பொது அறிவு | வினா வங்கி,

வினாவங்கி

1. எந்தச் சட்டம் பர்மாவை இந்தியாவிலிருந்து பிரித்தது?
2. இசைக்கலையை தடை செய்த முகலாய மன்னர் யார்?
3. சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட ஆண்டு எது?
4. மின்தீயை அணைக்க பயன்படுவது எது?
5. சூரிய குடும்பத்தில் துணைக் கோள்கள் இல்லாத கோள்கள் எவை?
6. உலகின் தாய் எனப்படும் நகரம் எது?
7. இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் யார்?
8. கம்பெனி சட்ட திருத்தங்களுக்காக அமைக்கப்பட்ட கமிட்டி எது?
9. அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தும் அமைப்பு எது?
10. ஜெட் விமான வேகத்தை குறிக்கும் அலகு எது?
11. நீர்த்திவலை கோள வடிவமாக இருக்க காரணம் என்ன?
12. நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
13. பற்பசையில் இருக்கும் வேதிச்சேர்மம் எது?
14. ஹைட்ரஜன் குண்டின் அடிப்படைத் தத்துவம் எது?
15. செம்பருத்தி மலர் எந்த வகை மலராகும்?

விடைகள் : 1. இந்திய அரசு சட்டம் 1935, 2. அவுரங்கசீப், 3. 1869, 4. கார்பன் டெட்ரா குளோரைடு, 5. புதன், வெள்ளி, 6. கெய்ரோ, 7. கியானி ஜெயில் சிங், 8. ஈரானி கமிட்டி, 9. ரிசர்வ் வங்கி, 10. மாக் நம்பர், 11. பரப்பு இழுவிசை, 12. சாட்விக், 13. கால்சியம் கார்பனேட், 14. உட்கரு இணைதல், 15. ஆரச்சமச்சீர் மலர்.

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code

Comments