Tuesday, 29 January 2019

ஓய்வு வயது

இந்தியாவில் சில முக்கிய பொறுப்பு வகிப்பவர்களின் ஓய்வு வயதை அறிவோம்...

உயர்நீதிமன்ற நீதிபதி - 62

உச்ச நீதிமன்ற நீதிபதி - 65

தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் - 6 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் முதலில் வருவது

தலைமை தேர்தல் ஆணையர் - 6 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் முதலில் வருவது

மத்திய பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் - 6 ஆண்டுகள் அல்லது 65 வயது, இதில் முதலில் வருவது

மாநில பணியாளர் தேர்வாணைய குழு தலைவர் - 6 ஆண்டுகள் அல்லது 62 வயது, இதில் முதலில் வருவது

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சோப்பு

சோப்பு என்பது உயர் கொழுப்பு அமிலத்தின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பு.

உயர் கொழுப்பு அமிலத்தின் சோடியம் உப்பு, கடின சோப்பு எனப்படும்.

கடின சோப்பு துணிகளை துவைக்க பயன்படுகிறது.

உயர் கொழுப்பு அமிலத்தின் பொட்டாசியம் உப்பு மென்சோப்பு எனப்படும்.

மென்சோப்பு குளியலுக்குப் பயன்படுகிறது.

டிடர்ஜென்ட் என்பது சல்போனிக் அமிலத்தின் சோடியம் அல்லது பொட்டாசியம் உப்பு.

சோப்பு கடின நீரில் நுரையைத் தராது. டிடர்ஜென்ட் கடின நீரில் நுரையைத் தரும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பயிர் வகைகள்

உணவுப் பயிர் - நெல், கோதுமை, தானியங்கள்

பணப்பயிர் - கரும்பு, பருப்பு, வேர்க்கடலை

தோட்டப்பயிர் - தேயிலை, காபி, காய்கள், கனிகள், ரப்பர்

நார்ப்பயிர் - சணல், மெஸ்தா, பருத்தி

காரிப் பயிர் - நெல், கரும்பு, சிறுதானியங்கள்

ராபி பயிர் - பார்லி, கோதுமை, கடுகு

சயத் பயிர் - தர்பூசணி, வெள்ளரி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொருளாதார அமைப்புகள்

இந்தியாவில் நிதித்துறை அமைச்சகம் நாட்டின் நிதிக் கொள்கையை முடிவு செய்கிறது.

பட்ஜெட் எனப்படும் ஆண்டு வரவு செலவு அறிக்கையே நாட்டின் நிதிக் கொள்கையை எடுத்துக்காட்டும் முக்கிய அம்சமாகும்.

பட்ஜெட்டுக்கு முந்தைய நாள் நிதி அமைச்சகம், முந்தைய நிதி ஆண்டின் பொருளாதார ஆய்வு அறிக்கையை வெளியிடுகிறது.

இந்தியாவின் பணக்கொள்கையை மத்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.

நாட்டின் பணம் மற்றும் கடன் கொள்கையை 6 மாதத்துக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது.

ஐந்தாண்டு திட்ட உருவாக்கத்தில் ஆலோசனைகளை கூறுவது நிதி அயோக்கின் (முந்தைய திட்ட ஆணையம்) முக்கிய பணியாகும்.

ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதி அங்கீகாரம் அளிக்கும் பொறுப்பு தேசிய வளர்ச்சிக் கவுன்சிலிடம் உள்ளது.

மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து மாநில அரசுக்கு ஒதுக்க வேண்டிய நிதி அளவை நிர்ணயிப்பது நிதி ஆணையமாகும்.

நிதி ஆணையம் என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் அமைப்பினைச் சார்ந்த நிறுவனம் ஆகும்.

நிதி அயோக் (திட்ட ஆணையம்) என்பது அரசியல் அமைப்பில் சொல்லப்படாத பாராளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்படாத அமைச்சரவை தீர்மானத்தால் மட்டும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

பிரதமருக்கு பொருளாதார பிரச்சினைகளில் அறிவுரை கூறும் பொருளாதார ஆலோசனை கவுன்சில் 2000-ல் உருவாக்கப்பட்ட மற்றொரு அமைப்பாகும்.

நாட்டின் முதலீடுகளை பற்றி முடிவு செய்ய முதலீட்டு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நாட்டின் முக்கிய பொருளாதார கொள்கைகள் பிரச்சினைகள் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு அவ்வப்போது பொருளாதார சீர்திருத்த ஆலோசனைக் குழுக்கள், பொருளாதார வல்லுனர்கள் தலைமையில் அமைக்கப்படுகின்றன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி

வினாவங்கி

1. ஏலக்காயின் அறிவியல் பெயர் என்ன?

2. மின்சார தீயை அணைக்க உதவுவது எது?

3. நமது தேசிய கீதத்திற்கு இசை அமைத்தவர் யார்?

4. கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம் எது?

5. சிரப்தோல்மியா எந்த வைட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் நோயாகும்?

6. சர்வதேச குடும்ப தினம் எந்த நாளில்கடைப்பிடிக்கப்படுகிறது?

7. குளுக்கோஸ் பைருவிக் அமிலமாக மாறும் முறை எப்படி அழைக்கப்படுகிறது?

8. வியாசர் விருந்து உரைநடை நூலின் ஆசிரியர் யார்?

9. ஹெர்ரிங் குளம் என சிறப்பித்து அழைக்கப்படுவது எது?

10. அசோகரின் மனமாற்றத்திற்கு காரணமான புத்த பிட்சு யார்?

விடைகள்

1. எலிடேரியா கார்டமோமம், 2. கார்பன் டெட்ரா குளோரைடு, 3. ஹபீஸ் ஜலந்தாரி, 4. மைட்டோகாண்ட்ரியா, 5. வைட்டமின் ஏ, 6. மே 15, 7. கிளைக்காலைஸில் மாற்றம், 8. ராஜாஜி, 9. அட்லாண்டிக் கடல், 10. உபகுப்தர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 21 January 2019

நியூட்டன்

உலகப் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி.

ஆப்பிள் மரத்திலிருந்து விழுவதை நேரில் பார்த்து அது கீழே விழுவதும், மற்ற பொருட்கள் நிலையாக இயங்குவதும் புவியீர்ப்பு விசையால்தான் என்று கண்டறிந்தார்.

சூரிய ஒளி 7 வண்ணங்களால் ஆனது என்ற உண்மையை முதலில் கூறியவர் இவரே.

விசைக்கான அலகு இவர் பெயரால் அமைந்தது.

ஜி.டபுள்யு.லெப்னிஸ் என்பவரோடு சேர்ந்து கால்குலஸ் கருவியை உருவாக்கினார்.

பொருள்களின் இயக்கம் பற்றி மூன்று விதிகளை உருவாக்கினார்.

ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை ஒனறு உண்டு என்ற இவரின் மூன்றாம் விதி மிகவும் புகழ்பெற்றது.

‘பிரின்சிபியா மேதமேடிகா’ என்பது இவர் எழுதிய புகழ்பெற்ற நூல்.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பல்

மனிதனின் ஒவ்வொரு தாடையிலும் 4 வெட்டு, 2 கோரை, 4 முன் கடவாய்ப்பற்கள் உள்ளன.

20 வயதுக்கு மேல் முளைக்கும் கடைசி ஜோடி கடவாய் பற்களை அறிவுப்பற்கள் என்கிறோம்.

மனிதர்களுக்கான நிலையான பற்கள் 32, பால்பற்கள் 20.

crown, neck, root என்பவை பல்லின் மூன்று பகுதி களாகும்.

டெக்டைன், எனாமல் எனும் பொருட்களால் ஆனது பல்.

பல் எனாமல்தான் நம்உடம்பிலேயே மிகவும் கடினமான பொருள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஆட்சியியல் முதன்மைகள்

இந்தியாவின் ஆட்சியியல் துறையில் முதன்மை வகித்தவர்களைப் பற்றி அறிவோம்...

முதல் குடியரசு தலைவர் -டாக்டர் ராஜேந்திரபிரசாத்

முதல் குடியரசு துணைத் தலைவர் -டாக்டர் ராதாகிருஷ்ணன்

முதல் பிரதமர் -ஜவகர்லால் நேரு

முதல் துணை பிரதமர் - சர்தார் வல்லபாய் படேல்.

முதல் இந்திய தலைமை நீதிபதி- ஹிராலால் ஜே.கானியா.

முதல் தலைமைத் தேர்தல் ஆணையர் -சுகுமார் சென்.

முதல் மக்களவை சபாநாயகர் -ஜி.வி.மாவ்லாங்கர்.

முதல் ராஜ்யசபா துணைத் தலைவர் - எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி.

முதல் ஐ.சி.எஸ். அதிகாரி - சத்யேந்திரநாத் தாகூர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

வளிமண்டலம்

புவியை பாதுகாக்கும் கவசப்போர்வை வளிமண்டலம்.

வளிமண்டல அடுக்குகள் டிரபோஸ்பியர், ஸ்டிரடோஸ்பியர், மீசோஸ்பியர், அயனோஸ்பியர்.

வானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு டிரபோஸ்பியர்.

டிரபோஸ்பியரில் வெப்பச்சாய்வு 6.4 டிகிரி செல்சியஸ்/கி.மீ.

டிரபோஸ்பியரின் தடிமன் நிலநடுக்கோட்டில் 16 கி.மீ. துருவத்தில் 8.கி.மீ.

ஸ்டிரடோஸ்பியர் டிரபோஸ்பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ. வரை பரவி உள்ளது.

ஸ்டிரடோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வெப்பச்சீர் அடுக்கு.

ஸ்டிரடோஸ்பியரில் ஓசோன் படலம் அமைந்தள்ளது.

வளிமண்டல அடுக்குகளிலேயே குளிர்ச்சியானது மீசோஸ்பியர்.

அயனோஸ்பியர் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.

அயனோஸ்பியர் மீசோஸ்பியருக்கு மேலே சுமார் 600 கி.மீ. வரை நீள்கிறது.

வளி மண்டலத்தில் சுமார் 85 முதல் 400 கி.மீ. வரை நீள்வது தெர்மோஸ்பியர்.

வளிமண்டலத்தின் வெளி அடுக்கான எக்சோஸ்பியர் 9600 கி.மீ. வரை நீள்கிறது.

எக்சோஸ்பியர் வெளிப்பகுதி மேக்னட்டோஸ்பியர் எனப்படும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு குவியல்,

வினாவங்கி

1. ஒப்பியல் இலக்கியம் யாரால் எழுதப்பட்டது?

2. தமிழகத்தில் போர்வை உற்பத்திக்கு புகழ்பெற்ற இடம் எது?

3. டெர்பி கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

4. தமிழக அரசு சிறந்த நடிகருக்கு வழங்கும் விருதின் பெயர் என்ன?

5. குடிமக்கள் காப்பியம் என சிறப்பித்து அழைக்கப்படும் நூல் எது?

6. தாகூர் நடத்திய பத்திரிகையின் பெயர் என்ன?

7. பிராணவாயு இல்லாத ரத்தம் எதில் கடத்தப்படுகிறது?

8. 21-வது உடல் குரோமோசோம் ஜோடியில் புதிதாக ஓர் ஒற்றை குரோமோசோம் சேர்வதால் ஏற்படும் குரோமோசோம் பிறழ்ச்சி எப்படி அழைக்கப்படுகிறது?

9. மாஞ்சிபெரா இண்டிகா என்பது எந்த தாவரத்தின் அறிவியல் பெயர்?

10. பல் இடைவெளியை அடைக்கப் பயன்படும் உலோக கலவை எது?

விடை–கள்

1. கைலாசபதி, 2. சென்னிமலை, 3. குதிரைப்பந்தயம், 4. எம்.ஜி.ஆர்.விருது, 5. சிலப்பதிகாரம், 6. தத்வபோதினி, 7. சிரைகள், 8. டவுன்சிண்ட்ரோம், 9. மாமரம், 10. வெள்ளி ரசக்கலவை.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 14 January 2019

மூளை நரம்புகள்...

பெருமூளை நினைவாற்றல் மற்றும் சிந்தனையை கட்டுப்படுத்துகிறது.

பெருமூளை இரு அரைக்கோளங்களாக காணப்படுகிறது.

பெருமூளையின் வலது அரைக் கோளம் படைப்பாற்றல் சிந்தனையுடன் தொடர்புடையது

இடது அரைக்கோளம் நினைவாற்றல், தர்க்கசிந்தனையுடன் தொடர்புடையது.

பெருமூளையின் இரு அரைக்கோளங்களை இணைப்பது கார்பஸ் கலோசம்.

சிறுமூளை தசை ஒருங்கிணைப்பை கட்டுப்படுத்துகிறது.

சிறுமூளை பாதிக்கப்படுவதால் குடிகாரர்கள் தள்ளாடுகின்றனர்.

உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஹைப்போதலாமஸ்.

மூளையிலுள்ள திரவம் செரிபரோ ஸ்பைனல் திரவம்.

மூளையைச் சுற்றியுள்ள உறையின் பெயர் மெனின்ஜெஸ்.

அனிச்சை செயலைக் கட்டுப்படுத்துவது தண்டுவடம்.

கபால நரம்புகளின் எண்ணிக்கை 12 ஜோடி.

தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை 31 ஜோடி.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

குஷாணர்கள்

குஷாணர்கள் யூச்சி என்ற பழங்குடியினத்தை சார்ந்தவர்கள்.

குஷாண வம்சத்தின் முதல் அரசர் முதலாம் கட்பீசஸ்.

கி.பி.78-ல் அரசு ஏற்ற குஷாண அரசரான கனிஷ்கர், சக ஆண்டை தொடங்கினார்.

கனிஷ்கரின் தலைநகர் புருஷபுரம் (பெஷாவர்)

கனிஷ்கர் கைப்பற்றிய சீனப்பகுதிகள் காஷ்கர், யார்க்கண்ட், கோட்டான்.

கனிஷ்கர் 4-வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.

கனிஷ்கர் பின்பற்றிய புத்தமத பிரிவு மஹாயானம்.

அஷ்வகோஷர் புத்த சரிதம் என்ற நூலை எழுதினார்.

கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் அவரை ‘இரண்டாம் அசோகர்’ என்று அழைத்தனர்.

கனிஷ்கர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற புத்த துறவிகள் வசுமித்திரர், அஷ்வகோஷர், நாகார்ஜூனர்.

கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.

சுஷ்ருதர், பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சரகர் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. ரத்தத்தில் சோடியம் அளவைப் பராமரிக்கும் ஹார்மோன் எது?.

2. மின்கடத்து திறன் இல்லாத உலோகம் எது?

3. கடல் தாவரங்களில் இருந்து கிடைக்கும் முக்கிய தாதுப்பொருள் எது?

4. அணுவியல் கடிகாரங்களில் பயன்படுவது எது?

5. அரசியலமைப்பு சட்ட மறு ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட கமிட்டி எது?

6. குப்பை மேனியில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?

7. சிலிகன்-டை-ஆக்சைடு என்பது எதன் அறிவியல் பெயர் ?

8. பால்உற்பத்திக்கு காரணமான ஹார்மோன் எது?

9. கோத்தகிரியை பூர்விகமாக கொண்ட பழங்குடியினத்தவர்கள் யார்?

10. சோழர்கள் கட்டிய கோவில்களின் சிறப்பு அம்சமாக கருதப்படுவது எது?

விடைகள்

1. ஆல்டிஸ்டிரோன், 2. பிஸ்மத், 3. அயோடின், 4. சீசியம், 5. வேங்கடாசலய்யா கமிட்டி, 6. அகலிபா, 7. மணல், 8. புரோலாக்டின், 9. கோடர்கள், 10. கோபுர விமானங்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தொழில் நகரங்கள்

இந்தியாவின் முக்கிய நகரங்களையும், அங்குள்ள புகழ்பெற்ற தொழில் வளங்களையும் அறியலாம்...

அம்பாலா (அரியானா) - அறிவியல் உபகரணங்கள்

அலிகார் (உத்தரபிரதேசம்) - பூட்டு தயாரிப்பு

ஆக்ரா (உ.பி.) - தோல் பொருட்கள் மற்றும் பளிங்கு கல் தொழிற்சாலைகள்

ஹரித்வார் - கனரக மின் பொருட்கள்

கலிம்பாங் (அசாம்) - கம்பளிப் பொருட்கள்

கட்னி (உ.பி.) - சிமெண்ட் தொழிற்சாலைகள்

குண்டூர் (ஆந்திரா) - புகையிலை உற்பத்தி

கொச்சி (கேரளா) - கப்பல் கட்டுதல்

கோழிக்கோடு (கேரளா) - ரப்பர் தொழில்

சகரான்பூர் (உ.பி.) - காகிதம், சிகரெட் உற்பத்தி

சூரத் (குஜராத்) - பட்டு, பருத்தி தொழில்கள்

சித்தரஞ்சன் - ரெயில் என்ஜின் தயாரிப்பு

மணலி - எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

பெரம்பூர் - இணைப்பு ரெயில்பெட்டிகள்

டால்மியா (பீகார்) - சிமெண்ட் தொழிற்சாலை

டார்ஜிலிங் - தேயிலை மற்றும் ஆரஞ்சு

வாரணாசி - டீசல் ரெயில் என்ஜின் தயாாிப்பு


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நூல் வகைகள்

* தொல்காப்பியம் நூல்களை, முதல் நூல், வழி நூல் என இருவகையாக பிரிக்கிறது.

