வாயுக்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

* கியாஸ் பலூனில் நிரப்பப்படும் வாயு ஹீலியம்.

* திரவ பெட்ரோலிய வாயுவில் (எல்பி.ஜி.) காணப்படும் வாயுக்கள், பியுட்டேன், புரப்பேன், பியூட்டிலின், ஐசோபியூட்டிலின்.

* இயற்கை எரிவாயுவில் இருப்பது ‘சி.என்.ஜி. காணப்படும் வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு, ைஹட்ரஜன்,

* சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் மீத்தேன், கார்பன்-டை-ஆக்சைடு.

* நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக இருக்கும் வாயு மீத்தேன்.

* சதுப்பு நில வாயு எனப்படுவது மீத்தேன்.

* போபாலில் கசிந்த விஷ வாயு மீதைல் ஐசோசயனைட்.

* உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட விஷவாயு மஸ்டர்ட் வாயு.

* ஓசோனில் ஓட்டை விழக் காரணமானவை குளோரோ புளூரோ கார்பன்கள்.

* பூமியின் வெப்பநிலையை அதிகமாக்கும் வாயுக்கள் கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு.

* அமில மழைக்கு காரணமான வாயுக்கள் சல்பர்- டை-ஆக்சைடு, நைட்ரிக் ஆக்சைடு.

* பழங்களை பழுக்க வைக்க பயன்படும் வாயு எத்திலீன்.

Comments