Monday 13 August 2018

பாலூட்டிகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

* குட்டிகளுக்கு பால் ஊட்டும் உயிரினங்கள் பாலூட்டிகள் எனப்படுகின்றன.

* மனிதன் ஒரு பாலூட்டி உயிரினத்தை சேர்ந்தவன்.

* பாலூட்டிகளில் 18 வரிசைகள் உள்ளன.

* முட்டையிடும் பாலூட்டிகள் மோனோட்ரீம் எனப்படுகிறது.

* எறும்புதின்னி, டக்பீல்ட் பிளாட்டிபஸ் போன்றவை மோனோட்ரீம் பாலூட்டிகளுக்கு எடுத்துக்காட்டாகும்.

* டக்பீல்டு பிளாட்டிபஸ் ஊர்வன மற்றும் பாலூட்டிகளின் இணைப்புயிரியாக கருதப்படுகிறது.

* வயிற்றில் பையுள்ள பாலூட்டிகள் மார்சுபியல் எனப்படுகிறது. எடுத்துக்காட்டு: கங்காரு, ஓப்போசம்.

* மொத்த பாலூட்டிகளில் 42 சதவீதம் கொறிக்கும் விலங்குகளே. எடுத்துக்காட்டு: எலி, அணில்.

* டால்பின், திமிங்கலம், கடற்பசு போன்றவை நீர்வாழ் பாலூட்டிகளாகும்.

* முட்டையிடும் பாலூட்டி எனப்படுவது பிளாடிபஸ்.

* பறக்கும் பாலூட்டி எனப்படுவது வவ்வால்.

* மிக நீண்ட நாக்கு கொண்ட பாலூட்டி ஒகாபி.

No comments: