Monday 29 October 2018

பாசியும், பூஞ்சையும்!

வகைப்பாட்டியல் வல்லுனர்கள் தொடக்க காலத்தில் பாசி, பூஞ்சை இரண்டையும் ‘காலோபைட்டா’ என்ற தாவரப் பிரிவில் அடக்கினர். ராபர்ட் விடேகர் தன்னுடைய ஐந்துலக வகைப்பாட்டு முறையில் (1968-ல்) பூஞ்சைகளை தாவரம் விலங்கு இரண்டிலும் சேர்க்காமல் தனி உலகமாக வைத்தார். பாசிகள் இப்போதும் தாலோபைட்டா பிரிவிலேயே உள்ளன. பூஞ்சைகளுக்கு பச்சையம் இல்லாததால் இவற்றை பச்சையமற்ற தாவரம் என்று அழைத்தனர். பூஞ்சைகளின் தனித்தொகுதியாக இருப்பினும், இவை கைட்டின் என்ற பொருளால் ஆன செல் சுவரைப் பெற்றிருப்பதால் பள்ளிப்பாட நூல்களில் அது தாவரவியலில் இடம் பெறுகிறது. பாசியும், பூஞ்சையும் ஒரு செல் அல்லது பல செல் கொண்ட யூகேரியாட்டிக் (உண்மையான செல் உட்கரு கொண்ட) உயிரினங்களாகும். ஒரு செல் பூஞ்சைக்கு எடுத்துக்காட்டு ஈஸ்ட், பலசெல் பூஞ்சைகளாவன : பெனிசிலியம், அகாரிகஸ் ஒரு செல் பாசிக்கு உதாரணம் கிளாமிடோமோனஸ் அசிடாபுலேரியா. பல செல் பாசிகள் - லேமினேரியா, ஜெலிடியம்.

No comments: