Tuesday 4 September 2018

நடப்பு நிகழ்வுகள் | மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோ

மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இஸ்ரோவின் ‘ககண்யான்’ திட்டம் இன்னும் நாற்பது மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஆகஸ்ட் 28 அன்று தெரிவித்தார். நாட்டின் 75-வது சுதந்திர தினத்துக்கு முன்னர் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தத் திட்டத்துக்காக இஸ்ரோ 2004-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிவருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தேவைப்படும் சில தொழில்நுட்பங்களை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாகவும் இஸ்ரோ தெரிவிக்கிறது. ‘ககண்யான்’ திட்டத்தை இஸ்ரோ ஜி.எஸ்.எல்.வி. எம்.கே.-III ஏவுகணையில் விண்ணில் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் 5-7 நாட்கள் விண்ணில் தங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: