நெடுநல்வாடை

நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. வாடை என்பது வடக்குத் திசையிலிருந்து வீசும் குளிர்காற்று. இந்த குளிர்காற்று தலைவனைப் பிரிந்து துயருற்று வாடும் அரண்மனை அரசியாகிய தலைவிக்கு நெடியதாகவும், போர் பாசறையில் வீரர் களுக்கு ஆறுதல் கூறி வெற்றி நோக்கில் போரினை நகர்த்தும் அரசனாகிய தலைவனுக்கு நல்லதாகவும், அமைதல் நெடுநல்வாடை என்று நயமாகப் பெயரிட்டுள்ளார் நக்கீரர்.

இந்த நூலில் வாடைக்காற்றின் வர்ணனை மிகச்சிறப்பாக உள்ளது.

188 அடிகளில் அமைந்து, தலைவன் தலைவி பெயர் சுட்டாமல் பெரிதும் தலைவியின் காதல் துயரினைப் பாடும் இந்தப் பாடல் அகப்பாடலாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாசறை வர்ணனையில் ‘வேம்பு தலைக்காத்த நோன்காழ் எஃகம்’ என்று பாண்டியனின் அடையாளப்பூவான வேப்பமாலை சூடிய வேல் என்ற வரி இடம் பெற்றுவிட்டதால் பாண்டியனின் குடியைச் சுட்டும் இந்தப் பாட்டை புறப்பாடல் வரிசையில் சேர்க்கிறார் உரையாசிரியர் நச்சினார்கினியர். எனவே பத்துப்பாட்டு நூல்களில் அகமா புறமா என்ற சர்ச்சைக்குரிய நூலாக தொடர்ந்து வரும் நூல்! நெடுநல்வாடை ஆகும்.

Comments