Saturday 30 June 2018

கடந்து வந்த பாதை | ஜூன் 16-22

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கடந்து வந்த பாதை | ஜூன் 16-22 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வு களின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. ஜூன் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
  • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு உள்ளிட்ட முக்கியப் பொருட்களுக்கு இந்தியா ரூ. 1600 கோடி வரி விதித்தது. இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. (ஜூன் 16)
  • மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. (ஜூன் 16)
  • இந்திய நிறுவனங்களில் கடந்த மே மாதத்தில் ஆள்சேர்ப்பு 11 சத வீதம் அதிகரித்துள்ளது என நாக்ரி டாட் காம் நிறுவனம் தெரிவித்தது. (ஜூன் 16)
  • கேரளாவில் பெய்த கனமழையால் 53 பேர் பலியாகினர். அங்கு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். (ஜூன் 16)
  • டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறினார். (ஜூன் 17)
  • காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்நிறுத்தம் நீட்டிக்கப்படாது என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நட வடிக்கைகள் தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. (ஜூன் 17)
  • ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. தலீபான்களை சமரசப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்தார். (ஜூன் 17)
  • மத்திய அரசு அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி இந்த ஆணை யத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார். (ஜூன் 18)
  • மே மாதத்தில் நாட்டின் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி டாலர் மதிப்பில் 7 சதவீதம் உயர்ந்து 27.49 கோடி டாலராக அதிகரித்தது. (ஜூன் 18)
  • பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். (ஜூன் 18)
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொடர்ந்து எழுதலாம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். (ஜூன் 18)
  • ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாயினர். 234 பேர் பலத்த காயம் அடைந்தனர். (ஜூன் 18)
  • ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதால் மெகபூபா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந் தது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலானது. (ஜூன் 19)
  • நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 756 கோடி டாலராக அதிகரித்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.33 சதவீத வளர்ச்சி ஆகும். (ஜூன் 19)
  • இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். வயர்களால் தாக்கியும், ஐஸ்கட்டியில் அமரவைத்தும் சித்ரவதை செய்தனர். (ஜூன் 19)
  • மாட்ரிட்டில் நடந்த ஸ்பெயினுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இத்தொடரில் 2-வது ஆட்டம் மட்டும் டிரா ஆனது. (ஜூன் 19)
  • நாட்டிகாமில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. (ஜூன் 19)
  • மதுரை அருகே தோப்பூரில் ரூ. 1500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டனர். (ஜூன் 20)
  • மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலக அழகி மனுஷி சில்லார் வெற்றி மகுடத்தைச் சூட்டினார். (ஜூன் 20)
  • மே மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்தது. இம்மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 1.19 கோடி பயணிகள் பயன்படுத்தினர். (ஜூன் 20)
  • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்தது. (ஜூன் 20)
  • சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் நிலம் அளவிடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இந்தச் சாலை தொடர்பான திட்ட அறிக்கையை 2 மாதங்களில் தயாரித்து முடிக்க மத்திய அரசு தீர்மானித்தது. (ஜூன் 21)
  • ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்துத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். (ஜூன் 22)
  • இளைஞர் படைப்பு மற்றும் சிறார் இலக்கியங்களுக்கான சாகித்ய அகாடமி விருது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் எழுத்தாளர்களான சுனீல் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஷ்கார்’ விருதும், கிருங்கை சேதுபதிக்கு ‘பால சாகித்ய புரஷ்கார்’ விருதும் அறிவிக்கப்பட்டன. (ஜூன் 22)

No comments: