Monday 24 December 2018

தாவர வினோதங்கள்

தாம் வளரும் இடத்தின் கனிம வளத்தை காட்டும் தாவரங்கள் நிலைக்காட்டி தாவரங்கள் எனப்படுகிறது.

ஈகுசீட்டம், ஆஸ்ட்ராகாலஸ் போன்றவை முக்கிய நிலைக்காட்டி தாவரங்கள்.

தங்கம் இருக்கும் இடத்தை காட்டும் தாவரம், ஈகுசிட்டம் ஆர்வன்சிஸ்.

வெள்ளி இருப்பதை காட்டும், தாவரம் ஆஸ்ட்ராகாலஸ்.

நைட்ரஜன் சத்து குறைந்த மண்ணில் வளரும் தாவரங்கள் பூச்சி உண்ணும் பண்பை கொண்டுள்ளன.

சாறுண்ணித் தாவரங்கள் மட்கிய பொருட்களில் இருந்து உணவை உறிஞ்சுபவை.

உயிருள்ள பிற தாவரங்களில் இருந்து உணவை உறிஞ்சிக் கொள்பவை ஒட்டுண்ணித் தாவரங்கள். கஸ்கியூட்டா, வாண்டா போன்றவை ஒட்டுண்ணி தாவரங்களாகும்.

மைமோசா புடிகா என்பது தொட்டால் சிணுங்கி தாவரமாகும்.

காரட், முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு ஆகியவை வேரின் மாற்றுருக்களாகும்.

வெங்காயம் , பூண்டு, உருளைக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் போன்றவை தண்டின் மாற்றுருக்களாகும்.

No comments: