Tuesday 4 September 2018

நடப்பு நிகழ்வுகள் | பண மதிப்பிழப்பு: வங்கிக்குத் திரும்பிய 99.3% பணம்

பிரதமர் நரேந்திர மோடி 2016 நவம்பர் 8 அன்று கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் 500, 1000 ரூபாய்த் தாள்கள் மதிப்பிழந்துவிட்டதாக அறிவித்தார். இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிக்குத் திரும்பிய 500, 1000 ரூபாய்த் தாள்களை எண்ணும்பணியைச் சமீபத்தில் முடித்த ரிசர்வ் வங்கி, தன் வருடாந்திர அறிக்கையை ஆகஸ்ட் 29 அன்று வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்குமுன் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய்த் தாள்களின் மொத்த மதிப்பு ரூ. 15,417.93 லட்சம் கோடி. இதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், ரூ. 15,310.73 லட்சம் கோடி (99.3 சதவீதம்) வங்கிக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. இந்தப் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிக் கணக்குக்குத் திரும்பி வராத பணத்தின் மதிப்பு ரூ.10,720 கோடி (0.7 சதவீதம்). பணமதிப்பிழப்பின் நடவடிக்கையின் விளைவான இந்த ரூ.10,000 கோடிக்காக 2.25 லட்சம் கோடி மதிப்புமிக்க உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றனர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: