Friday 22 December 2017

கருப்பொருள்கள்


I . குறிஞ்சியின் கருப்பொருள்கள்
01. தெய்வம்  -   முருகக் கடவுள் (சேயோன்)
02. உணவு   -   மலைநெல், மூங்கில் அரிசி, தினை.
03. விலங்கு  -    யானை, புலி, பன்றி, கரடிஃசிங்கம்.
04. மரம்     -    சந்தனம், தேக்கு, அகில், அசோகு, நாகம், மூங்கில்.
05. புள்     -    மயில், கிளி.
06. பறை    -    வெறியாட்டுப் பறை, தொண்டகப் பறை.
07. தொழில்  -    வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினை காத்தல், தேன்
               எடுத்தல், கிழங்கு கிண்டி எடுத்தல், சுனை நீராடல்.
08. பண்    -     குறிஞ்சிப் பண்.
09. பூ      -    வேங்கை, குறிஞ்சி, காந்தள், சுனைக்குவளை.
10. நீர்     -     அருவி நீர், சுனை நீர்.
11. உயர்ந்தோர் -  பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி.
12. தாழ்ந்தோர்  -  குறவர், கானவர், குறத்தியர், வேட்டுவர், குன்றுவர்.
13. ஊர்      -   சிறுகுடி, குறிஞ்சி.
14. யாழ்     -   குறிஞ்சி யாழ்.
இதிற் கூறப்பட்டுள்ள குறிஞ்சியின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்புறச் செய்வதற்காக நாற்பத்தேழு (47) வகையான சிறப்புற்ற பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ளதையும் காண்கின்றோம்.
II. முல்லையின் கருப்பொருள்கள்
01. தெய்வம்   -  மாயோன் (திருமால்)
02. உணவு    -  வருகு, சாமை, முதிரை
03. விலங்கு    -  மான், முயல்.
04. மரம்      -  கொன்றை, காயா, குருந்தம்.
05. புள்      -   காட்டுக் கோழி, சிவல்.
06. பறை     -   ஏறங்கோட் பறைஃ ஏறுகோட் பறை.
07. தொழில்   -   சாமை, வரகு விதைத்தல், கடலாடுதல், நிரை மேய்த்தல்,
                   கூத்தாடல், கடா விடுதல், கொன்றைக் குழலூதல்.
08. பண்     -    சாதாரி.
09. பூ      -     குல்லைப் பூ, முல்லைப் பூ, தோன்றிப் பூ, பிடவம் பூ.
10. நீர்     -       குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர்.
11. உயர்ந்தோர் -  குறும்பொறை நாடன், கிழத்தி, தோன்றல் மனைவி.
12. தாழ்ந்தோர்  -  இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், கோவலர், பொதுவர்.
13. ஊர்      -   பாடி, சேரி, பள்ளி.
14. யாழ்     -   முல்லை யாழ்.
முல்லையிற் கூறப்பட்டுள்ள பதினான்கு (14) கருப்பொருள்களைச் சார்ந்த மேலும் நாற்பது (40) வகையான சிறப்பான பொருள்கள் காட்டப்பட்டுள்ள சிறப்பினையும் காண்கின்றோம்.
III.  பாலையின் கருப்பொருள்கள்
01. தெய்வம்  -   கொற்றவை.
02. உணவு   -   வழியிற் பறித்த பொருள், பதியிற் கவர்ந்த பொருள்.
03. விலங்கு  -    வலியிழந்த யானை, புலி, செந்நாய்.
04. மரம்     -    உமிஞை, பாலை, ஓமை, இருப்பை.
05. புள்     -    புறா, பருந்து, எருவை, கழுகு.
06. பறை    -    ஆறலைப் பறை, சூறைகோட் பறை.
07. தொழில்  -    போர் செய்தல், பகற் சூறையாடல்.
08. பண்.    -    பாலைப் பண், பஞ்சுரம்.
09. பூ      -    குரா அம்பூ, மரா அம்பூ, பாதிரிப் பூ.
10. நீர்     -     நீரில்லாக் குழி, நீரில்லாக் கிணறு, அறுநீர்க் கூவலும் சுனையும்.
11. உயர்ந்தோர் -  விடலை, காளை, மீளி, எயிற்றியர்.
12. தாழ்ந்தோர்  -  எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்.
13. ஊர்       -  குறும்பு, பறந்தலை.
14. யாழ்      -   பாலை யாழ்.
பாலையிற் கூறப்பட்டுள்ள பதினான்கு (14) கருப்பொருள்களையும் மேலும் சிறப்புறச் செய்வதற்காக முப்பத்தெட்டு (38) வகையான பொருள்கள் காட்டப்பட்டுள்ள செய்தியையும் காண்கின்றோம்.
IV.   மருதத்தின் கருப்பொருள்கள்
01. தெய்வம்   -  இந்திரன்.
02. உணவு    -  நெல்.
03. விலங்கு   -   எருமை, நீர்நாய்.
04. மரம்     -   காஞ்சி, வஞ்சி, மருதம்.
05. புள்     -   அன்னம், அன்றில், வண்டானம், மகன்றில், நாரை, கம்புள், தாரா.
06. பறை    -   நெல்லரி பறை, மணமுழவு.
07. தொழில்  -  உழவு, விழாச் செய்தல், நீராடல், நெல் அரிதல், குளம் குடைதல்.
08. பண்    -    மருதப் பண்.
09. பூ      -   தாமரைப் பூ, கழுநீர்ப் பூ.
10. நீர்     -    ஆற்று நீர், பொய்கை நீர், கிணற்று நீர்.
11. உயர்ந்தோர் -  ஊரான், மகிழ்நன், கிழத்தி, மனைவி.
12. தாழ்ந்தோர்  -  உழவர், உழத்தியர், கடையர், கடைசியர், களமர்.
13. ஊர்      -   பேரூர், மூதூர்.
14. யாழ்     -   மருத யாழ்.
இதிற் காட்டிய முருதத்தின் பதினான்கு (14) கருப்பொருள்களை மேலும் சிறப்பிப்பதற்காக முப்பத்தொன்பது (39) வகையான சிறந்த பொருள்கள் எடுத்தாளப்பட்டுள்ள செய்தி படிப்போர் மனதில் ஆழப் பதிந்து விடும்.
V  நெய்தலின் கருப்பொருள்கள்
01. தெய்வம்  -  வருணன்.
02. உணவு   -  மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருட்கள்.
03. விலங்கு  -   சுறா மீன், கரா மீன்.
04. மரம்     -  கண்டல், புன்னை, ஞாழல்.
05. புள்     -   கடற்காகம், அன்னம், அன்றில்.
06. பறை    -   நாவாய்ப் பறை.
07. தொழில்  -   மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், கடலாடுதல்.
08. பண்     -  செவ்வழிப் பண்.
09. பூ       -  நெய்தல் பூ, தாழம் பூ, மூண்டகப் பூ, அடம்பம் பூ;
10. நீர்      -   உவர்நீர்க் கேணி, கவர்நீர் (மணற் கிணற்று நீர்)
11. உயர்ந்தோர் - சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி.
12. தாழ்ந்தோர்  - நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்.
13. ஊர்       - பாக்கம், பட்டினம்.
14. யாழ்      -  விளரி யாழ்.
நெய்தலிற் கூறப்பட்டுள்ள சிறந்த பதினான்கு (14) கருப்பொருள்களுடன் மேலும் காட்டப்பட்டுள்ள முப்பத்தைந்து (35) வகையான சீர்பெற்ற பொருள்கள் சேர்ந்துள்ளமை நெய்தலின் சிறப்பனை மேம்படுத்துகின்றது.