நடப்பு நிகழ்வுகள் 2018

ஆசிய விளையாட்டு 2018:
68 கிலோ எடைப் பிரிவில் மலயுத்தத்தில் திவ்யா கக்ரான் வெண்கல்ப் பதக்கத்தை வென்றார்.
10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிசுற்றில் தங்கப் பதக்கம் வென்றார் சௌரப் சவுரப்  மற்றும் அதே போட்டியில் வெண்கலம் வென்றார் அபிஷேக் வர்மா.
50 மீ ரைபிள் 3 நேர்காணலில் சஞ்சீவ் ராஜ்புட் வெள்ளி பதக்கம் வென்றார். 
18-வது ஆசிய  ஹாக்கி போட்டியில் ஆகஸ்ட் 22,2018 இல் இந்திய அணி ஹாக்கி அணியுடன் 26 கோல் அடித்து வென்று புதிய சாதனை படைத்தது.
25 மீ  ஏர்பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் இந்தியப் பெண்  என்னும் சாதனை ரகி சர்னோபத் பெற்றார்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானின் முதல்வர்  பாமாஷா டெக்னோ ஹப் என்னும் தொழிற்பேட்டை பகுதியினை ஜெய்பூரில் தொடங்கியுள்ளார்.
நாட்டின் மிகப்பெரிய அனைத்து வசதிகளையும் கொண்ட நவீன  தொழில்நுட்பம் நிறைந்த பகுதியில் 700க்கு  மேற்பட்ட  வணிக நிறுவனங்கள் தங்கள் கனவு தொழிற்சாலைகளை இங்கு அமைக்கலாம்.

ஜப்பான் உதவியுடன் மேக் இன் ஒடிசா:
ஜப்பானின் உதவியுடன் மேக் இன் ஒடிசா என்ற ஒப்பந்ததை ஒடிசா அரசு தொடங்கியுள்ளது. 2018-இல் நவம்பர் மாதத்தில் மிகப்பெரிய தொகையுடன் அந்த திட்டங்கள் பணிகளாக தொடங்கும் என ஒடிசா மாநில அரசு அறிவிப்பு.

ஜப்பானின் தொழில் வல்லுநர்களுக்காக 600 ஏக்கரில் முதலீட்டு சிட்டி ஒதுக்கியுள்ளது ஒடிசா மாநிலம். அங்கு தொழில்நுட்ப பூங்காக்களை ஜப்பான் நிறுவனங்கள்  முதலீடு செய்யலாம்.

புத்தபிட்சுகளின் கூட்டம் 2018:
உலக அளவிளான புத்த பிட்சுகளின் கூட்டத்தினை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்  சுற்றுலாத்துறையுடன் இணைந்து டெல்லியில் ஆக்ஸ்ட் 23, 2018 அன்று  தொடங்கினார்.

இந்த மாநாட்டிற்கு வங்கதேசம், இந்தோனேசியா, மியான்மர், இலங்கையை சேர்ந்த புத்த பிட்சு குழு  பங்கேற்றனர். 

இந்திய இமாலயத்தின் நீடித்த வளர்ச்சி :
நிதி ஆயோக்கின் 5 முக்கிய குழுக்கள் ஹிமாலய பகுதிகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இமாலயத்தில் நீர் பாதுகாப்பு,  சுற்றுலாத்துறை மேம்பாடு, போக்கு வரதுது வசதிகள் மேம்படுத்துதல் வெளிப்படையான நிர்வாகம். மாற்று பயிற் விளைச்சல், தொழில் வல்லுநத் தன்மையை உருவாக்குத்துதல், போன்ற  புதிய உத்திகளை குறித்து ஐந்து குழுக்களும் அறிக்கை சமர்ப்பித்து செயல்படுத்த பரிந்துறைத்துள்ளது.

ஐந்து குழு அறிக்கையில் 5 விதமான மக்கள் வாழ்விடங்களை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இமாலய பகுதியில் 30% மக்கள் மிகுந்த பணி பொழிவிடங்களில் வாழ்கின்றனர். 50% மக்கள் வெளியேற விரும்புகின்றனர்.

தேசிய ஆரோக்கிய மாதம்:
செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய மகளிருக்கான ஆரோக்கிய மாதமாக கொண்டாட அரசு அறிவித்துள்ளது.

அடல் நகர் :
எதிர்கால சட்டீஸ்கரின் தலைநகர் நயா ராய்ப்பூர் முன்னாள் பிரதம்ர அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவாக அடல் நகர் எனப்  பெயரிடப்படவுள்ளதாக அரசு அறிவிப்பு.

50 ஸ்டார்ட் அப் தெலுங்கானா:
மேக் இந்தியா திட்டத்தின் கிழ் ஐம்பது ஸ்டாரட் அப்  தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்க  ஐஐடி ஹைதிராபாத் ஃபேப்லெஸ் சிப் டிசைன் இன்குயூபரேட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சந்திராயன் ஒன்:
10 ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்திய சந்திராயன் -1 விண்கலத்திலிருந்து பெற்ற தரவுகளை கொண்டு நிலவின் துருவ மண்டலத்தில் உறைந்த நீர் சேமிப்புகளை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 ஐஏஎப்- ஆர்எம்ஏஎப்:
மலேசியாவின் சுபாங் விமான தளத்தில் இந்திய விமானப்படை மற்றும் ராயல் மலேசிய விமானப்படை பங்கு பெறும் முதன்முதல் கூட்டு யிற்சி தொடங்கியது.

தேசிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கம்:
தேசிய எழுத்தறிவு இயக்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது டிஜிட்டல் எழுத்தறிவை 2020-க்குள் வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆறு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிடட்ல் எழுத்தறிவு வழங்குவது இயக்கத்தின் இலக்கு ஆகும்.
 2351 கோடி ஒதுக்கீடு செய்து 2019 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் எழுத்தறிவை கொண்டு வர திட்டுமிட்டுள்ளது.

டிஜிட்டல் சக்சர்தா அபியான்:
டிஜிட்டல் சக்சர்தா அபியான் திட்டம் 2016இல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 42.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பிரதான் மந்திரி ஸ்வத்ய சுரக்க்ஷா யோஜனா:
 நம்பகமான ஆரோக்கிய சேவையை பெற்று நாட்டில் தரமான மருத்துவ குழுவை பெறுவது நோக்கமாக கொண்டுள்ளது.

ஐஐடிக்கள்:
ஜம்மு, பிலாய், கோவா, தார்வார், திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் புதிய ஐஐடிக்கள் முழுவீச்சில் செயல்படுகின்றன.

ஐஎஸ்எம் தன்பாத் ஐஐடியாக மாற்றப்பட்டுள்ளன.
2016 ஒடிசாவில் பெஹம்பூரில் ஐஐஎஸ்இஆர் நிறுவப்பட்டது.

அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனங்கள்:
ஆந்திரபிரதேசத்தின் திருப்பதியில் புதிய ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது.

Comments