Saturday, 30 June 2018

கடந்து வந்த பாதை | ஜூன் 16-22

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கடந்து வந்த பாதை | ஜூன் 16-22 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வு களின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. ஜூன் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...
 • அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு உள்ளிட்ட முக்கியப் பொருட்களுக்கு இந்தியா ரூ. 1600 கோடி வரி விதித்தது. இந்தியப் பொருட்களுக்கான வரியை அமெரிக்கா அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. (ஜூன் 16)
 • மாணவர்கள் எளிதாக விசா பெறும் பட்டியலில் இருந்து இந்தியாவை இங்கிலாந்து அரசு நீக்கியது. இதனால் இங்கிலாந்து சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் கடுமையான விதிமுறைகளைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. (ஜூன் 16)
 • இந்திய நிறுவனங்களில் கடந்த மே மாதத்தில் ஆள்சேர்ப்பு 11 சத வீதம் அதிகரித்துள்ளது என நாக்ரி டாட் காம் நிறுவனம் தெரிவித்தது. (ஜூன் 16)
 • கேரளாவில் பெய்த கனமழையால் 53 பேர் பலியாகினர். அங்கு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார். (ஜூன் 16)
 • டெல்லியில் நடைபெற்ற மாநில முதல்-மந்திரிகள் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறினார். (ஜூன் 17)
 • காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்நிறுத்தம் நீட்டிக்கப்படாது என்றும், பயங்கரவாதிகளுக்கு எதிரான நட வடிக்கைகள் தொடரும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. (ஜூன் 17)
 • ஆப்கானிஸ்தானில் போர்நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. தலீபான்களை சமரசப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷரப் கனி அழைத்தார். (ஜூன் 17)
 • மத்திய அரசு அறிவித்த காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி இந்த ஆணை யத்தை அமைக்க வேண்டும் என்று கூறினார். (ஜூன் 18)
 • மே மாதத்தில் நாட்டின் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி டாலர் மதிப்பில் 7 சதவீதம் உயர்ந்து 27.49 கோடி டாலராக அதிகரித்தது. (ஜூன் 18)
 • பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைக்கும் வாய்ப்பே இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். (ஜூன் 18)
 • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொடர்ந்து எழுதலாம் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். (ஜூன் 18)
 • ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 3 பேர் பலியாயினர். 234 பேர் பலத்த காயம் அடைந்தனர். (ஜூன் 18)
 • ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதால் மெகபூபா தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந் தது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முன்வராததால் அம்மாநிலத்தில் கவர்னர் ஆட்சி அமலானது. (ஜூன் 19)
 • நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, ஏப்ரல் மாதத்தில் ஆயிரத்து 756 கோடி டாலராக அதிகரித்தது. சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.33 சதவீத வளர்ச்சி ஆகும். (ஜூன் 19)
 • இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். வயர்களால் தாக்கியும், ஐஸ்கட்டியில் அமரவைத்தும் சித்ரவதை செய்தனர். (ஜூன் 19)
 • மாட்ரிட்டில் நடந்த ஸ்பெயினுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இத்தொடரில் 2-வது ஆட்டம் மட்டும் டிரா ஆனது. (ஜூன் 19)
 • நாட்டிகாமில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. (ஜூன் 19)
 • மதுரை அருகே தோப்பூரில் ரூ. 1500 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பார்வையிட்டனர். (ஜூன் 20)
 • மும்பையில் நடைபெற்ற போட்டியில் இந்திய அழகியாக சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலக அழகி மனுஷி சில்லார் வெற்றி மகுடத்தைச் சூட்டினார். (ஜூன் 20)
 • மே மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை 17 சதவீதம் அதிகரித்தது. இம்மாதத்தில் உள்நாட்டு விமான சேவையை மொத்தம் 1.19 கோடி பயணிகள் பயன்படுத்தினர். (ஜூன் 20)
 • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் சன்டிமாலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட ஐ.சி.சி. தடை விதித்தது. (ஜூன் 20)
 • சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் பலத்த எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் நிலம் அளவிடும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இந்தச் சாலை தொடர்பான திட்ட அறிக்கையை 2 மாதங்களில் தயாரித்து முடிக்க மத்திய அரசு தீர்மானித்தது. (ஜூன் 21)
 • ஸ்டெர்லைட் ஆலையை மூட உயர்மட்ட அளவில் கொள்கை முடிவு எடுத்துத்தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். (ஜூன் 22)
 • இளைஞர் படைப்பு மற்றும் சிறார் இலக்கியங்களுக்கான சாகித்ய அகாடமி விருது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் எழுத்தாளர்களான சுனீல் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஷ்கார்’ விருதும், கிருங்கை சேதுபதிக்கு ‘பால சாகித்ய புரஷ்கார்’ விருதும் அறிவிக்கப்பட்டன. (ஜூன் 22)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 26 June 2018

கடந்த வாரம் - 26.06.2018

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
எட்டுவழிச் சாலைக்கு எதிர்ப்பு
சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டம், மத்திய அரசின் நிதி உதவியோடு 10,000 கோடி ரூபாய் செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாகச் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. இந்தத் திட்டத்துக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தில் 15 சதவீதம் விவசாயம் நிலமாக இருக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகளும் மக்களும் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள்.

அரசுக் கல்லூரிகளில் இடம் அதிகரிப்பு
அரசின் கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை அதிகரிப்பதற்கு, கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அரசாணை ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கலை, அறிவியல் படிப்புகளில் இந்த ஆண்டும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதால் இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்தக் கல்வி ஆண்டிலேயே ரூ. 62 கோடியில் 264 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் என்றும் உயர்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.

ரயில் நிலைய செல்ஃபிக்கு அபராதம்
ரயில் நிலையங்களில் செல்ஃபி எடுத்தால் ரூ. 2,000 அபராதம் விதிக்கும் நடைமுறை ஜூன் 22 முதல் அமலுக்கு வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. ரயில்களில் பயணம் செய்யும்போதும், ரயில் தண்டவாளங்களிலும் மக்கள் செல்ஃபி எடுப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்திருக்கின்றன. இதைத் தடுப்பதற்காக தெற்கு ரயில்வே, ரயில் படிக்கட்டுகள், ரயில் நிலையங்கள், ரயில் நிலைய வளாகம், ரயில்வே நடைமேடை ஆகியவற்றில் செல்ஃபி எடுக்கத் தடை விதித்துள்ளது. அத்துடன், ரயில் நிலைய வளாகத்தில் குப்பைத் தொட்டியைத் தவிர மற்ற இடங்களில் குப்பைப் போடுபவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி
ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டுவந்த மக்கள் ஜனநாயகக் கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி, பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஜூன் 19 அன்று முடிவுக்கு வந்தது. இதனால் காஷ்மீர் முதல்வராகப் பதவி வகித்துவந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக் கோரிய என்.என். வோஹ்ராவின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூன் 20 அன்று ஏற்றார். 2019 நாடாளுமன்றத் தேர்தல்வரை ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய இணைய நூலகம் தொடக்கம்
மத்திய மனித வளத்துறை அமைச்சகம், டெல்லியில் இந்திய தேசிய இணைய நூலகத்தை (National Digital Library of India) ஜூன் 19 அன்று அதிகாரபூர்வமாகத் தொடங்கியிருக்கிறது. இந்த இணைய நூலகத்தை ஐஐடி-கரக்பூர் வடிவமைத்திருக்கிறது. நாட்டின் 170 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட, 200 மொழிகளில் எழுதப்பட்ட புத்தகங்கள் இந்த நூலகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இதுவரை 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் இந்த இணைய நூலகத்தில் பதிவுசெய்திருக்கிறார்கள். இணையதளம் மட்டுமல்லாமல் அலைபேசிகளிலும் பயன்படுத்துமாறு இந்த நூலகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நூலகத்தின் இணையதள முகவரி: https://ndl.iitkgp.ac.in/

தலைமைப் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா
நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தனிப்பட்ட காரணங்களுக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால், தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்தத் தகவலை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜூன் 20 அன்று அறிவித்தார். மூன்று ஆண்டுகள் கொண்ட இவரது பதவிக் காலம் 16 அக்டோபர், 2014-ம் ஆண்டு தொடங்கியது. 2017-ம் ஆண்டு முடிவடைந்த இவரது பதவிக் காலம், மீண்டும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களால் அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்திருக்கிறார்.

ஐ.நா: பட்டினி கிடப்பவர்கள் அதிகரிப்பு
உலகில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ஜூன் 20 அன்று வெளியான ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது. உலக நாடுகளின் மோதல்கள், பருவநிலை மாற்றம் போன்றவை பட்டினி கிடக்கும் மக்கள் அதிகரிக்கக் காரணம் என்கிறது அந்த அறிக்கை. உலகில் 2015-ம் ஆண்டில் 77.7 கோடியாக இருந்த பட்டினி கிடப்போர் மக்கள்தொகை, 2016-ம் ஆண்டில் 3.8 கோடி அதிகரித்து 81.5 கோடியாக உயர்ந்திருக்கிறது. ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் 2018 என்ற அறிக்கையில் இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரியாவுக்கு மீண்டும் தடை: ட்ரம்ப்
வட கொரியாவின் அணு ஆயுதங்களால் அசாதாரண அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஜூன் 22 அன்று மீண்டும் புதுப்பித்திருக்கிறார். இந்தப் பொருளாதாரத் தடைகள் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கும் ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார். வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க ஜூன் 12 சந்திப்பு நடைபெற்ற பத்து நாட்களில் அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு முரணாகப் பார்க்கப்படுகிறது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 25 June 2018

பொது அறிவு | வினா வங்கி,

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
வினா வங்கி

1. சர்வதேச பணப்பரிமாற்றத்தின் மீதான வரி எப்படி அழைக்கப்படுகிறது?

2. தொல்காப்பியத்தில் இடம் பெறும் இயல்கள் எத்தனை?

3. தாவரங்களுக்கு உணவு மற்றும் நீர் எடுத்துச் செல்லும் திசுக்கள் எப்படி அழைக்கப்படுகிறது?

4. புளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன?

5. கதிரியக்க தனிமங்கள் எந்த கதிர்களை உமிழ்கின்றன?

6. எந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை?

7. எந்த சாதனத்தில் ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றமடைகிறது?

8. பழுப்பு புரட்சி என்பது என்ன?

9. விவசாய வருமானத்திற்கு வரிவிதிப்பு குறித்து ஆராய 1972-ல் உருவாக்கப்பட்ட கமிட்டி எது?

10. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது?

11. மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பு பற்றிய விவரங்கள் எந்த அரசியலமைப்பு அட்டவணையில் இடம் பெறுகிறது?

12. சோனோரன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது?

13. ஆட்கொணர்வு நீதிப் பேராணை எப்படி அழைக்கப்படுகிறது?

14. ஹைதராபாத் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

15. அவுரங்கசீப்பின் இயற்பெயர் என்ன?

விடைகள் :

1. டோபின் வரி, 2. 27, 3. வாஸ்குலர் திசுக்கள், 4. டார்டாரிக் அமிலம், 5. ஆல்பா, 6. ஒளி அலைகள், 7. ஒளிமின்கலம், 8. மரபுசாரா எரிசக்தியை அதிகரிப்பது, 9. கே.என்.ராஜ் கமிட்டி, 10. 1946, 11. 3-வது அட்டவணை, 12. வட அமெரிக்கா, 13. ரிட் ஆப் ஹேபியஸ் கார்பஸ், 14. முஸி, 15. ஆலம் கீர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

மருத்துவ கண்டுபிடிப்புகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
* ஆன்டி செப்டிக் அறுவைசிகிச்சை- ஜோசப் லிஸ்டர்

* ஆஸ்பிரின்- ஹெச் டிரெசர்.

* காண்டாக்ட் லென்ஸ்- அடால்ப் இபிக்.

* ரத்த மாற்று சிகிச்சை- ஜீன் டெங்ஸ்.

* ஸ்டெதஸ்கோப்- ரேனே லைனக்.

* இதயமாற்று அறுவைசிகிச்சை- கிறிஸ்டியன் பர்னாட்.

* தடுப்பு ஊசி முறை- எட்வர்ட் ஜென்னர்.

* ரேபிஸ் தடுப்பு மருந்து- லூயி பாஸ்டர்.

* போலியோ தடுப்பு மருந்து- ஜோனஸ் சால்க்.

* பென்சிலின்- அலெக்ஸ்சாண்டர் பிளெமிங்.

* நீரழிவுக்கு இன்சுலின் சிகிச்சை- பென்டிங், பெச்ட்.

* சோதனை குழாய் குழந்தை- ஸ்டாப்டோ, எட்வர்ட்ஸ்.

* எண்டாஸ்கோப்- பியர்ரே செகாலஸ்.

* சி.டி.ஸ்கேன்- காட்பிரே ஹவுன்ச்பீல்ட்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தனிமங்களின் பெயர்க் காரணங்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
தனிமங்களுக்கு பண்பின் அடிப்படையிலும், சிலவற்றுக்கு மற்றொன்றின் நினைவாகவும் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இங்கு சில தனிமங்களின் பெயர்க் காரணங்களை அறிவோம்...

* சூரியக் கடவுள் பெயரால் ஹீலியமும், சந்திரக்கடவுள் பெயரால் செலினியமும் அழைக்கப்படுகின்றன.

* கிரேக்கப் புராண கதாபாத்திரங்களான தந்தை-மகன் நினைவாகப் பெயர் பெற்ற தனிமங்கள்: டான்டலம், நியோபியம்.

* மேரி க்யூரி கண்டுபிடித்த தனிமம் அவரது நாடான போலந்தின் நினைவாக போலோனியம் என்று பெயர் பெற்றது.

* மார்குரைட் பெரே என்ற பெண் விஞ்ஞானி கண்டறிந்த தனிமம், அவரது நாடான பிரான்ஸ் நினைவாக பிரான்ஸியம் எனப்படுகிறது.

* காலியம், பிரான்ஸியம் ஆகிய இரு தனிமங்களும் பிரான்ஸ் நாட்டின் பெயரைப் பெற்றுள்ளன. gaul என்பது பிரான்ஸின் பழைய பெயர்.

* அணு எண் 101 கொண்ட தனிமம், தனிம வரிசை அட்டவணையை உருவாக்கிய மெண்டலீப் பெயரால் மெண்டலீயம் எனப்படுகிறது.

* அணு எண் 99 கொண்ட தனிமத்தை விஞ்ஞானி ஆல்பிரட் ஐன்ஸ்டின் பெயரால் ஐன்ஸ்டீனியம் என்கிறோம்.

* அணு எண் 100 கொண்ட தனிமத்தை விஞ்ஞானி ஹென்றிகோ பெர்மி நினைவாக பெர்மியம் என்கிறோம்.

* ஆன்டிமணி: தனிமையான எதிரி.

* ஆர்கான்: சோம்பேறி.

* நிக்கல்: சாத்தானின் தாமிரம்.

*ப்ரஸியோடைமியம்: பச்சை இரட்டையர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்திய தகவல் தொடர்பு

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
* இந்தியாவில் முதல் பத்திரிக்கையான ‘பெங்கால் கெஜட்’ 1780-ல் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கியால் தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் முதன் முதலாக ரேடியோ ஒலிபரப்பு தொடங்கப்பட்ட வருடம் 1929 (மும்பை).

* அகில இந்திய வானொலி ஒலிபரப்பு 1957-ல் தொடங்கியது.

* வானொலி வர்த்தக ஒலிபரப்பான ‘விவித் பாரதி’ 1967-ல் தொடங்கியது.

* தொலைக்காட்சி ஒளிபரப்பு செப்டம்பர் 15, 1969-ல் தொடங்கியது.

* இந்தியாவில் வண்ணத் தொலைக்காட்சி 1982-ல் அறிமுகமாகியது.

* 1976-ல் தொலைக்காட்சி ஒளிபரப்பு அகில இந்திய வானொலியிலிருந்து பிரிக்கப்பட்டது.

* முதல் std வசதி லக்னோ, கான்பூர் இடையே தொடங்கப்பட்டது.

* முதல் Isd வசதி மும்பை, லண்டன் இடையே தொடங்கப்பட்டது.

* இந்தியாவில் மின்னஞ்சல், தொலைநகல் வசதி 1994-ல் ஏற்படுத்தப்பட்டது.

* அகில இந்திய வானொலிக்கு ‘ஆகாச வாணி’ என பெயர் சூட்டியவர் ரவீந்திரநாத் தாகூர்.

* இந்தியாவில் தந்தி சேவை 13-6-2013 அன்று நிறுத்தப்பட்டது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Tuesday, 19 June 2018

கடந்த வாரம் - 19.06.2018

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு
அதிமுகவின் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை ஜூன் 14 அன்று வழங்கினர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இதில், இந்திரா பானர்ஜி 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் எனவும், நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு அனுப்பப்படுகிறது. இந்தத் தீர்ப்பால், தமிழக சட்டப்பேரவையில் முன்பிருந்த நிலையே நீடிக்கவிருக்கிறது.

ராஜீவ் வழக்கு: விடுதலை மனு நிராகரிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கோரிய தமிழக அரசின் மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜூன் 15 அன்று நிராகரித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உட்பட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக தண்டனைக் கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் மனுவைக் குடியரசுத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னையில் நிலத்தடி நீர் வற்றிவிடும்’
‘நிதி ஆயோக்’ (NITI AAYOG) அமைப்பு, ‘கூட்டு நீர் மேலாண்மை குறியீட்டை’ (Composite Water Management Index) ஜூன் 14 அன்று வெளியிட்டது. இந்தியா கடும் நீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் இந்த ஆய்வறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த ஆய்வில் சென்னை உள்பட இந்தியாவின் 21 நகரங்களில் 2020-ம் ஆண்டுக்குள் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துடன், நாட்டின் தண்ணீர் பிரச்சினை இதே விதத்தில் தொடர்ந்தால் 2030-ம் ஆண்டில் நாட்டில் 40 சதவீத மக்களுக்கு தண்ணீரே கிடைக்காது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 நாட்கள் நாடாளுமன்றம் வந்த மோடி
நான்கு ஆண்டுகளில், 19 நாட்கள் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றம் வருகைதர உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜூன் 12 அன்று பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கிறார். கடந்த 4 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஒட்டுமொத்தமாகவே 19 நாட்கள்தான் நாடாளுமன்றத்துக்கு வந்துள்ளார். அத்துடன், சிலமுறையே மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். அரசின் மசோதா ஒன்றை அறிமுகம் செய்யும் போதும், 5 முறை தனது அமைச்சர்களை அறிமுகம் செய்யும் போதும், நன்றி தெரிவிக்கும் தீர்மானித்தின் மீது 6 முறையும், சிறப்பு விவாதத்தின் மீது 2 முறையும் மோடி பேசியுள்ளார். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி நான்கு ஆண்டுகளில் பாஜகவின் 800-க்கும் மேற்பட்ட பேரணிகளில் கலந்துகொண்டிருக்கிறார் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஷ்மீர்: பத்திரிகை ஆசிரியர் கொலை
ஸ்ரீநகரில் ‘ரைஸிங் காஷ்மீர்’ பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஜூன் 14 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 50. லால் சவுக்கில் நடக்கவிருந்த இஃப்தார் விருந்தில் கலந்துகொள்வதற்காக அவர் சென்றபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஷுஜாத் புகாரியின் தனிப் பாதுகாப்பாளரும் கொல்லப்பட்டார். காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், நாடு முழுவதுமுள்ள பத்திரிகையாளர்கள் ஷுஜாத் புகாரியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். காஷ்மீரின் அமைதிக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த மூத்த பத்திரிகை ஆசிரியர் ஷுஜாத் புகாரி கொலை செய்யப்பட்டிருப்பதற்குப் பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

டிரம்ப்-கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று சந்தித்துப் பேசினர். இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பை உலக நாடுகள் வரலாற்று சிறப்பு வாய்ந்த சந்திப்பு என வரவேற்றிருக்கின்றன. இந்தச் சந்திப்பில், “கொரிய தீபகற்பத்தில் முழுமையான அணு ஆயுத கைவிடலுக்கு” ஒப்புக்கொள்வதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் தெரிவித்திருக்கிறார். இந்த ஒப்புதலைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடகொரியாவுக்குப் பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கியிருக்கிறார். இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருநாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர். இந்த மாநாடு வெற்றிபெற்றதை இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றிருக்கின்றன. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், ரஷ்யா வருமாறு வட கொரிய அதிபர் கிம் ஜாங்-உன்னுக்கு அழைப்புவிடுத்திருக்கிறார்.

சீன அதிபருடன் மோடி சந்திப்பு
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாடு சீனாவின் குயிங்தாவோ நகரில் ஜூன் 9 அன்று தொடங்கியது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 10 அன்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பு அம்சங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில், இரண்டு தலைவர்களும் சந்திக்கும் 14-வது சந்திப்பு இது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர் நாடுகளான உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் நாட்டு அதிபர்களையும் பிரதமர் மோடிச் சந்தித்து பேசினார். மாநாட்டின் இறுதியில் குயிங்தாவோ ஒப்பந்தம் கையெழுத்தானது.

11-வது உலக இந்தி மாநாடு
11-வது உலக இந்தி மாநாடு மொரிசியஸில் ஆகஸ்ட் 18 முதல் 20 வரை நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்த மாநாட்டுக்காக ‘இந்தி உலகமும் இந்தியக் கலாச்சாரமும்’ என்ற கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளின் இந்தி மொழி அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக இந்தி மாநாட்டை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடத்துகிறது. 10-வது உலக இந்தி மாநாடு, 2015-ம் ஆண்டு போபாலில் நடைபெற்றது.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 18 June 2018

ஆடிகளின் பயன்கள்!

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
கண்ணாடி அல்லது ஆடிகளின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிய சில தகவல்கள்...

* பேருந்து ஓட்டுனருக்கு அருகிலிருப்பது குவி ஆடி.

* பல் டாக்டர்கள் பயன்படுத்துவது குழி ஆடி.

* பேருந்துகளில் எதிரொளிப்பானாக பயன்படுவது பரவளையக் குழி ஆடி.

* சவரக் கண்ணாடியாகப் பயன்படுவது குழி ஆடி.

* காமிரா லென்ஸாகப் பயன்படுவது குவி லென்ஸ்.

* டெலஸ்கோப்பின் கண்ணருகு லென்ஸ் குறைந்த குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.

* டெலஸ்கோப்பின் பொருளருகு லென்ஸ் அதிக குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.

* கூட்டு நுண்ணோக்கியின் கண்ணருகு லென்ஸ் அதிக குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.

* கூட்டு நுண்ணோக்கியின் பொருளருகு லென்ஸ் குறைந்த குவிய தூரமுள்ள குவிலென்ஸ்.

* எளிய நுண்ணோக்கியில் குறைந்த குவிய தூரமுள்ள குவி லென்ஸ் பயன்படுகிறது.

* கிட்டப் பார்வையை சரி செய்ய குழி லென்ஸ், தூரப் பார்வையை சரி செய்ய குவிலென்ஸ்.

* குழி லென்சின் குவிய தூரம் ‘மைனசில்’ குறிப்பிடப்படும்.

* குவிலென்சின் குவிய தூரம் ‘பிளஸ்ஸில்’ குறிப்பிடப்படும்.

* லென்சின் திறன் டாயப்டர் அலகால் குறிப்பிடப்படும்.

* லென்சின் திறன் அதன் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

முக்கிய ஏரிகள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
இந்தியாவின் புகழ்பெற்ற முக்கிய ஏரிகள் மற்றும் அவை அமைந்துள்ள நகரங்களை அறிவோம்...

ஊலர் ஏரி - காஷ்மீர்

சில்கா - ஒடிசா

லேக்டாக் ஏரி - மணிப்பூர்

சாம்பார் ஏரி - ராஜஸ்தான்

தால் ஏரி - ஜம்மு காஷ்மீர்

ஹுசைன் சாகர் - ஆந்திரா

புலிகாட் (பழவேற்காடு) - தமிழ்நாடு, ஆந்திரா

வீராணம் - கடலூர்

செம்பரம்பாக்கம் -செங்கல்பட்டு

காவேரிப்பாக்கம் - வேலூர்

பூண்டி - திருவள்ளூர்

புழல் - திருவள்ளூர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

பொது அறிவு - வினா வங்கி

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
1. எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரின் முழுமை விரிவாக்கம் என்ன?

2. புரோட்டானை கண்டுபிடித்தவர் யார்?

3. இரும்புக்கு முலாம் பூசப் பயன்படும் உலோகம் எது?

4. ஒரு செல் விலங்கு எது?

5. உயிருள்ள செல்களில் மட்டுமே வளரும் பண்பு கொண்ட நுண்ணுயிர் எது?

6. மிகவும் கனமான உலோகம் எது?

7. காசி, ஜெயிந்தியா மலைகள் எங்கு காணப்படுகிறது?

8. பாமினி அரசர் தன் மனைவி பாக்கியமதிக்காக நிர்மாணித்த நகரம் எது?

9. வங்காள விரிகுடாவில் எத்தனை தீவுகள் உள்ளன?

10. பஞ்சசீலக் கொள்கை எங்கு முறைப்படுத்தப்பட்டது?

11. கரும்பு விளைச்சலுக்கு உகந்த வெப்பநிலை எவ்வளவு?

12. இந்திய கூட்டாட்சியில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ள அதிகார பட்டியல் எந்த அட்டவணையில் இடம் பெறுகிறது?

13. மாறு திசை மின்னோட்டத்தை, நேர்திசை மின்னோட்டமாக மாற்றுவது எது?

14. கலிங்கப்போர் நிகழ்ந்த ஆண்டு எது?

15. கோள் இயக்க விதிகளை கண்டுபிடித்தவர் யார்?

விடைகள் : 1. மதுரை சண்முக வடிவு சுப்புலட்சுமி, 2. கோல்ஸ்டீன், 3. துத்தநாகம், 4. புரோட்டோசோவா, 5. வைரஸ், 6. ஆஸ்மியம், 7. மேகாலயா, 8. ஐதராபாத், 9. 204, 10. பாண்டுங் , 11. 20 முதல் 30 டிகிரி செல்சியஸ், 12. 7-ம் அட்டவணை, 13. மின்திருத்தி (ரெக்டிபையர்), 14. கி.மு. 261, 15. ஜோகன் கெப்ளர்.


விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

சீக்கியர்கள் - சில தகவல்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
சீக்கிய மதம் பற்றிய முக்கிய குறிப்புகள் சில...

* சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் குரு நானக், இவரே முதல் குரு.

* குருநானக் பிறந்த ஊர் பஞ்சாபில் உள்ள தால்வண்டி.

* குருநானக், சீக்கியர்கள் ஒன்றாக உணவருந்தும் ‘லங்கர்’ முறையை உருவாக்கினார்.

* கருமுகி எழுத்து முறையை உருவாக்கியவர் 2-ம் சீக்கிய குரு அங்கத்.

* சீக்கியர்களின் உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத்தலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலுள்ள பொற்கோவில்.

* அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டுவதற்கான நிலம் அக்பரால், 4-வது சீக்கிய குருவான ராம்தாஸுக்கு கொடுக்கப்பட்டது.

* பொற்கோவிலை கட்டியவர் 5-வது சீக்கிய குருவான அர்ஜூன் சிங்.

* சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்தத்தை தொகுத்தவர் 5-ம் குருவான அர்ஜூன் சிங்.

* கல்சா எனும் ராணுவ அமைப்பை ஏற்படுத்தியவர், 10-வது குருவான கோவிந்த் சிங்.

* குருகோவிந்த சிங் ஆதிகிரந்தத்தை, ‘குரு கிரந்த சாஹிப்’ என்று பெயர் மாற்றி அதுவே ‘சீக்கியர்களின் நிரந்தர குரு’ என்று அறிவித்தார்.

* நீளமான முடி (கேஷ்), மரச்சீப்பு (காங்கா), இரும்புக் காப்பு (காரா), நீண்ட கால் சட்டை (காச்சா), குறுவாள் (கிர்பான்) ஆகிய ஐந்தையும் ஒவ்வொரு சீக்கியரும் கொண்டிருப்பார்கள்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

ஒரு வரி தகவல்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
காஷ்மீரின் அதிகாரப்பூர்வ மொழி உருது.

தாதுவளம் மிக்க இந்திய மாநிலம் ஜார்கண்ட்.

இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்த முதல் மாநிலம் இமாச்சலப்பிரதேசம்.

இந்தியாவின் ‘பால்தொட்டி’ என அழைக்கப்படுகிறது அரியானா.

டாமன்-டையூ இடையே ரெயில் போக்குவரத்து இல்லை.

பிரெஞ்சு கலாசாரம் நிலவி வரும் ஒரே இந்தியப் பகுதி புதுச்சேரி.

ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் டெல்லி வழியாகக் கடந்து செல்கின்றன.

இந்தியாவில் மிக அதிகமான பத்திரிகைகள் வெளியாகும் மாநிலம் உத்தரப்பிரதேசம்.

டி.எம்.சி. என்றால் என்ன தெரியுமா? ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள். இதனை ஆங்கிலத்தில் Thousand Million Cubic (TMC) என்று கூறுவர். ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி ஆகும்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

தமிழ்நாடு - சில தகவல்கள்

கல்விச்சோலை பொது அறிவு - kalvisolai latest g.k and qr code
தமிழக அரசு அடையாளங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

தமிழக அரசு சின்னம் - ஸ்ரீவில்லிபுத்தூா் கோவில் கோபுரம்

தமிழக அரசு வாசகம் - வாய்மையே வெல்லும்

தமிழ்த்தாய் வாழ்த்து - நீராருங் கடலுடுத்த... என தொடங்கும் பாடல்

மாநில விலங்கு - நீலகிரி வரையாடு

மாநில பறவை - மரகதப் புறா

மாநில மரம் - பனை

மாநில மலர் - செங்காந்தள்

மாநில விளையாட்டு - கபடி

மாநில நடனம் - பரத நாட்டியம்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 16 June 2018

கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 -2018

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai gk
கடந்து வந்த பாதை | ஜூன் 2-8 | போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே வழங்கப்படுகிறது. ஜூன் 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது...

 1. சிங்கப்பூரில் அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிசை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். அங்கு மகாத்மா காந்தி அஸ்தி கரைத்த இடத்தில் நினைவுச்சின்னத்தையும் அவர் திறந்துவைத்தார். (ஜூன் 2)
 2. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். (ஜூன் 2)
 3. சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்திவைத்து, சீனா அண்டை நாடுகளை மிரட்டுகிறது என அமெரிக்கா பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. (ஜூன் 2)
 4. ஏப்ரல் மாதத்தில் கம்பி, தகடு உள்ளிட்ட உருக்குப் பொருள்கள் ஏற்றுமதி 25 சதவீதம் சரிவடைந்து 5.58 லட்சம் டன்னாக குறைந்தது. (ஜூன் 3)
 5. அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் பாலாசூர் அருகே உள்ள அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக நடந்தது. (ஜூன் 3)
 6. தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு பற்றிய விசாரணையைத் தொடங்கிய நீதிபதி அருணா ஜெகதீசன், போலீசாரிடம் விசாரணை நடத்தப்படும் என அறிவித்தார். (ஜூன் 4)
 7. ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாயின. அதில் 56.27 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். அகில இந்திய அளவில் பீகார் மாணவி கல்பனா குமாரி முதலிடம் பிடித்தார். தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 12-ம் இடம் பிடித்தார். (ஜூன் 4)
 8. காவிரி விவகாரத்தில் இணக்கமான நல்லுறவு ஏற்படவேண்டும் என்றும், எனவே தமிழக அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்றும் நடிகர் கமல்ஹாசன் உடனான சந்திப்புக்குப் பின் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். (ஜூன் 4)
 9. டெல்லியில் நடைபெற்ற அனைத்து மாநில கவர்னர்கள் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பலனடைவதற்கு தங்களது பல்துறை அனுபவங்களை கவர்னர்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். (ஜூன் 4)
 10. தமிழகம் முழுவதும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்கவோ, பயன்படுத்தவோ அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தடை விதிக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். (ஜூன் 5)
 11. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரம் அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் பல மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது. (ஜூன் 5)
 12. கச்சா எண்ணெய் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரங்களால் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 3 ஆயிரத்து 120 கோடி டாலர் வரை உயரும் என இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனம் மதிப்பீடு செய்தது. (ஜூன் 5)
 13. மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. (ஜூன் 5)
 14. ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறினார். (ஜூன் 5)
 15. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த முடியாது என்றும், உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். (ஜூன் 6)
 16. கடன் வட்டி விகிதங்கள் பற்றிய தனது கொள்கை முடிவுகளை பாரத ரிசர்வ் வங்கி அறிவித்தது. இவ்வங்கி நான்கரை ஆண்டு களுக்குப் பின் முதல்முறையாக குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் உயர்த்தியது. (ஜூன் 6)
 17. உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப்-100 விளையாட்டு வீரர் களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டும் இடம்பிடித்தார். அவர் ஆண்டுக்கு ரூ. 160 கோடி வருவாய் ஈட்டுகிறார். (ஜூன் 6)
 18. சர்க்கரை ஆலைகளுக்குப் புத்துயிரூட்ட ரூ. 8500 கோடியிலான திட்டத்துக்கும், கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கவும் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (ஜூன் 6)
 19. கர்நாடக மாநிலத்தில் மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். 2 முன்னாள் மந்திரிகள் தலைமையில் தனித்தனியாகக் கூடி ஆலோசனை நடத்தினர். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. (ஜூன் 7)
 20. டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். அப்போது, தூத்துக்குடி கலவரம் உள்ளிட்ட தமிழகப் பிரச்சினைகள் குறித்து அவர் தனியாக ஆலோசனை நடத்தினார். (ஜூன் 7)
 21. மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். விழாவில் பேசிய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சகிப்புத்தன்மை இல்லை என்றால் இந்தியா சீர்குலைந்துவிடும் என்றார். (ஜூன் 7)
 22. குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தியதைத் தொடர்ந்து வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தின. (ஜூன் 7)
 23. உலகின் 200 தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை இங்கிலாந்தைச் சேர்ந்த குவாக்கோரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அதில் மும்பை இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம், டெல்லி இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் ஆகியவை இடம்பிடித்தன. (ஜூன் 7)
 24. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க இயலாது என்றும், டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக விவசாயிகளுக்கு ரூ. 115 கோடியில் குறுவை தொகுப்புத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். (ஜூன் 8)
 25. சென்னையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி நிர்மலா சீதாராமன், இந்தியா- சீனா இடையேயான உறவு மேம்பட்டு வருவதாகக் கூறினார். (ஜூன் 8)
 26. நம் நாட்டில் 2017- 2018-ம் நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு 6 ஆயிரத்து 196 கோடி டாலராக உயர்ந்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது. (ஜூன் 8)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 11 June 2018

கம்பர் தரும் பட்டங்கள்

கம்ப ராமாயணத்தில் கம்பர் சில கதாபாத்திரங்களுக்கு சூட்டிய பட்டங்களை அறிவோம்...

 1. சொல்லின் செல்வன் - அனுமன்
 2. தள்ளரிய பெருநீதியோன் - பரதன்
 3. சிறியன சிந்தியாதான் - வாலி
 4. இடைபேரா இளையோன் - கும்பகர்ணன்
 5. தீராக்காதலன் - குகன்
 6. மூரிய தேர்வலன் - சுமந்திரன்
 7. எண்ணினும் பெரியன் - கும்பகர்ணன்
 8. கதிரோன் மைந்தன் - சுக்ரீவன்
 9. பொய்யுரையாப் புண்ணியன் - வாலி
 10. மறனிழுக்கா மானமுடையான் - அதிகாயன்
 11. பழி வளர்க்கும் செல்வி - கைகேயி
 12. படரெலலாம் படைத்தவள் - கைகேயி
 13. நாய் அடியேன் - குகன்
 14. தாயினும் நல்லான் - குகன்
 15. யாதினும் இனிய நண்பன் - குகன்
 16. தனி சுமித்ரைச்சிங்கம் - இலக்குவன்
 17. தன்தனி உயிர்த் தந்தை - சடாயு

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE
பொது அறிவு | வினா வங்கி

1. வங்கித்துறை சீர்திருத்தத்திற்காக உருவாக்கப்பட்ட கமிட்டி எது?

2. பாராளுமன்றத்தை எதிர்கொள்ளாமல் பதவிக்காலம் முடிவுற்ற இந்திய பிரதமர் யார்?

3. யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட சோழர் கால கோவில்கள் எவை?

4. டோக்கன் நாணய முறையை அறிமுகம் செய்தவர் யார்?

5. சூரிய குடும்பத்தில் மிக மெதுவாக சுாலம் கோள் எது?

6. கவிராஜா என்ற பட்டம் பெற்ற அரசர் யார்?

7. சிவாலிக், ஹிமாச்சலுக்கு இடையே நீளவாக்கில் அமைந்த பள்ளத்தாக்குகள் எப்படி அழைக்கப்படுகிறது?

8. மாநில சுயாட்சி சட்டம் எப்போது வந்தது?

9. விசையின் அலகு யாது?

10. ஒரு ஜூல் என்பது எவ்வளவு கலோரிகள் கொண்டது?

விடைகள் :

1. நரசிம்மன் கமிட்டி, 2. சரண்சிங், 3. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், கங்கை கொண்ட சோழபுரம் கோவில், 4. முகமது பின் துக்ளக், 5. வெள்ளி, 6. சமுத்திர குப்தர், 7. டூன்கள், 8. 1935, 9. நியூட்டன், 10. 4.186 கலோரி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

நியூக்ளிக் அமிலம்


 1. டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ. இரண்டும் நியூக்ளிக் அமிலங்களாகும்.
 2. நியூக்ளியோடைடுகளால் ஆனவை நியூக்ளிக் அமிலங்கள்.
 3. ஒரு சர்க்கரை, ஒரு பாஸ்பாரிக் அமிலம், நைட்ரஜன் காரங்களைக் கொண்டது ஒரு நியூக்ளியோடைடு.
 4. சர்க்கரையும், நைட்ரஜன் காரமும் கொண்டது நியூக்ளியோசைடு.
 5. நியூக்ளிக் அமிலம் என்பது பல நியூக்ளியோடைடு அலகுகளால் ஆனது.
 6. டி.என்.ஏ.வில் காணப்படும் சர்க்கரை டிஆகிசிரிபோஸ்.
 7. ஆர்.என்.ஏ.வில் காணப்படும் சர்க்கரை ரிபோஸ்.
 8. ரிபோஸ், டிஆக்சிரிபோஸ் இவை ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்ட சர்க்கரைகள்.
 9. நைட்ரஜன் காரங்கள் அடினைன், குவானைன், சைட்டோசின், தயாமின், யுராசில் என ஐவகைப்படும்.
 10. அடினைன், குவானைன் = பியூரின் வகை காரங்கள்.
 11. சைட்டோசின், தயாமின், யுராசில் பிரிமிடின் வகை காரங்கள்.
 12. டி.என்.ஏ.வில் உள்ள காரங்கள் அடினைன், குவானைன், தயாமின் மற்றும் சைட்டோசின்.
 13. ஆர்.என்.ஏ.வில் உள்ள காரங்கள் அடினைன், குவானைன், சைட்டோசின் மற்றும் புராசில்
 14. அடினைன் மற்றும் தயாமின் இடையே காணப்படுவது இரட்டைப் பிணைப்பு,
 15. குவானைன் மற்றும் சைட்டோசின் இடையே காணப்படுவது முப்பிணைப்பு,
 16. டி.என்.ஏ.வின் இரட்டைச்சுருள் திருகு அமைப்பை கண்டறிந்தவர் வாட்சன் மற்றும் கிரிக்.
 17. இரு சுழற்சிகளுக்கு இடையே 10 கார இணைகள் உள்ளன.
 18. டி.என்.ஏ.வின. விட்டம் 20 ஆங்ஸ்ட்ராம்.
 19. இரு சுழற்சிகளுக்கு இடைப்பட்ட தொலைவு 34 நானோ மீட்டர்.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Monday, 4 June 2018

பாண்டியர்கள்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
பாண்டியர்கள்
 1. பாண்டியர்களின் தலைநகரம் மதுரை. அவர்களின் துறைமுகம் கொற்கை.
 2. பாண்டியர்களின் சின்னம், மீன் கொடியாகும், வேம்புவை அடையாளப் பூவாக அணிவார்கள்.
 3. பாண்டிய அரசர்களின் தலைசிறந்தவன் நெடுஞ்செழியன்.
 4. முதல் தமிழ்ச் சங்கத்தை ஆதரித்த பாண்டிய மன்னர்கள் 89 பேர்.
 5. இடைச் சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 59 பேர்.
 6. கடைச்சங்கத்தை ஆதரித்த பாண்டியர்கள் 49 பேர்.
 7. தொல்காப்பியம், நிலந்திரு திருவிற்பாண்டியன் அவையில் அரங்கேறியது.
 8. நற்றிணைத் தொகுத்தவன் பன்னாடு தந்த பாண்டியன்.
 9. அகநாநூறைத் தொகுத்தவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.
 10. ‘உண்டாலம்ம இவ்வுலகம்’ பாடலை இயற்றியவன் கடலுள் மாய்ந்த பெருவழுதி.
 11. சேர, சோழர் மற்றும் ஐந்து சிற்றரசர்கள் கொண்ட கூட்டுப்படையை தோற்கடித்த பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்.
 12. மதுரைக்காஞ்சி, நெடுஞ்செழியன் மீது பாடப்பட்டது.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

TAMIL G.K | வினாவங்கி

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
வினாவங்கி

1. புறநானூற்றில் அதிக பாடல்களை பாடியவர் யார்?

2. ‘கரைந்த நிழல்கள்’ நாவலின் ஆசிரியர் யார்?

3. செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?

4. சிமெண்டு கண்டுபிடித்தவர் யார்?

5. உலக உணவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

6. தைராய்டு சுரப்பிகளின் சீரான செயல்பாட்டிற்கு முக்கியமானது எது?

7. ‘நெஞ்சுவிடு தூது’ இயற்றியவர் யார்?

8. விலங்குகளின் ரத்த வகைகள் எவை?

9. சிறுநீரகங்களின் மேல் முனையில் அமைந்துள்ள சுரப்பிகள் எவை?

10. சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவும் அமைப்பு எது?

11. ரட்சணிய யாத்திரிகம் யாரால் எழுதப்பட்டது ?

12. மொகல் கார்டன் எங்கு அமைந்துள்ளது?

13. எந்த திசுவின் மிதமிஞ்சிய வளர்ச்சியால் உடல் பருமன் ஏற்படுகிறது?

14. மதி, ஸ்ருதி, அவதி, மனபிராயயம் உள்ளிட்ட 5 அறிவுகள் பற்றி பேசும் சமயப் பிரிவு எது?

15. ‘படுகொலைகளுக்கு இடையே’ என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?

விடைகள் :

1. அவ்வயைார், 2. அசோகமித்திரன், 3. ஜெனீவா, 4. ஜோசப் ஆஸ்பிடின், 5. அக்டோபர் 16, 6. அயோடின், 7. உமாபதி சிவம், 8. கே,எல்,எம்,என்., 9. அட்ரினல், 10. இன்டர்போல், 11. எச்.எ.கிருஷ்ணபிள்ளை, 12. புதுடெல்லி, 13. அடிப்போஸ் திசு, 14. சமணம், 15. அரவிந்த் அடிகா.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

யூனிவர்ஸ் எனப்படும் பேரண்டத்தில் பல உடுமண்டலங்கள் (கேலக்ஸி)

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
யூனிவர்ஸ் எனப்படும் பேரண்டத்தில் பல உடுமண்டலங்கள் (கேலக்ஸி) உள்ளன.
 1. பூமியே பேரண்டத்தின் மையம் என்று கூறியவர் தாலமி
 2. சூரியனே பேரண்டத்தின் மையம் என்றவர் கோபர்நிக்கஸ்.
 3. சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தவர் கோபர் நிக்கஸ்.
 4. பேரண்டத்தின் மையம் சூரியனல்ல. அது சூரிய குடும்பத்தின் மையமே என்றவர் கெப்ளர்.
 5. சூரிய குடும்பத்தை தாண்டி பல உடுமண்டலங்கள் உண்டு என்றவர் ஹர்சல்.
 6. நம் வாழும் உடுமண்டலம் பால்வீதி எனும் ஆகாயகங்கை.
 7. பால்வீதியானது நூறு பில்லியன் நட்சத்திரங்கள் கொண்ட சுருள் வடிவ உடுமண்டலம்.
 8. பால் வீதிக்கு அப்பால் உடு மண்டலங்கள் விலகிச் செல்வதை விளக்கியவர் அட்வுன் ஹப்பல்.
 9. பெருவெடிப்பு கொள்கைப்படி பேரண்டம் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
 10. சமீபத்திய ஆய்வுகள் பல பேரண்டங்கள் இருக்கலாம் என்ற கருதுகோளை முன் வைத்துள்ளன.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

இந்தியர்களின் ஆங்கில படைப்புகள்

KALVISOLAI - கல்விச்சோலை - kalvisolai latest news -
பிரபலமான இந்திய எழுத்தாளர்கள், தலைவர்கள் எழுதிய ஆங்கில நூல்களை அறிவோம்...
 1. கிளிம்சஸ் ஆப் வேர்ல்டு ஹிஸ்ட்ரி - ஜவஹர்லால் நேரு
 2. எ பஞ்ச் ஆப் ஓல்டு லெட்டர்ஸ் - ஜவஹர்லால் நேரு
 3. கீதாஞ்சலி - ரவீந்திரநாத் தாகூர்
 4. கோல்டன் தெரஸ்கோல்டு - சரோஜினி நாயுடு
 5. லைப் டிவைன் - அரவிந்த் கோஷ்
 6. எ பாஸேஜ் டூ இங்கிலாந்து - நிராத் சி.சவுத்திரி
 7. கந்தபுரா - ராஜாராவ்
 8. புரோக்கன் விங் -சரோஜினி நாயுடு
 9. கைடு - ஆர்.கே.நாராயணன்
 10. வெயிட்டிங் பார் த மகாத்மா - ஆர்.கே.நாராயணன்
 11. அன்டச்சபிள் - முல்க்ராஜ் ஆனந்த்
 12. எ டிரெயின் டூ பாகிஸ்தான் - குஷ்வந்த்சிங்
 13. த சாத்தானிக் வெர்சஸ் - சல்மான் ருஷ்டி
 14. மிட்நைட் சில்ட்ரன் - சல்மான் ருஷ்டி
 15. ஷோ பிஸினஸ் - சஷிதருர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

Saturday, 2 June 2018

கடந்து வந்த பாதை | மே 19 - 25 / 2018

கடந்து வந்த பாதை | மே 19 - 25


 1. நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கடந்தபிறகும் இதுவரை மின்சார வசதி பெறாத 4 கோடி வீடுகளுக்கு ஒரு ஆண்டுக்குள் மின் வசதி ஏற்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். (மே 19)
 2. காங்கிரஸ் அணி எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததால், நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னதாகவே எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதனால் கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி 3 நாளில் முடிவுக்கு வந்தது. (மே 19)
 3. கியூபா நாட்டில் நடந்த விமான விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். (மே 19)
 4. நடப்பு ஆண்டு ஜனவரி-மார்ச் காலாண்டில் 20 வங்கிகளின் வாராக்கடன் 8.32 சதவீதமாக அதிகரித்தது. இந்த வங்கிகளில் 11 தனியார் வங்கிகளும், 9 பொதுத்துறை வங்கிகளும் அடங்கும். (மே 19)
 5. பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 6-வது இடம் :
 6. மொரீஷியஸ் நாட்டில் தலைமை அலுவகத்தைக் கொண்டு செயல்பட்டுவரும் அப்ரேஷியா பேங்க் தனது ஆய்வறிக்கை ஒன்றில் பணக்கார நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா 6-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. (மே 20)
 7. ஒலியைவிட வேகமாகச் செல்லும் பிரமோஸ் ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம் பாலசோரில் வெற்றிகரமாக நடந்தது. (மே 21)
 8. இந்த நிதியாண்டில் (2018-2019) நடப்புக்கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக அதிகரிக்கும் என ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வே இதற்குக் காரணம் என அதில் தெரிவிக்கப்பட்டது. (மே 21)
 9. கேரளாவில் வேகமாகப் பரவிய ‘நிபா’ வைரஸ் காய்ச்சலில் 10 பேர் உயிரிழந்தனர். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட மத்தியக்குழு விரைந்தது. (மே 21)
 10. ரஷியாவின் சோச்சியில் அந்நாட்டு அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாட்டு உறவில் ஏற்பட்ட வளர்ச்சி மிகப் பெரிய சாதனை என்று மோடி புகழாரம் சூட்டினார். (மே 21)
 11. காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை பலியானது. போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் காயமடைந்தனர். (மே 21)
 12. வெனிசூலா நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். குறைந்த சதவீதமே வாக்குகள் பதிவானதால் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. (மே 21)
 13. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலவரம் வெடித்ததால் தூத்துக்குடி நகரம் போர்க்களம் ஆனது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியானார்கள். இதுபற்றி நீதி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. (மே 22)
 14. துருக்கி நாட்டில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் 104 பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து அந்த நாட்டு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. (மே 22)
 15. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பையில் நடந்த பரபரப்பான முதலாவது தகுதிச்சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. (மே 22)
 16. தூத்துக்குடியில் 2-வது நாளாக கலவரம் நீடித்தது. பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது. (மே 23)
 17. இ-விசா வசதியின் கீழ் வருகைதந்த வெளிநாட்டுப் பயணிகள் வாயிலாக மத்திய அரசுக்கு இதுவரை ரூ. 1400 கோடி வருவாய் கிடைத்துள்ளது. (மே 23)
 18. வரலாறு காணாத உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாயைத் தாண்டியது. டீசல் ரூ. 72.14-க்கு விற்பனை செய்யப்பட்டது. (மே 23)
 19. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்ஆப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் திடீரென அறிவித்தார். (மே 23)
 20. கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்)-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலர்ந்தது. மாநிலத்தின் 24-வது முதல்-மந்திரியாக குமாரசாமி பதவியேற்றார். (மே 23)
 21. தமிழ்நாடு, புதுச்சேரியில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களைவிட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றனர். (மே 23)
 22. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் மின்சார இணைப்பைத் துண்டிக்கவும், அந்த ஆலையை மூடவும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. (மே 24)
 23. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக ரத்து செய்துவிட்டார். (மே 24)
 24. மேற்கு வங்காள மாநிலம் சாந்திநிகேதனில் நடைபெற்ற விஸ்வ பாரதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ‘கல்வித்துறையை மேம்படுத்த ரூ. 1 லட்சம் கோடியை செலவிடுவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என்றார். (மே 25)
 25. தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அடுத்தடுத்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, சில அதிரடி உத்தரவு களைப் பிறப்பித்தது. சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. (மே 25)
 26. கர்நாடக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றது. முன்னதாக சட்டசபையில் இருந்து பாரதீய ஜனதா வெளிநடப்புச் செய்தது. (மே 25)
 27. கிம்முடனான சிங்கப்பூர் சந்திப்பை டிரம்ப் ரத்து செய்தது மிகவும் வருந்தத்தக்கது, அமெரிக்காவுடன் எப்போதும் பேசத் தயார் என வடகொரியா அறிவித்தது. (மே 25)

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | READ MORE | CLICK HERE

printfriendly

Print Friendly and PDF