மியான்மர்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
மியான்மர் குறித்த பல சுவாரசியங்கள் தெரிந்து கொள்வோம்...

# மியான்மர் அல்லது பர்மா என்பது ஆசியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த நாடாகும். இது இரும்புத் திரை நாடு என்றும் அழைக்கப்படுகிறது.

# மியான்மர், பர்மா ஆகிய இரண்டு வார்த்தைகளுமே அங்கு பல நூற்றாண்டுகளாக நிலவி வருபவைதான். என்றாலும், மியான்மர் என்பது அதிகாரபூர்வ பெயராகும்.

# மியான்மர் என்ற பெயர் பாமர் இனக்குழுவின் எழுத்து வழக்கு பெயராகும். பர்மா என்ற பெயர் "பாமர்" என்பதில் இருந்து வந்ததாகும்.

# 18-ம் நூற்றாண்டிலிருந்து "பர்மா" என்ற பெயர் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

# மியான்மர் பிரான்சிய மொழியில் "பிர்மனி" (Birmanie) என்று அழைக்கப்படுகின்றது.

# ஆங்கிலத்தில், இந்த நாடு "பர்மா" (Burma) என்றோ அல்லது "மியன்மார்" (Myanmar) என்றோ அழைக்கப்படுகிறது.

# பகான் மன்னராட்சிக் காலத்தில் 9 முதல் 13-ம் நூற்றாண்டுகளில் கட்டமைக்கப்பட்ட நகரமே மியான்மர். இது இப்போது நவீன மியான்மராக மாறி உள்ளது.

# தேக்குக்குப் பெயர்போன பர்மாதான் இன்றைய மியான்மர். ரங்கூன் என்று நாம் அறிந்து வைத்திருக்கும் அதன் தலைநகரை அவர்கள் யாங்கூன் என் கிறார்கள்.

# வங்காள தேசம், இந்தியா, சீனா, லாவோஸ் மற்றும் தாய்லாந்து இந்த நாட்டின் எல்லைகளாக விளங்குகின்றன.

# ரத்தினங்கள், எண்ணெய் மற்றும் கனிம வளங்களில் சிறந்து விளங்குகிறது மியான்மர்.

எச்.மணிகண்டன், 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.கே.நகர், திருத்தணி.

Comments