* டாக்டர் பட்டம் பெற்றவர்களை அழைக்கும் முனைவர் என்ற சொல், ‘நினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்’ என்ற தொல்காப்பிய நூற்காப்பிலிருந்து பெறப்பட்டதாகும். ‘முனைவன்’ என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கூறுவதும் உண்டு.

* முதல் நூலின் கருத்தை சுருக்கியோ, விரித்தோ, சுருக்குதல் விரித்தல் இரண்டும் செய்தோ, மொழி பெயர்த்தோ எழுதப்படுவது வழி நூலாகும் என்று நால் வகை வழி நூல்கள் பற்றி தொல்காப்பியர் கூறுகிறார்.

* தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தலொட அனைமரபினவே என்பது வழி நூல்கள் வகை பற்றிய நூற்பா.

* கூறியது கூறல், குன்றக் கூறல், மிகபடக்கூறல் உள்ளிட்ட 10 வகை நூல் குற்றங்கள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

* தொகுத்து கூறுல், ஒப்புக்கூறல், ஞாபகம் கூறல், வந்தது கொண்டு வராதது உணர்த்தல் உள்ளிட்ட 32 நூல் உத்திகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பயன்மிகு அமிலங்கள்

முக்கியமாக பயன்பாட்டில் உள்ள அமிலங்கள் பற்றி அறிவோம்...

எறும்பு கடிக்கும்போது உடலில் செலுத்தப்படுவது பார்மிக் அமிலம்.

புளித்த கஞ்சியில் இருப்பது அசிட்டிக் அமிலம்.

எலுமிச்சம் பழத்தில் காணப்படுவது சிட்ரிக் அமிலம்.

புளி மற்றும் திராட்சையில் உள்ளது டார்டாரிக் அமிலம்.

மயக்க மருந்தாக உதவுவது பார்பியூச்சிரிக் அமிலம்.

பினாப்தலின் தயாரிக்க உதவுவது தாலிக் அமிலம்.

பீனாலின் வேறு பெயர் கார்பாலிக் அமிலம்.

கலோரிமீட்டரில் பயன்படுத்தப்படுவது பென்சாயிக் அமிலம்.

தங்கத்தை கரைக்க பயன்படுவது ராஜதிராவகம்.

அமில மழையில் காணப்படுவது கந்தகம் மற்றும் நைட்ரிக்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு | வினா வங்கி,

1. தமிழகத்தில் இரும்புத்தாது மிகுதியாக கிடைக்கும் இடங்கள் எவை?

2. மெஸ்தா எந்த வகை பயிராகும்?

3. கண்டவிலக்கத்திற்கு முன்பு தோன்றிய மலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?

4. மக்காச்சோளம், அரிசி, கடுகு இவற்றில் எது கோடையில் விளைவதில்லை?

5. உலகின் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டம் கொண்ட நாடு எது?

6. 4 முறை அமெரிக்க அதிபராக இருந்தவர் யார்?

7. டோக்ரி மொழி எந்த மாநிலத்தில் பேசப்படுகிறது?

8. கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் எவ்வளவு?

9. நவீன தனிமவரிசை அட்டவணையின் முதல் தொடரில் இடம் பெறும் இரு தனிமங்கள் எவை?

10. பூச்சி இனங்கள் பொதுவாக எத்தனை கால்களை கொண்டிருக்கும்?

விடைகள்

1. கஞ்சமலை, தீர்த்தமலை, 2. நார்ப் பயிர், 3. பழைய மடிப்பு மலைகள், 4. கடுகு, 5. இந்தியா, 6. பிராங்கிளின் ரூஸ்வெல்ட், 7. ஜம்மு காஷ்மீர், 8. வினாடிக்கு 2x108, 9. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம், 10. 6 கால்கள்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE