Tuesday 25 September 2018

குழந்தை இறப்பில் இந்தியா முதலிடம்

இந்தியாவில் இரண்டு நிமிடங்களுக்கு மூன்று குழந்தைகள் இறப்பதாக ஐ.நா.வின் குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழு (UNIGME) செப்டம்பர் 18 அன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்தியாவில் 8,02,000 குழந்தைகள் இறந்திருக்கின்றன. இந்த எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளைவிடக் குறைவு என்றாலும், குழந்தை இறப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதில் இரண்டாவது இடத்தில் நைஜீரியாவும் (4,66,000 குழந்தை இறப்புகள்), மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் (3,30,000 குழந்தை இறப்புகள்) இருக்கின்றன. போதுமான சுகாதார, தண்ணீர், ஊட்டச்சத்து வசதிகள் கிடைக்காததே குழந்தை இறப்புகளுக்குக் காரணம் என்று ஐ.நா. தெரிவிக்கிறது.

No comments: