வடக்கு வண்டல் பகுதிகள்

டூன் பள்ளத்தாக்குகள், வெளி இமயமலைத் தொடரை, நடு இமயமலைத் தொடரிலிருந்து பிரிக்கின்றன. பாபர் என்பது வெளி இமயமலைத் தொடரான சிவாலிக் பகுதியின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி முழுவதும் கூழாங்கற்களோடு கூடிய மென்மையான வண்டல் மண்ணால் ஆனது. இது விவசாயத்துக்கு ஏற்றதல்ல.

சிவாலிக்கின் அடிப்பகுதியான பாபருக்கு தெற்கில் காணப்படும் பகுதியான டெராய், மென்மையான வண்டல் மண் பிரதேசமாகும். இது கொசுக்கள் தங்கும் சதுப்புநிலமாக இருப்பதால் மலேரியா இந்தப் பகுதியில் அதிகம்.

பங்கர், காதர் ஆகிய இரண்டும் பெரிய சமவெளியான கங்கைச் செமவெளியில் காணப்படும் இருவகை வண்டல் மண் பிரதேசங்கள். பங்கர் என்பது பழைய வண்டல் மண், களிமண் தன்மையும், அடர்வான வண்ணமும் கொண்டது. விவசாயத்துக்கு ஏற்றதல்ல. காதர் என்பது மங்கலான வண்ணமும், மண் தன்மையும், புதிய வண்டல் மண்ணையும் கொண்ட மண் பிரதேசம். விவசாயத்துக்கு மிகவும் உகந்தது.

Comments