Monday 27 August 2018

நமது நதிகள்...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
இந்திய நதிகளைப் பற்றிய முக்கிய குறிப்புகள் சிலவற்றை அறிவோம்...

நதிகளிலேயே பெரியது, நீளமானது கங்கை.

கங்கை 2008-ல் இந்தியாவின் தேசிய நதியாக அறிவிக்கப்பட்டது.

கங்கை நதி, இமயமலையில் உள்ள கங்கோத்திரியில் உற்பத்தியாகிறது.

கோமதி, காக்ரா, கண்டகி, கோசி, யமுனா ஆகியவை கங்கையின் துணை நதிகள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கமம் அலகாபாத்தில் உள்ளது.

பிரம்மபுத்திரா நதி, இமயமலையிலுள்ள மானசரோவர் ஏரியில் உற்பத்தி ஆகிறது.

பிரம்மபுத்திரா, தனது மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் பாய்கிறது.

பிரம்மபுத்திராவுக்கு திபெத்தில் சாங்போ என்று பெயர்.

உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத் தீவான மஜூ‌லி பிரம்புத்திராவில் உள்ளது.

பிரம்மபுத்திரா செம்மண் நிலமான அஸாமில் பாய்வதால் சிவப்பு ஆறு எனப்படுகிறது.

ஜீலம், சினாப், ராவி, பியாஸ், சட்லெஜ் என்பவை சிந்து நதியின் துணை நதிகள்.

சிந்துவின் துணை நதிகளில் சட்லெஜ் நதி மட்டுமே முழுமையாக இந்தியாவில் பாய்கிறது.

ராஜஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் இந்திராகாந்தி கால்வாய், சட்லெஜ் நதியில் அமைந்துள்ளது.

சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ராநங்கல்தான் இந்தியாவிலேயே உயரமான அணை.

இந்தியாவின் மிக நீளமான அணையான ஹிராகுட், மகாநதியின் குறுக்கே அமைந்துள்ளது.

தட்சிண கங்கை என்றழைக்கப்படும் கோதாவரி நதி, தென்னிந்தியாவில் ஓடும் நதிகளில் மிகப்பெரியது.

ஒகேனக்கல், சிவசமுத்திரம் ஆகிய அருவிகள் காவிரி ஆற்றில் அமைந்துள்ளன.

மணலாறு என்றழைக்கப்படுவது பாலாறு.

தாமிரபரணியின் வேறு பெயர் பொருநை.

காவிரியின் இன்னொரு பெயர் பொன்னி.

No comments: