நடப்பு நிகழ்வுகள் | ஆண்களின் திருமண வயது 18?

நாட்டில் ஆண்களின் திருமண வயது 18-ஆகக் குறைக்கப்பட வேண்டும் என்று ஆகஸ்ட் 31 அன்று சட்ட ஆணையம் வெளியிட்ட தனி நபர் சட்டங்களுக்கான (Personal Laws) சீர்திருத்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து மதங்களிலும் ஆண், பெண் இருவருக்குமான திருமணச் சட்ட வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைசெய்திருக்கிறது. பதினெட்டு வயதில் அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்படுவதுபோல வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும் வழங்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்திருக்கிறது. தற்போது, ஆண்களின் திருமண வயது 21- ஆகவும் பெண்ணின் திருமண வயது 18-ஆகவும் நிர்ணயம்செய்யப்பட்டிருக்கிறது. இது தேவையற்ற பாலின வயது வித்தியாசத்தைத் திருமணத்தில் ஏற்படுத்துவதாகச் சட்ட ஆணையம் தெரிவித்திருக்கிறது.
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

Comments