குப்த பேரரசு

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
குப்த வம்சத்தின் முதல் அரசர் ஸ்ரீகுப்தர்.

முதலாம் சந்திர குப்தர் மகாராஜாதி ராஜா என சிறப்பு பெயர் பெற்றார்.

முதலாம் சந்திரகுப்தர்், குப்த சகாப்தத்தை (கி.பி. 320) தொடங்கினார்.

இந்திய நெப்போலியன், கவிராஜா என்ற பட்டப்பெயர் சமுத்திரகுப்தருக்கு உரியவை.

இரண்டாம் சந்திரகுப்தர் விக்ரமாதித்தியர் மற்றும் சாகரி என்ற சிறப்புப் பெயர்களைப் பெற்றார்.

முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார்.

நவரத்தினங்கள் என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திரகுப்தர் அவையை அலங்கரித்தனர்.

நவரத்தினங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் காளிதாசர், ஆரியபட்டர், வராகமிகிரர்.

குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் குமார குப்தர்.

குப்தர்கால ஓவியங்கள் மகாராஷ்டிரத்திலுள்ள அவுரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன.

ஜார்கண்ட் மாநிலத்தில் தியோகார் என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதார கோவில் குப்தர் காலத்ைத சேர்ந்தது.

மெஹருலி என்ற இடத்திலுள்ள துரு பிடிக்கா இரும்புத்தூண் குப்தர் கால கலைச் சின்னங்களில் ஒன்று.

குப்தர்காலம், இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சிக் காலம்.

குப்தர்களின் வெள்ளி நாணயம் ரூபிகா என அழைக்கப்பட்டது.


Comments