Monday 27 August 2018

கண்ணுக்குள்ளே...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கண் தானத்தின்போது மாற்றப்படுவது கார்னியா.

ஒளியளவை கட்டுப்படுத்துவது ஐரிஸ்.

நமது கண்ணிலுள்ள விழித்திரை ரெட்டினா.

கண்ணில் உள்ள லென்ஸ் இருபுற குவிலென்ஸ்.

ஆக்வஸ் கியூமர், விட்ரஸ் கியூமர் என்பது கண்ணில் உள்ள இருவகை திரவங்களாகும்.

கண்ணீரை சுரப்பது லேக்ரிமல் சுரப்பி.

தெளிவுக்காட்சியின் மீச்சிறு தொலைவு - 25 செ.மீ.

இந்த தொலைவு மாறுவதை வெள்ளெழுத்து குறைபாடு என்பர்.

கிட்டப்பார்வை குறைபாட்டிற்கு குழிலென்ஸ் பயன்படுத்துவார்கள்.

தூரப்பார்வை குறைபாட்டிற்கு குவிலென்ஸ் பயன்படுத்துவார்கள்.

நிறக்குருடுக்கு டால்டனிஸம் என்ற பெயர் உண்டு.

விழிநீர் அழுத்த நோய் கிளக்கோமா எனப்படுகிறது.

No comments: