Monday 28 May 2018

ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள்


  • ஆல்பா கதிர்களை கண்டறிந்தவர் ஹென்றி பெக்கோரல்.
  • பீட்டா கதிர்களைக் கண்டறிந்தவர் எர்னஸ்ட் ரூதர்போர்டு.
  • காமா கதிர்களைக் கண்டறிந்தவர் பியூரி கியூரி.
  • கதிரியக்கத்தின்போது ஆல்பா, பீட்டா, காமா கதிர்கள் வெளியாகின்றன.
  • ஆல்பா கதிர்கள் சிங் சல்பைடு, பிளாட்டினோ சயனைடு போன்ற வேதிப்பொருட்களை ஒளிரச் செய்கின்றன.
  • ஆல்பா கதிர்கள், ஹீலியம் அணுவின் உட்கருவை ஒத்தவை.
  • பீட்டா கதிர்கள் எலக்ட்ரானை ஒத்தவை.
  • எந்த ஒரு கதிரியக்கப் பொருளும் ஆல்பா, பீட்டா கதிர்களை ஒரே சமயத்தில் உமிழ்வதில்லை.
  • சில கதிரியக்கப் பொருட்கள் ஆல்பா கதிர்களையும் வேறு சில பொருட்கள் பீட்டா கதிர்களையும் உமிழ்கின்றன.
  • ஆல்பா கதிர், பீட்டா அல்லது காமா கதிரோடு சேர்த்து உமிழப்படுகிறது.
  • ஆல்பா மற்றும் பீட்டா கதிர்கள் காந்த மற்றும் மின்புலங்களில் விலக்கப்படுகின்றன.
  • காமா கதிர் காந்த மின்புலங்களில் விலக்கமடைவதில்லை.
  • ஆல்பா கதிர்கள் நேர்மின் சுமையுடனும் பீட்டா கதிர்கள் எதிர்மின் சுமையுடனும் காமா கதிர்கள் மின் சுமையற்றும் காணப்படுகின்றன.
  • காமா கதிர்கள் மிக அதிக ஊடுருவும் தன்மை கொண்டவை.
  • ஆல்பா கதிர்கள் அதிக அயனியாக்கும் திறன் கொண்டவை.
  • ஆல்பா, பீட்டா கதிர்கள் செயற்கை கதிரியக்கத்தை தூண்ட வல்லவை.
  • ஆல்பா கதிர்கள் புரோட்டானைப்போல் 2 மடங்கு நேர்மின் சுமையும், 4 மடங்கு அடர்த்தியையும் கொண்டவை.

No comments: