உலர் பனிக்கட்டி

திடமான கார்பன்-டை-ஆக்சைடு, உலர் பனிக்கட்டி எனப்படுகிறது. மருந்துப் பொருட்களை நீண்ட தொலைவுக்கு குளிர்ச்சியான நிலையில் பாதுகாத்து எடுத்துச் செல்ல உலர் பனிக்கட்டி பயன்படுகிறது. இதன் கொதிநிலை 79 டிகிரி செல்சியஸ் ஆகும். இதுபோலவே திரவ நைட்ரஜனும் ஒரு பாதுகாப்பு பொருளாக பயன்படுகிறது. உயர் ரக கால்நடை கருவூட்டல் உயிர் விந்தணுக்களை உறைநிலையில் பாதுகாக்க இதை பயன்படுத்துகிறார்கள். திரவ நைட்ரஜனின் கொதிநிலை 196 டிகிரி செல்சியஸ்.

Comments