Monday 23 July 2018

பொது அறிவு | வினா வங்கி,

1. காற்று வீசுவதற்கு முக்கியக்காரணம் என்ன?

2. உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?

3. முதன் முதலில் உலக வரைபடத்தை தயாரித்தவர் யாா்?

4. அமெரிக்க அதிபரின் பதவி காலம் எத்தனை ஆண்டுகள்?

5. பாராளுமன்றத்தை எதிர்கொள்ளாமலே பதவிகாலம் முடிவுற்ற இந்திய பிரதமர் யார்?

6. ஒளி அலைகளின் நீளத்தை குறிக்கும் அலகு எது?

7. ஜெராக்ஸ் இயந்திரத்தில் பயன்படும் அலோகப்பொருள் எது?

8. நிலக்கரி சுரங்க விபத்துக்கு எந்த வாயு காரணமாக உள்ளது?

9. உலகில் வைரம் அதிகம் கிடைக்கும் நாடு எது?

10. மனித உடம்பிலுள்ள செல்களிலேயே மிகப்பெரியது எது?

11. மணிக்கு 350 கி.மீ வரை வேகமாக பறக்ககூடிய பறவை எது?

12. உணவுப்பாதையின் நீளம் எவ்வளவு?

13. கப்பல் செல்லும் திசை அறிய பயன்படுவது எது?

14. மலைக்கள்ளன் புதினத்தின் ஆசிரியர் யார்?

15. தரச்சான்று முத்திரையின் பெயர் என்ன?

விடைகள்

1. அழுத்த வேறுபாடு, 2. சுப்பீரியர், 3. எரெஸ்டோதீனஸ், 4. நான்கு ஆண்டுகள், 5. சரண் சிங், 6. ஆங்ஸ்ட்ராம், 7. செலினியம், 8. மீத்தேன், 9. தென்னாப்பிரிகா, 10. நியூரான், 11. பால்கன், 12. சுமார் 8 மீட்டர், 13. மரைனர்ஸ் காம்பஸ், 14. நாமக்கல் கவிஞர், 15. ஐ.எஸ்.ஐ.
கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

No comments: