Monday 29 January 2018

இந்திய தேசிய இயக்கம் - மிதவாதிகள் காலம்

* இந்திய தேசிய இயக்கம் 3 கட்டங்களைக் கொண்டது. அவை மிதவாதிகள் காலம், வீரத்தை நம்பியவர்கள் காலம், காந்திசகாப்தம் என அழைக்கப்படுகின்றன.
* மிதவாதிகள் காலம் 1885 முதல் 1905 வரை என்று வரையறை செய்யப்படுகிறது.
* 1885-ல் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை மும்மபயில் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம். இவர் ஓய்வு பெற்ற ஐ.சி.எஸ். அதிகாரி.
* இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர பானர்ஜி.
* இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டம் மும்பையில் 1885-ல் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 72 பேர், 'பிரேவ் 72' என அழைக்கப்பட்டனர்.
* காங்கிரஸ் இயக்கத்தின் இரண்டாம் மாநாடு 1886-ல் கொல்கத்தாவில் நடைபெற்றது.
* மிதவாதிகளின் தலைவர் கோபாலகிருஷ்ணகோகலே.
* மகாத்மா காந்தியின் அரசியல் குரு கோகலே.
* கோகலே இந்திய ஊழியர் சங்கத்தை நிறுவினார்.
* 1887-ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாம் காங்கிரஸ் கூட்டத்தின் தலைவர் பத்ருதீன் தியாப்ஜி.
* காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் பதவி வகித்த முதல் ஆங்கிலேயர் ஜார்ஜ் யூல் (1904).
* Badruddin Thiyapaji, Chairman of Third Congress Meeting in Chennai in 1887 * George Yule (1904), the first Englishman to hold the presidency of Congress congress.

No comments: