சூடான தகவல்கள்...

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
சூடான தகவல்கள்...

* வெப்பத்தை அளவிட சென்டிகிரேடு, பாரன்கீட், கெல்வின் என்ற மூன்றுவித அலகுகள் பயன்படுகின்றன.

* மனித உடலின் சராசரி வெப்பநிலை 98.5டிகிரி பாரன்கீட் அல்லது 37 டிகிரி செல்சியஸ் அல்லது 310 கெல்வின்.

* நீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ் அல்லது 212 டிகிரி பாரன்கீட்,

* நீரின் உரைநிலை 0 டிகிரி செல்சியஸ் அல்லது 32 டிகிரி பாரன்கீட்.

* தெர்மாமீட்டர்களில் பாதரசம் பயன்படுகிறது.

* மிகக்குறைந்த வெப்பத்தை அளக்கும் கருவி ஆல்கஹால் தெர்மாமீட்டர்.

* மருத்துவ தெர்மாமீட்டரில் 35 டிகிரி சென்டிகிரேடு முதல் 42 டிகிரி சென்டிகிரேடு வரையிலான அளவுகள் பயன்படுத்தப்படுகிறது.

* சூடான நீரைவிட குளிர்ந்த நீர் அதிக வெப்பத்தை உட்கவரும்.

* ஆவியாதல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது ரெப்ரிஜ்ரேட்டர் எனப்படும் குளிர்பதனப் பெட்டி.

* குளிர்சாதன அறையில் வெப்பநிலை 23.25 டிகிரி செல்சியஸ் மற்றும் ஈரப்பதம் 60-65 சதவீதம் என்ற அளவிலும் கட்டுப்படுத்தப்படுகிறது.

Comments