இரு பெயரிடுதல் முறை

உலகம் முழுவதுமுள்ள மக்கள் குழப்பமின்றி புரிந்து கொள்ள வசதியாக தாவரங்கள் மற்றும் விலங்குகளை இரு சொல்லால் ஆன ஒரே அறிவியல் பெயரால் அழைக்கும் முறை ‘பைனோமினல் நாமன்களாச்சர்’ எனப்படுகிறது. இந்த முறையை அறிவியல் பூர்வமாக முதலில் உருவாக்கியவர் ஸ்வீடன் நாட்டு தாவரவியல் வல்லுனரான கரோலஸ் லின்னேயஸ். இவரே இரு சொல் பெயர் முறையின் தந்தை எனப்படுகிறார். இருசொல் பெயர்களில் முதலில் பேரினப் பெயரும், இரண்டாவது சொல்லாக சிற்றினப் பெயரும் இடம் பெறும். பேரினத்தின் முதல் எழுத்து ஆங்கிலத்தின் பெரிய எழுத்திலும், சிற்றினத்தின் முதல் எழுத்து சிறிய எழுத்திலும் எழுதப்படும். இருசொல் பெயரிடுதல் முறையில் மனிதனை குறிக்கும் பெயர் ஹோமோ செப்பியன் என்பதாகும். இதன் பொருள் புத்திசாலி மனிதன் எனப்படும். இதில் ஹோமோ என்பது மனிதனின் பேரினப் பெயராகும். இதற்கு முந்தைய மனித இனம் ஹோமோ எரக்ட்டஸ் எனப்படுகிறது. இதற்கு நிமிர்ந்து நின்றவன் என்பது பொருளாகும். லின்னேயசுக்கு முன்னரே கஸ்பர்டு பாஹின் என்பவர் இந்த முறையை அறிமுகம் செய்துவிட்டதாக சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாஹின் பின் பற்றிய முறை அறிவியல் பூர்வமானதல்ல என்கிறார்கள் பலர்.
Tag: Homo is the man's name. The earliest human race is known as Homo erectus. It means the one who stands upright. Some researchers have suggested that Kaspert Bahin had introduced this method before Lennys. There are many who say that the method of Bahin is not scientific.

Comments