Friday 12 January 2018

இன்று ஜனவரி 12

உலக வரலாற்றில் இன்றைய தேதியில் (ஜனவரி 12) நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை அறிவோம்...

* ஸ்வீடனின் தேசியத் தந்தை என போற்றப்படும் முதலாம் கஸ்டவ் மன்னன் 1528-ம் ஆண்டு இதே நாளில்தான் முடிசூடிக் கொண்டார். அவர் 37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தார்.

* 1554-ல் பர்மாவின் அரசராக பாயின்னாங் முடிசூடினாார். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய தேசமாக தனது எல்லைப் பகுதிகளை விரித்து அரசாட்சி செய்தவர் இவர்.

* 1872-ல் எத்தியோபியாவின் சர்வாதிகார மன்னராக நான்காம் யோகான்னி முடிசூடினார்.

* 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியடிகள் தனது கடைசி உண்ணாவிரதப் போராட்டத்தை கடைப்பிடித்தார்.

* 1970-ம் ஆண்டு நைஜீரிய உள்நாட்டுப் போர் முடிவடைந்தது. பியாபிரா மாகாண கிளர்ச்சியாளர்கள் சரணடைந்தார்கள்.

* 2010-ம் ஆண்டு ஹைதி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகரம் சின்னாபின்னமானதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மரணம் அடைந்தார்கள்.

* உலகின் புகழ்பெற்ற டி.வி. காமெடி தொடரான 'ஆல் இன் த பேமிலி' தொடர் அமெரிக்காவின் சி.பி.எஸ். தொலைக்காட்சியில் 1971-ம் ஆண்டு இதே நாளில்தான் தொடங்கியது.
TAG:The world's famous TV Comedy series 'All in the Family' series of US CBS. The television started on the same day in 1971.

No comments: