்.

வானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு டிரபோஸ்பியர்.

டிரபோஸ்பியரில் வெப்பச்சாய்வு 6.4 டிகிரி செல்சியஸ்/கி.மீ.

டிரபோஸ்பியரின் தடிமன் நிலநடுக்கோட்டில் 16 கி.மீ. துருவத்தில் 8.கி.மீ.

ஸ்டிரடோஸ்பியர் டிரபோஸ்பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ. வரை பரவி உள்ளது.

ஸ்டிரடோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வெப்பச்சீர் அடுக்கு.

ஸ்டிரடோஸ்பியரில் ஓசோன் படலம் அமைந்தள்ளது.

வளிமண்டல அடுக்குகளிலேயே குளிர்ச்சியானது மீசோஸ்பியர்.

அயனோஸ்பியர் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.

அயனோஸ்பியர் மீசோஸ்பியருக்கு மேலே சுமார் 600 கி.மீ. வரை நீள்கிறது.

வளி மண்டலத்தில் சுமார் 85 முதல் 400 கி.மீ. வரை நீள்வது தெர்மோஸ்பியர்.

வளிமண்டலத்தின் வெளி அடுக்கான எக்சோஸ்பியர் 9600 கி.மீ. வரை நீள்கிறது.

எக்சோஸ்பியர் வெளிப்பகுதி மேக்னட்டோஸ்பியர் எனப்படும்.

No comments: